உசுரே போனாலும் பரவாயில்லை! கானாவில் கஞ்சா, ரவுடினு பாட கூடாது.. அப்பவே ஆர்டர் போட்ட கானா வினோத்
சென்னை: சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்படும் விஷயம் என்றால் வட மாநில இளைஞரை தமிழ் நாட்டு சிறுவர்கள் தாக்கிய வீடியோ தான். இந்த வீடியோவை பார்த்து பலர் தூக்கத்தை தொலைத்ததாக புலம்பி வருகிறார்கள். ரத்தம் சொட்ட சொட்ட அந்த இளைஞர் பரிதாப பார்வை பார்த்தது பலருடைய மனதையும் உலுக்கியது. இது சம்பந்தமாக பிறை பிரபலங்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் தங்களுடைய ஆதங்கங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதிலும் அந்த வட மாநிலத்தவரை தாக்கிய சிறுவர்கள் அதற்கு முன்பே வெளியிட்ட ரிலீஸ் வீடியோக்கள் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அந்த வீடியோக்களில் கானா பாடல்களில் கஞ்சா, குடி, கொலை போன்ற வரிகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதை பார்க்கும்போது பலரும் கானா பாடல்களில் இது போன்ற மோசமான வரிகளை எல்லாம் பாடுவதால் தான் இளைஞர்கள் தவறான வழியில் போகிறார்கள் என்றும் கருத்து கூறி வருகிறார்கள்.

அதுபோல சினிமாவில் அதிகமான கொலை, கொள்ளையில் ஈடுபடுபவர்களை ஹீரோ போல காட்டுவதால் தான் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலர் இது போன்ற மோசமான வழிகளில் நடக்கிறார்கள் என்று அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பைனல் லிஸ்ட் களில் ஒருவராக இருக்கும் கானா வினோத் ஏற்கனவே பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கானா வினோத், கச்சேரி பாடும் போது உங்களை யாராவது கஞ்சா பாடல், ரவுடி பாடல் மற்றும் போதை பாடலை பாட சொன்னால் பாடாதீர்கள். உங்களை அடித்தால் கூட அடிவாங்கிக் கொள்ளுங்கள். என்னை அப்படி பாட சொன்ன போது நான் மைக்கை மேடையிலே வைத்துவிட்டு வந்துள்ளேன். எனவே எக்காரணம் கொண்டும் இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் பாட வேண்டாம்.
இதற்கு முன்பு பாடி இருந்தால் பரவாயில்லை. ஆனால் இனிவரும் காலங்களில் இது போன்ற பாடல்களை யாரும் பாடவே வேண்டாம். நாம் பாடவில்லை என்று சொன்னால் என்ன பண்ணுவார்கள்? மிஞ்சிப் போனால் அடிப்பார்கள்... உசுரே போனாலும் பரவாயில்லை, நாங்கள் இதுபோல பாட மாட்டோம் என்று தெளிவாக சொல்லி விடுங்கள்.
மேலும் இதுபோல பாட சொன்னால் எங்கள் சங்கத்தில் இருந்து போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்போம் என்று சொல்லிவிடுங்கள் என்றும் தெளிவாக சொல்லி இருக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போதைய சூழலில் கானா பாடகர்கள் மீதும், தலைக்கு கலர் கலராக டை அடித்துக் கொண்டு திரிபவர்கள் மீதும் பலருக்கும் ஒரு விதமான அச்ச உணர்வு ஏற்படுகிறது.
இப்படி தலைக்கு டை அடித்தாலோ அல்லது கானா பாடல் பாடி கொண்டு இருந்தாலும் இவர்கள் மோசமானவர்கள் என்பது போலவே சிலர் சித்தரித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் ஒரு சிலர் செய்யும் செயலுக்காக ஒட்டுமொத்தமாக இது போன்றவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று முத்திரை குத்த கூடாது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications