"யோசிக்காமல் பேசினா இப்படித்தான்” இதுவரைக்கும் இல்லாத வகையில் கமல் "உப்பாக கரைக்க” போவது இவரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை எபிசோடில் கமல் பல தத்துவங்களை கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் டாஸ்கில் சாப்பாட்டில் உப்பு கலந்ததை குறித்து இன்றைய பேச்சை தொடங்கி இருக்கிறார்.
இதுவரைக்கும் பாராட்டு பெற்று வந்த போட்டியாளர்கள் கூட இன்று கண்டிப்புகளை பெறுவதற்கு தயாராக இருக்கின்றனர்.

பார்த்துவிட்டு தான் வந்திருக்காங்க
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நடக்கும் நிகழ்வுகளை கமல் பஞ்சாயத்து செய்து வருகிறார். அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் 41வது நாளாகிய இன்று முதல் ப்ரோமோவில் கமல் அட்டகாசமாக இந்த வார பிரச்சனையையும் பிரச்சனை ஏற்படுத்திய போட்டியாளர்களையும் பற்றி கிழித்தெடுத்திருக்கிறார். போட்டியாளர்கள் பலர் இதற்கு முந்தைய சீசன்களை பார்த்து நன்றாக தேர்ச்சி பெற்று தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர் .அதை ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.

ரகசிய டாஸ்க்
எந்த ஒரு செயலை செய்தாலும் இது மக்களிடத்தில் எப்படி கொண்டு சேர்க்கப்படுகிறதோ இதை பார்த்த மக்கள் தங்களை எப்படி நினைப்பார்களோ என்று பல போட்டியாளர்கள் புலம்பி வருகின்றனர். இன்று அதை குறித்து கமல் பேச இருக்கிறார். ஏற்கனவே நடந்து முடிந்த அரசவையும் மியூசியமும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒரு சிலருக்கு ரகசிய டாஸ்க் கொடுக்கப்பட்டது .இது தெரியாத சக போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் பற்றி இன்று பேச இருக்கிறார்.

கமலின் இந்த வார பஞ்ச்
இன்றைய ப்ரோமோ மிகவும் தாமதமாக வந்ததால் ரசிகர்கள் பலர் கடுப்பாகி இவ்வளவு நேரம் எதற்கு என்று கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். ஆனாலும் கமலின் இன்றைய உடையை பார்த்து பலர் இது வேற லெவலில் இருக்கிறது என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், உப்பு நாட்டையும் மாத்தி இருக்கிறது. வீட்டையும் மாத்தி இருக்கிறது. பதவிக்கு இருக்கும் ஆசை அதற்கான பொறுப்பை செய்ய வேண்டும் என்பதில் இல்லை ,நான் என்ன பேசுவேன் என்பதை யூகிக்க தெரிந்தவர்களுக்கு தான் என்ன பேச வேண்டும் என்பதை யோசிக்க தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் இன்று பேசுவோம் என்று கமல் கூறி இருக்கிறார்.

பாராட்டும் கண்டிப்பும் இருக்கு
ஏற்கனவே நடந்து முடிந்த டாஸ்க் ஷிவின் நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு ஏற்படுத்த வேண்டும் என உப்பு அதிகமாக சேர்த்ததால் தான் சண்டை சச்சரவுகளும் பிரச்சனைகளும் தலைவிரித்து ஆடியது. இந்தப் பிரச்சனைகள் தான் அசீம் மீண்டும் விக்ரமனை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டி இருந்தார். அது மட்டுமல்லாமல் இந்த டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது போட்டியாளர்களில் ஒரு சிலர் சாப்பாட்டில் உப்பை கலந்து வைத்தால் கமல் சார் கண்டிப்பாக திட்டுவார். அந்த சாப்பாட்டை வேஸ்ட் செய்து விட்டீர்கள் இதை பலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியா செய்ய வேண்டும் என்று அவர் கண்டிப்பாக கேள்வி கேட்பார் என்று கூறியிருந்தனர். அதைத்தான் இன்று பேசி தீர்த்து வைக்க இருக்கிறாராம். ஆனால் இதுவரைக்கும் ஒவ்வொரு வாரமும் சரியாக பர்பாமன்ஸ் செய்யவில்லை என்று கருத்துக்களை பெற்று வந்த கதிருக்கு இன்று பாராட்டு இருக்கிறது. அதுபோல ராஜ குருவாக இருந்து வந்த விக்ரமன் அதிக அளவில் எந்த வேலையையும் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி செய்யவில்லை என்பதை குறித்தும் இன்று கமல் பேச இருக்கிறாராம்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பது
அதுமட்டுமல்லாமல் அசீம் ஒவ்வொரு முறையும் திமிராக பேசி வருவதை குறித்து இன்று கமல் பேசுவாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சோபாவில் நடுவில் தான் உட்காருவேன் என்னை சுற்றி தான் எல்லோரும் உட்கார வேண்டும் என்று சொன்னதாக ஏ டி கே சொன்னது சரியாகத்தான் இருக்கிறது என ரசிகர்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர். இதைக் குறித்தும் இன்று கமல் பேச வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர். அதுபோல ரட்சிதா தனக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்கை சரியாக மெயின்டனன்ஸ் பண்ணினார் ஆனால் விளையாட்டில் ஒழுங்காக பெர்பார்மன்ஸ் செய்யவில்லை என்று பலர் கூறிவரும் நிலையில் இதைக் குறித்தும் இன்று பேச வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications