தப்பு பண்றவங்களுக்கு இதை செய்தே ஆக வேண்டும் கறாராக கமல்ஹாசன் எடுத்த அதிரடி..எதிர்பாராத வெளியேற்றம்!?
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் இந்த ஒரு வாரமாக பிரச்சனைகளும் கலவரங்களும் அதிகமாக நடைபெற்ற நிலையில் இன்று கமல் வந்து தீர்ப்பு சொல்ல இருக்கிறார்.
யார் பக்கம் கமல் பேச போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கூடி இருக்கிறது.
தப்பு பண்றவங்களுக்கு அது தப்பே இல்லை என்று நேற்றைய எபிசோட்டில் அசீம் நடந்து கொண்டது சரியா? அல்லது அதற்கு ஆயிஷா செய்தது சரியா? என்று கமல் இன்று முடிவு சொல்ல இருக்கிறாராம்.

எந்த சீசனிலும் இல்லாத செயல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாக தான் ஒவ்வொரு சீசனிலும் சென்று கொண்டிருக்கும். ஆனால் வழக்கத்துக்கு எல்லாம் மாறாக இந்த ஆறாவது சீசனில் தொடங்கிய முதல் நாளிலிருந்து பிரச்சனைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. முதல் நாளில் அனைவரும் ஆட்டம் பாட்டதொடு வீட்டிற்குள் வந்தாலும் அடுத்த நாளிலே இவர்கள் இப்படித்தான் என்று தங்களுக்குள்ளே அவர்களைப் பற்றி மதிப்பீட்டை ஏற்படுத்தி நடந்து வருவது 24 மணி நேர எபிசோட்டில் ரசிகர்களால் பார்க்க முடிகிறது.

ரசிகர்கள் குறிப்பிடும் போட்டியாளர்
கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் எந்த போட்டியாளரும் வெளியேற்றப்படவில்லை. ஆனால் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் 13 போட்டியாளர்கள் பெயர் இருக்கின்றது. இதில் யார் ஜெயிப்பார்கள் யார் வெளியேறுவார்கள் என்று ஆர்வத்தோடு ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்த வாரம் நடந்த பல கசப்பான சம்பவங்கள் இவரை வெளியேற்றலாம் அல்லது இவரை வெளியேற்றலாம் என்று ஒரு சில போட்டியாளர்களின் பெயர்களை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக உச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் கமல்ஹாசன், தப்பு பண்றவங்களுக்கு நாம பண்றது தப்பு என்கிறது தெரியாமலே போகிறது எப்ப தெரியுமா? நீ செய்யறது தப்பு என்று சொல்ல ஆளே இல்லாம போகும்போது தான். தப்பு தட்டிக் கேட்க தானே நாம இருக்கோம், அதுதானே நம்மளோட வேலை? கேட்ருவோமா? என்று பேசி இருக்கிறார். இதனால் இன்று என்ன நடக்குமோ? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

அசல் கோளாறுவின் சேட்டைகள்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் ஆரம்பமான ஒரு சில நாட்களிலேயே அசல் கோளாறு பெண்களிடம் நடந்து கொள்வது சரியான முறையில் இல்லை இவர் எப்போதும் பெண்களை தடவிக் கொண்டு சில்மிஷம் செய்து வருகிறார் என்று கூறி வருகின்றனர். அதற்கு அடுத்ததாக அசல் கோளாறு மற்றும் தனலட்சுமி இடையே பிரச்சனை வெடித்தது. அதில் அசல் கோளாறு தனலட்சுமியை உருவ கேலி செய்து பெரியம்மா, ஆன்ட்டி என்று கூப்பிடுவதாக கோபத்தில் தனலட்சுமி சண்டையிட்டு இருந்தார். இதற்கான பஞ்சாயத்து வீட்டிற்குள் இப்ப வரைக்கும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

யாரு பக்கம் தீர்ப்பு
அதைத்தொடர்ந்து நேற்றைய வரிசைப்படுத்துதல் டாஸ்கில் அசீம் சக போட்டியாளர்களிடம் நடந்து கொண்டது முகம் சுளிக்கும் வகையில் மட்டுமல்லாமல், ஆண் ஆதிக்கத்தை காட்டுவதாகவும் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கம்பீரமாகவும், பல சீரியல்களில் நடித்து விட்டதால் தனக்கு அதிக அளவில் ரசிகர்கள் பட்டாலும் இருக்கும் என்று நம்பி கொண்டிருக்கிறாரா? அசீம் என்று அவருக்கு எதிராக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். வரிசைப்படுத்துதல் டாஸ்க்கில் ஆயிஷாவிடம் வாடி போடி என்று பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது. அதை விட உச்சம் என்னை எப்படி நீ கையை நீட்டி பேசலாம்? என்று கையை நீட்டிக்கொண்டு அசீம் பேசிக் கொண்டிருந்தார். தான் செய்தால் சரி அதை அடுத்தவர் செய்தால் தவறு என்று அசீம் செய்தது இன்று பஞ்சாயத்து செய்யப்படுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

கடைசி நேர வெளியேற்றம்
தொடர்ந்து சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டிருக்கும்போது ஜி பி முத்து தன்னுடைய வீட்டின் ஞாபகமாக இருப்பதால், தன்னால் உள்ளே இருக்க முடியவில்லை என்று ஒரு சில நாட்களாகவே கூறி வருகிறார். அதுபோல அவர் சரியாக தூக்கம் இல்லாமல், சாப்பிட முடியாமலும் தவித்து வருவதை 24 மணி நேர எபிசோடில் காண முடிகிறது. பிக் பாஸ் எவ்வளவோ அவரிடம் அறிவுரைகளை கொடுத்த பிறகும் ஜி பி முத்துவால் அங்கே இருக்க முடியவில்லை என்று உறுதியாக கூறி வருகிறார். அதுபோல மனநல மருத்துவரிடமும் பேசினாலும் ஜிபி முத்து தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். அதனால் இன்று யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜிபி முத்து வெளியேற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது .அதுபோல ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் கடைசி இடத்தில் சாந்தி மாஸ்டர் இருப்பதால் அவரும் இந்த முறை வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications