நேரடியாக இறுதி வாரத்திற்கு செல்லும் இரண்டாவது போட்டியாளர்... பிக் பாஸ் வைத்த புது ட்விஸ்ட்
சென்னை: நேரடியாக இரண்டாவது இறுதி வாரத்திற்கு செல்லும் இரண்டாவது போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க பிக்பாஸ் புதுவிதமான டாஸ்க் வைத்துள்ளது.
யார் நேரிடையாக பாதுகாக்கப்படுகிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

மீதம் இருக்கும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேறி கொண்டிருந்தாலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கின்றனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி அதற்கு பிறகு இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அறிமுகமாகி இருந்தாலும், நேற்றைய எபிசோடில் கூட சிபி திடீரென்று பணப் பெட்டியோடு டாட்டா காண்பித்து கிளம்பிவிட்டார். இந்த வாரத்தில் ஏழு போட்டியாளர்களில் எப்படியும் இரண்டு பேர் வெளியேறி விடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று சிபி கிளம்பியதும் இன்று ஆறு போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கின்றனர்.

நிரூப்பின் செயல்பாடு
ஏற்கனவே கடந்த வாரம் அமீர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் முதல் போட்டியாளராக பாதுகாக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது போட்டி யார் என்று புது டாஸ்க் வைத்துள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களில் நிஜமுகத்தை கண்டுபிடித்து அவர்களை சக போட்டியாளர்கள் ஒருமனதாக அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் எப்போதும் முந்திக் கொண்டு இருக்கும் நிரூப் இதிலும் எப்படியாவது கலந்து கொண்டு தான் இரண்டாவது போட்டியாளராக பாதுகாக்கப்பட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.

தில் இருந்தா ஹலோ சொல்லு
ஆரம்பத்திலிருந்து ராஜு தான் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவரை சக போட்டியாளர்களுக்கு பிடித்து அவர் அனுப்பி வைக்கப்படுவாரா என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தில் இருந்தா ஹலோ சொல்லு எனும் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. டேர் டாஸ்க்கில் கடைசி டாஸ்க் பிக் பாஸ் கொடுத்துள்ளது. போனை எடுத்த தாமரைச்செல்வி புரிந்து கொண்டாரா?? என்று தெரியாவிட்டாலும் ஒருவழியாக எதையோ சாதித்த வெறி அவருடைய முகத்தில் தெரிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இரண்டாவதாக பாதுகாக்கப்படும் நபர்
உலகத்தோட பார்வையில் தன்னுடைய முகத்தை வெற்றிகரமாக மறைத்திருக்கிறார். ஆனால் அவருடைய உண்மையான முகத்தை கண்டுபிடித்து விட்டோம் அதை துடைத்து அனுப்புகிறோம் என்று அனுப்ப வேண்டும், என பிக்பாஸ் டாஸ்க் கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்ததும் எப்போதும் போல பிரியங்கா நாட்டி பிலோ என்று கலாய்த்துக் கொண்டு இருக்கிறார். அடுத்ததாக ராஜு நேரடியாக வந்து உங்களுக்கு என் மேல எவ்வளவோ வருத்தங்கள் இருக்கலாம் அதை நேரடியாக சொல்லிவிடுங்கள் என்று வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் எப்படியும் ராஜுவை அனுப்பி வைக்க மாட்டார்கள். தாமரையை தான் கடைசியாக இரண்டாவது இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்று கூறி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications