ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நிரூப்...ஓ...இதுதான் காரணமா??
சென்னை: இன்றைய ப்ரமோவில் நிரூப் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நிரூப் செய்த திடீர் செயல் ரசிகர்களை மட்டுமல்லாமல் நெட்டிசன்களையும் யோசிக்க வைத்துள்ளது.

நிரூப் செய்த திடீர் செயல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைய இந்த ஒரு வாரமே இருக்கும் நிலையில் இதில் போட்டியாளராக அறிமுகமாகி தற்போது கடைசி வாரத்தில் இரண்டாவது போட்டியாளராக சேவ் ஆகியிருக்கும் நிரூப் தன்னுடைய ரசிகர்களிடம் தன் மனக்குமுறலை கொட்டியிருக்கிறார். ஏற்கனவே பலமுறை தன்னை ரசிகர்கள் காப்பாற்றுவார்கள் என்று உறுதியாக கூறி வந்த நிலையில் தற்போது திடீரென்று ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இருப்பது ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.

உள்ளம் குழந்தை தானாம்
இந்த சீசனில் ஆரம்பத்தில் எந்த சீசனிலும் இல்லாத வகையில் அதிகமான போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். அதில் மாடலிங் ஃபீல்டை சேர்ந்தவரான நிரூப் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி இருந்தார். அவருடைய பிரம்மாண்டமான உருவத்தை பார்த்து ரசிகர்கள் பலர் ஆரம்பத்தில் மிரண்டு போய் இருந்தனர். உருவம் மட்டும் தான் பெரியதாக இருக்கிறதே தவிர உள்ளம் குழந்தை போல இருக்கிறது என்று போகப்போக போட்டியாளர்களும், ரசிகர்களும் புரிந்து கொண்டனர்.

நிரூபுக்கு பிடித்த போட்டியாளர்
பிரியங்கா தான் இந்த வீட்டிற்குள் அதிகமாக நிரூபுக்கு பிடித்த போட்டியாளர். அது மட்டுமல்லாமல் தோழியாகவும் இருந்து வந்தார். ஆனால் டாஸ்க் என்று வந்துவிட்டால் இவர்கள் இருவரும் செய்யும் அலப்பரைகள் அளவுக்கு அதிகமாக இருந்து வந்தது. சண்டையில் இருவரும் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்வது புதியது அல்ல. ஒவ்வொரு டாஸ்க்கிலும் இது நடந்து வந்தாலும், டாஸ்க் முடிந்ததும் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து கொள்வது பார்க்கும்போது ஒரு சில நேரங்களில் நன்றாக இருந்தாலும் பல நேரங்களில் கடுப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வந்தனர். அதனால்தான் நேற்றைய எபிசோடில் கூட கமல் முன்னிலையில் பல நேரங்களில் நான் பிரியங்காவை காயப்படுத்தி இருக்கிறேன், ஆனால் எனக்கு ரொம்ப பிடித்தது பிரியங்கா தான் என்று அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Recommended Video

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நிரூப்
இந்த நிலையில் பல டாஸ்க்குகளில் நிரூப் இருந்தால் எங்களால் ஃபிசிகல் ஆக விளையாட முடியாது என்று போட்டியாளர்கள் பலர் நிரூப்பை ஒதுக்கிக் கொண்டு இருந்தனர். ஆனால் கடைசியாக இவர் இரண்டாவது போட்டியாளராக இந்த டாஸ்க்கில் பாதுகாக்கப்பட்டதும் அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வாரம் டைட்டிலை ஜெயிக்கப்போவது யார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியிருக்கும் நேரத்தில், தனக்கு ஓட்டளிக்க வேண்டி போட்டியாளர்கள் ரசிகர்களிடம் பிரச்சாரங்களை தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் தான், ஏதோ ஒரு இடத்தில் மக்களை ஏமாற்றி விட்டோமோ என்று எனக்கு தோன்றுகிறது. அதனால் மக்கள் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும் என்று நிரூப் பேசியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு ஆதரவாக கமெண்ட்டுகளை அளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு சில நெட்டிசன்கள் நிரூப் பேசுவது சத்தியமாக ஒன்றும் புரியவில்லை என்று குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications