முத்தத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த அக்ஷரா....இது என்ன புது ட்விஸ்ட்???

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்த முத்தக்காட்சிக்கு அக்ஷரா ரெட்டி விளக்கம் கொடுத்துள்ளார்.

தன்னைப்பற்றி பரவி வந்த வீடியோக்கள் பற்றிய முதல் முறையாக அக்ஷரா ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுவரை இல்லாத செயல்

இதுவரை இல்லாத செயல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில எபிசோடுகள் வைரல் ஆகிவிடும். இதில் போட்டியாளர்கள் செய்யும் ஒரு சில தவறுகள் கூட ரசிகர்கள் முகம் சுளிக்கிற மாதிரி பல நேரங்களில் அமைந்திருக்கிறது. அந்த மாதிரிதான் தற்போது 5 வது சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் ஒன்று முத்தக்காட்சிகள். இதுவரைக்கும் எந்த எபிசோடுகளில் இப்படி ஒரு செயல் நடைபெற்றது இல்லை. லட்சக்கணக்கானோர் பார்க்கும் ரியாலிட்டி ஷோவில் இப்படி ஒரு செயல் ஒளிபரப்பலாமா என்று ரசிகர்கள் பலர் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

அக்ஷராவின் விளக்கம்

அக்ஷராவின் விளக்கம்

வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் காட்சிகள் இடம்பெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீசன் இதில் ஒருபடி மேலாக சென்று விட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்த காட்சிகள் பலருக்கும் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர்களைவிட நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று அக்ஷரா, வருணுக்கு முத்தம் கொடுத்தது பெரிய பிரச்சனையாக மீண்டும் உருவெடுத்தது. தற்போது அக்ஷரா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இதை எதிர்பார்க்கலையே

இதை எதிர்பார்க்கலையே

பிக் பாஸ் வீட்டிற்குள் பல கேமராக்கள் இருந்து வருகிறது. அதனால் யாரும் கீழ்த்தரமான செயல்களை செய்து விட முடியாது. தான் எப்போதும் காலையில் தனக்கு பிடித்தவர்களிடம் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கம் தான். அது அண்ணாச்சி, சின்னப்பொண்ணு, தாமரை என்று பலரும் இருக்கிறார்கள். அன்றும் அதுபோல தான் நான் குட் மார்னிங் சொல்லி வருண் தலையில் முத்தம் கொடுத்தேன். அதுவும் தலையில் அவர் ஸ்கர்ப் கட்டியிருந்தார். அதற்கு மேலே தான் முத்தம் கொடுத்தேன். ஆனால் அது இந்த அளவிற்கு வெளியே பேசப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

உண்மை இதுதானா

உண்மை இதுதானா

அதுமட்டுமல்லாமல் பாவனி மற்றும் அமீர் இவர்கள் இருவரும் நடந்து கொண்டது வெளியே வந்த பிறகு தான் தனக்கு தெரியும் என்றும், ஆனால் அது எந்த மாதிரி சூழ்நிலையில் அப்படி நடந்தது என்று தெரியவில்லை. பல நேரங்களில் உள்ளே நடப்பது ஒன்றாக இருப்பது வெளியே வேறுமாதிரி காட்டப்படுகிறது. அந்த மாதிரி கூட ஏதேனும் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார், இதனால் எதையும் தெளிவாக புரிந்து கொள்ளாமல் ரசிகர்கள் கருத்துக்களை பரப்பாமல் இருக்கலாம் என்று பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+