Bigg Boss: பிக் பாஸில் அதிரடியாக வெளியேற்றப்படும் பாரு! இதுதான் காரணமாம்! திவாகருக்கு நடந்ததுதான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவில் பாரு செய்த செயலை பார்த்து எல்லோரும் கடுப்பாகி இருப்பீர்கள். காரணம் அவர் அந்த அளவிற்கு கெட்ட வார்த்தை பேசி இருக்கிறார். இப்போது அவரை நாளை வெளியேற்ற போகிறார்களாம். இது குறித்து வெளியான தகவலை பார்ப்போம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து அதிகமான விமர்சனங்கள் தான் வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இது புதியது அல்ல, ஆனால் இந்த சீசனில் நடந்த சம்பவங்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையிலும், கோபப்படுத்தும் வகையிலும் தான் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரைக்கும் ஒவ்வொரு ப்ரோமோவில் நான் தான் வருவேன் என்று பார்வதி கங்கணம் கட்டிக்கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

அல்லது அவர் சார்பாக இன்னொருவரை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். தர்பூசணி திவாகரை வெளியேற்றிய போது பார்வதியையும் வெளியேற்றி இருந்தால் இந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும் என்று சிலர் கூறி வருகிறார்கள். ஐயோ பாரு போயிட்டா இந்த நிகழ்ச்சிக்கு கண்டன்ட் கிடைக்காது... அவங்கதானே என் உள்ளே ஏதோ விளையாடுறாங்க என்று சப்போர்ட்டுக்கு வரவங்களும் இருக்கிறாங்க. ஆனால் பார்வதி உடைய விளையாட்டு வித்தியாசமாக இருக்கிறது.
பார்வதியோடு சேர்ந்து யாரெல்லாம் விளையாடுகிறார்களோ அவர்கள் வெளியே வில்லனாக மாறி விடுகிறார்கள். ஆரம்பத்தில் வாட்டர் மெலன் ஸ்டாருக்கு இதே நிலைமைதான் ஏற்பட்டது. அவரும் வெளியேற்றப்பட்டாச்சு இப்போ கம்ருதீன் பாருவை சுற்றிக்கொண்டு இருக்க, அவர்தான் இப்போ ட்ரோலில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் செய்யும் செயல்கள் நாளுக்கு நாள் எல்லை மீறி கொண்டே போகிறது. ஆரம்பத்தில் கம்ருதீன் பார்வதியுடன் சேர்ந்து மற்ற போட்டியாளர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பிறகு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வந்ததும் கம்ருதீன் பார்வை அரோரா பக்கம் திரும்ப அவருடைய ஆட்டிட்யூட் கூட மாறி இருந்தது. விஜய் சேதுபதியே இதை பாராட்டி இருந்தார். ஆனால் மீண்டும் பார்வதியிடம் வந்த கம்ருதீன் இப்போ பழைய மாதிரியே மாறிவிட்டார்.
சில நாட்களாக பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் மைக்கை மூடி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து பிக்பாஸ் மட்டுமல்ல உள்ளிருக்கும் போட்டியாளர்களோடு வெளியே இருக்கும் போட்டியாளர்களும் கடுப்பாகி கமெண்டுகள் போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பார்வதி இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் அதே தப்பை செய்கிறார். ஏற்கனவே அவர் செய்த தப்பால் ஹவுஸ்மெட்களுக்கு கொடுக்க இருந்த பால், முட்டை, காபி, டீ எல்லாம் பறிபோய்விட்டது. ஆனாலும் பார்வதி திருந்துவதில்லை.
இதை பார்க்கும் ரசிகர்கள் பார்வதிவை தண்டிக்க பிக் பாஸ் பயப்படுகிறாரா? என்று கூட கலாய்த்து வருகிறார்கள். நிலைமை எப்படி இருக்க, நாளை பார்வதியை அதிரடியாக வெளியேற்றப் போவதாக கூறப்படுகிறது. ஒருவேளை பார்வதி இல்லை என்றால் கம்ருதீன் தான் இந்த வார பலிகடா. இவர்கள் இருவரில் ஒருவரை தூக்கினால் தான் இந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு பேச்சு இணையத்தில் இருக்கும், அப்போ இந்த நிகழ்ச்சிக்கான டிஆர்பியும் அதிகரிக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் பிக் பாஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications