
நான் செய்தது தப்பு, “மன்னிப்பு” கேட்ட ராபர்ட்.. காரணம் அந்த நபர் தானாம்.. வெளியே தெரியாத ரகசியங்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் போது தான் செய்த செயல்கள் குறித்து ரசிகர்களிடம் உருக்கமாக ராபர்ட் மாஸ்டர் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
ரச்சிதாவோடு டைம் பாஸ் ஆக பேசிக் கொண்டிருந்ததையையும், விளையாடிக் கொண்டிருந்ததும் பார்த்து பலர் தன்னை திட்டி வரும் நிலையில் அது குறித்து விளக்கத்தை ராபர்ட் முதல் முறையாக கொடுத்திருக்கிறார்.
கைகலப்பாக மாறிய பிக் பாஸ் வீடு... முடிக்கப்பட்ட விளையாட்டு.. இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் இவரா?

டைம் பாஸ் தானாம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் புறாக்கள் உருவாகிவிடுகிறது. இது நிஜமாகவே உருவாக்குகிறார்களா? அல்லது கண்டென்டுக்காக இப்படி செய்கிறார்களா? என்பது முதல் சீசனிலிருந்து ரசிகர்களுக்கு தோன்றி கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆறாவது சீசனில் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவோடு பழகி வந்ததை குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அது மட்டும் அல்லாமல் ராபர்ட் மாஸ்டர் ஆரம்பத்தில் இருந்து கிரஷ் என்று ரச்சிதாவை கூறிக்கொண்டு பின்னாடியே சுற்றி வந்தார். ஆனால் அது ஜாலியாக நேரம் போவதற்காக தான் அப்படி செய்திருந்தாராம்.

முத்தத்திற்கு இப்படியோரு விளக்கமா
அது மட்டுமல்லாமல் தன்னுடைய விளையாட்டை தனியாக விளையாட வேண்டும் என்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ராபர்ட் மாஸ்டர் வந்ததாக கூறி இருக்கிறார். அதே நேரத்தில் அங்கே தனக்கு நேரம் போக வேண்டும் என்பதற்காகத்தான் ரச்சிதாவிடம் விளையாடி வந்ததாக கூறி இருக்கிறார். சமீபத்தில் அவர் ஒரு பேட்டி ஒன்றில் பேட்டி கொடுத்த வீடியோவை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து அதில் கலாய்த்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த வீடியோவில் தான் ஆரம்பத்திலிருந்து ரச்சிதாவை தன்னுடைய கிரஸ் என்று கூறிக் கொண்டிருக்கும்போது ரட்சிதா தன்னை அண்ணன் என்று சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவரை என்னுடைய கையில் முத்தம் கொடுக்க சொன்னேன். அவர் ஆமாம் நான் உங்கள் தங்கை என்று கையில் முத்தம் கொடுத்து இருந்தால் நான் அப்படியே அதை நம்பி இருப்பேன் அவ்வளவுதான் என்று கூறி இருக்கிறார்.

தவறு என தெரியவில்லையாம்
ரச்சிதாவை குறித்து ராபர்ட் தெரிவித்த கருத்தை நெட்டிசன்கள் பலரும் உங்கள் வீட்டில் ஒரு தங்கை இருந்தால் தெரியாத ஒருவர் நீ என்னை அண்ணன் என்று அழைக்க வேண்டும் என்றால் எனக்கு முத்தம் தர வேண்டும் என்று சொன்னால், நீங்கள் சரி என்று சொல்வீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் தான் அப்படி செய்தது தப்புதான் அது வெளியே இருந்து பார்க்கும்போது தவறாகத்தான் தெரியும். ஆனால் உள்ளே இருந்து பார்க்கும்போது அந்த நேரத்தில் எனக்கு அது ஒரு பெரிய தவறாக தெரியவில்லை. "மைனா" என்னிடம் தங்கை என்று சொன்னதும் அப்படி நடந்து கொண்டது போல, ரச்சிதாவும் நடந்த கொண்டால் என்ன என்றுதான் அந்த நேரத்தில் தோன்றியது ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பது எனக்கு இப்போது தான் தெரிகிறது என்று கூறியிருக்கிறார்.

தவறான முன் உதாரணம் ஆக கூடாது
அதுபோல பல பேர் பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோவில் யார் என்று தெரியாத ஒரு நபர் தன்னை அண்ணன் என்று அழைக்க வேண்டும் என்றால் எனக்கு முத்தம் தர வேண்டும் என்று ஒருவர் கேட்டால் அதுவும் பாப்புலராக இருக்கும் ஒரு நபர் கேட்டால் அதைத்தான் ரசிகர்களும் பாலோ பண்ணுவார்கள். இது ஒரு தவறான முன்பு உதாரணமாக தானே இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதைக் குறித்து இதை நான் அந்த நேரத்தில் யோசிக்கவே இல்லை. கண்டிப்பாக இது தவறான முன்னுதாரணமாக இருந்து விடக்கூடாது. நான் ஏதோ விளையாட்டுத்தனமாக பேசியதை யாரும் பெரிதாக எடுத்து விட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.