கழுத்தில் மாலை...பலியாகப் போவது யார்?? முதல் ப்ரமோவால் பதற்றம்
சென்னை: இந்த வார எலிமினேஷனுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கும் போட்டிகள் தொடங்கிவிட்டது.
கழுத்தில் மாலை போட்டு யார் தலையை வெட்ட போகிறார்கள் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

நேரடி எலிமினேஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் இந்த எலிமினேஷனுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்கள் யாரென்று நாமினேஷன் செய்யப்படுகிறது. இதில் போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றி கொள்வதற்காக எடுக்கும் முயற்சிகள் மற்றும் அடுத்தவர்களை பழிவாங்குவதற்காக எடுக்கும் படலங்கள் அனைத்துமே இன்றைய எபிசோட்டில் காரசாரமாக இருந்துவருகிறது.

வழக்கம்போல வாயால் வடை சுடும் டாஸ்க்
போன வாரம் முழுக்க நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டிக்கான டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது போல இந்த வாரம் நேரடியாக எலிமினேஷனுக்கு செல்லும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் போட்டி தொடங்கி விட்டது. இதில் யாருக்கு அதிகமாக ஓட்டு இருக்க போகிறது என்று ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆளாளுக்கு தங்களுக்கு டப் கொடுக்கும் போட்டியாளர்களை வெளியேற்றுவதில் குறியாக செயல்பட்டு வருகிறார்கள். இதில் அதிகமாக மாலை போடப்பட்டு வெளியேற்றப்படுவது யாராக இருக்கும் என்று தான் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காரசாரமான வாக்குவாதம்
வழக்கம்போல சிபி மற்றும் நிரூப் சண்டை காரசாரமாக தொடங்கி இருக்கிறது. நீ விளையாட்டை சரியாக விளையாடவில்லை என்று ஒருவரும், விளையாடுவதற்கு தகுதி உனக்கு இல்லை என்று மற்றொருவரும் மாற்றி மாற்றி குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் இந்தப் பக்கம் இப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் நாங்கள் அடுத்த பக்கமாக வேற மாதிரி சண்டை போடுகிறோம் என்று ராஜுவும் பாவனியும் வழக்கம் போல மாற்றி மாற்றி நாமினேஷன் செய்து வருகிறார்கள். பாவனி, ராஜூவுக்கு மாலையைப் போட்டு நேரடியாக நாமினேஷன் செய்ததும், ராஜு நீ நேற்று இரவு ஒன்று பேசுகிறாய் இன்று ஒன்று செய்கிறாய் என்று தன்னுடைய ஆர்குமெண்ட்டை தொடங்கி இருக்கிறார்.

ரசிகர்களின் கருத்து
அதுமட்டுமல்லாமல் ராஜுவை அமீர் நாமினேஷன் செய்துள்ளார். அவருக்கு கழுத்தில் மாலையை போட்டு கட்டி பிடித்த அமீரை பார்த்து பலர் கலாய்த்து வருகின்றனர். இதுதான் மாலையை போட்டு கழுத்தை அறுப்பதா என்று பல நெட்டிசன்கள் குறும்பாக கலாய்த்து வருகின்றனர். ஒரு பக்கமாக இவர்கள் செய்வது விளையாட்டு ஆக இருந்தாலும் இதில் பல சூழ்ச்சிகள் இருக்கிறது என்று பலர் தங்களுடைய ஆணித்தரமாக கருத்தை கூறிவருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications