Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PR டீமின் உதவியோடு தான் டைட்டில் ஜெயித்தேன்.. விளக்கம் கொடுத்த அசீம்.. அடுத்த வளர்ச்சி குறித்த தகவல்

அசீம் ஜெயிப்பதற்கு காரணம் PR டீம் தான் என்ற கருத்துக்கு முதல் முறையாக அசீம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் ஜெயிப்பதற்கு காரணம் பி ஆர் டீம் என்ற கருத்து ஆரம்பத்தில் இருந்தே பரவி வருகிறது.

தனக்கு எதிராக வரும் குற்றச்சாட்டுகளுக்கு தைரியமாக ஆமாம் அதுதான் உண்மை என்று அசீம் பதில் கூறியிருப்பது அவருடைய ரசிகர்களின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனக்கு ஓட்டு போட்ட அனைத்து ரசிகர்களும் தன்னுடைய PRடீம் தான் என்று அசீம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அசீமுக்கு எதிரான கருத்து

அசீமுக்கு எதிரான கருத்து

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வாரம் ஆகின்றது. இந்த நிலையில் முதல் முறையாக அசீம் இன்று தனக்கு எதிராக வரும் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்து அசீமுடைய ரசிகர்கள் அதிகமானோர் அவர் எப்போது லைவில் ரசிகர்களிடம் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்கு முதல் முறையாக தற்போது பதில் அளித்து இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும் அதிகமான ரசிகர்கள் அசீம் ஜெயித்தது சரியல்ல அது ஒரு தப்பான உதாரணம் அசீம் ஜெயித்ததற்கு காரணம் ரசிகர்கள் அல்ல PRடீம் என்று பல்வேறு கருத்துக்கள் குவிந்து வந்தது.

எதிர்பாராத வெற்றியாளர்

எதிர்பாராத வெற்றியாளர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ரன்னராக விக்ரமன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ரன்னர் அப் ஆக ஷிவின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது பலருக்கும் ஏமாற்றமாக இருந்து வருகிறது. காரணம் விக்ரமன் அல்லது ஷிவின்தான் டைட்டில் வின்னர் ஆக வரவேண்டும் என்று அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் விருப்பம் தெரிவித்து ஆறுதல் கூறி வந்தார்கள். ஆனாலும் கடைசியில் பலர் எதிர்பார்த்த தருணம் நடைபெறாமல் போய்விட்டது என்று வருத்தத்தில் அசீமிற்கு எதிராக கருத்துக்களும் கமெண்ட்களும் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் களோடு பரவி வருகிறது.

பி ஆர் டீம் இருக்கு

பி ஆர் டீம் இருக்கு

இந்த நிலையில் இன்று முதல் முறையாக அசீம் தான் பி ஆர் டீம் உதவியோடு தான் டைட்டில் ஜெயித்தேன் என்று கூறி இருக்கிறார். தனக்கு ஆரம்பத்தில் இருந்து உதவி செய்து வாக்களித்த மக்கள்தான் என்னுடைய பி ஆர் டீம் என்று கூறி இருக்கிறார். என்னை யாரெல்லாம் பிடிக்கும் என்று கூறினார்களோ அவர்கள் தான் என்னுடைய பி ஆர் டீம், அதில் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் வயதான பெண்கள் என பலர் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் பிஆர் டீம் உதவியோடு நான் ஜெயித்து விட்டேன் என்று சொன்னால் பல தேர்தல்களில் அரசியல் பிரமுகர்கள் யாரும் மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டிய நிலையே இல்லையே, பி ஆர் டீமின் உதவியோடு ஜெயித்து விடலாமே என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அடுத்த கட்ட வளர்ச்சி

அடுத்த கட்ட வளர்ச்சி

அது மட்டும் இல்லாமல் எனக்கு தமிழ்நாட்டு மட்டும் இல்லாமல் பல இடங்களில் இருந்தும் தமிழ் ரசிகர்கள் அதிகமானோர் ஓட்டு அளித்திருக்கின்றனர். அதுவெல்லாம் பிஆர்டீம் உதவியால் நடந்தது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் என்னுடைய ரசிகர்கள் பலருக்கும் என்னுடைய கேரக்டர் பிடித்திருக்கிறது. அதனால் எனக்கு ஓட்டளித்து இருக்கிறார்கள். நான் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமாக இருந்த பிரஷரால் மட்டும்தான் அந்த மாதிரி எல்லாம் கோபப்பட்டேன் ஆனால் வெளியே இப்பவும் சொல்கிறேன் நான் அப்படி கோபப்படுகிற ஆளே கிடையாது என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு புது திரைப்பட வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும், தான் ஒரு திரைப்படத்தில் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்திருக்கிறேன் என்றுமகூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+