இந்த வாரம் என்ட் கார்ட் போட்ட பிக் பாஸ்...கடைசியில் மாட்டியது இவர்தானா??!!
சென்னை: இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார் என்ற செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
இத்தனை முறை கடைசி விளம்பில் வந்தாலும் ஜெயித்த நபரை இப்படி தூக்கி விட்டீர்களே என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
டாஸ்க்குகளில் வெறித்தனமாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்தாலும் கடைசி நேரத்தில் இப்படியா நடக்கணும் என்று ரசிகர்கள் சலிப்பு கொட்டி வருகிறார்கள்.

ரசிகர்களின் மனவருத்தம்
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பல நேரங்களில் விறுவிறுப்பும் சில நேரங்களில் அதிருப்தி ஏற்பட்டு விடுகிறது என்று ரசிகர்களுக்கு பொதுவான ஒரு கருத்து இருந்து வருகிறது. அந்த மாதிரி தான் தற்போதைய வாரம் இருந்து வருகிறது என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். என்ன தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஓட்டு போட்டு எலிமினேஷன் ஆகும் போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இருந்தாலும், ரசிகர்களின் வாக்கு எண்ணிக்கை படி எலிமினேஷன் நடைபெறவில்லை என்று ரசிகர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்
கடந்த வாரத்தில் அபிநய் வெளியே செல்வார் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர் பாதுகாக்கப்பட்டு அவருக்கு பதிலாக இமான் அண்ணாச்சி வெளியேற்றம் ஆகிவிட்டார். இது ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. ஆனால் அடுத்த வாரத்தில் அபிநய் விளையாட்டு வெறித்தனமாக இருந்தது. எலிமினேஷனுக்கான போட்டிகளில் ஒவ்வொன்றிலும் தன்னுடைய முழு திறமையை காட்டி கொண்டிருந்தார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால் இந்த வாரம் அவர் பாதுகாக்கப் படுவார் என்று நம்பியிருந்த நேரத்தில் தற்போது இந்த வாரத்தில் அபிநய் வெளியற்றப்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
கடந்த வாரம் வரைக்கும் பாவனி மற்றும் அபிநய் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடில் யார் மீது தவறு என்று ரசிகர்கள் பேசி வந்தனர். ஆனால் இவர்களைப் பற்றி இனி யாரும் பேசக்கூடாது என்று சொல்லிய பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகமாக யாரும் இவர்களை கண்டுகொள்வதில்லை. அதனால் இந்த வாரம் வெளியேற்றி விடலாம் என்று பிக்பாஸ் நினைத்துவிட்டார் போல என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்
பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் முதல் வாரத்தில் தொடங்கி தற்போதைய வாரம் வரைக்கும் தொடர்ந்து நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவராக அபிநய் இருந்து வருகிறார். ஒவ்வொரு முறையும் இவர் காப்பாற்ற பெற்று மீண்டும் தன்னுடைய விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தாலும், இந்த முறை நன்றாக விளையாடிய பிறகும் வெளியேற்றப்படுவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications