டைட்டில் ஜெயித்த பிறகு மனைவி என்ன சொன்னார்? விளக்கம் கொடுத்த அசீம்... இப்போ இதுதான் நடக்கிறதாம்!
எனக்கும் என்னுடைய மனைவிக்கும் நீதிமன்றம் மூலமாக விவாகரத்து ஆகி விட்டது. அதற்குப் பிறகு அவரும் என்னோடு பேச முயற்சி செய்யவில்லை. நானும் முயற்சி செய்யவில்லை என்று அசீம் கூறியிருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அசீம் அவருடைய மனைவியை பற்றி ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அசீமுடைய ரசிகர்களின் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தற்போது அசீமுடைய பதில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை கொடுத்திருக்கிறது.
விவாகரத்து முடிந்த பிறகு எக்ஸ் தான் அதனால் அதைப்பற்றி இனி யாரும் பேச வேண்டாம் என்று அசீம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

டைட்டில் வின்னர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த சீசனில் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது தற்போது வரைக்கும் சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது, ஆரம்பத்திலிருந்து அதிகமாக சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு இருந்த போட்டியாளர்களில் முதன்மையானவராக அசீம் தான் இருந்து வந்தார் என்றும் அசீம் சக போட்டியாளர்களிடம் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினார். தரக்குறைவாக பேசி இருந்தார். பெண்களை, திருநங்கை போட்டியாளர்களை உருவ கேலியும் செய்தார் என்று பல்வேறு குற்றசாட்டுகள் இருந்தாலும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுத்து அவரே வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டார் .இது அவரை எதிர்த்த பலரால் தாங்கிக் கொள்ள முடியாமல் சமூக வலைத்தளத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

முடிவடையாத கருத்து மோதல்கள்
அசீம் சக போட்டியாளர்கள் இடம் டாஸ்க் நேரத்தில் சண்டை போட்டாலும் பிறகு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டார். அதனால் அவர் நியாயமாகவும் உண்மையாகவும் இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் அவரை பாராட்ட என்ன தான் செய்தாலும் தப்பு செய்துவிட்டு மன்னிப்பு கேட்கிறது சரியான செயலா என்று இன்னொரு தரப்பினர் கேள்வி எழுப்ப, அதிகமான ரசிகர்கள் அசீமுடைய கேரக்டரை சமூக வலைதளத்தில் விளாசிக் கொண்டிருக்கின்றனர் .அது மட்டும் அல்லாமல் அசீம் இந்த மாதிரி கேரக்டரில் இருப்பதால்தான் அவருடைய மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார் என்றும் கூட அவரைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் நிலவி வருகிறது.

மனைவியுடன் கருத்து வேறுபாடு
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அசீம் தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாங்கள் நீதிமன்றத்தின் மூலமாக விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டோம் என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் ஒரு முறை பார்ட்டிக்கு அல்லது பங்க்ஷனுக்கு செல்லும்போது கூட என்னுடைய மனைவி டிரஸ் லீவ் லெஸ் போடணும் என்று கேட்கிறார். இதுவெல்லாம் சரியா என்று கேள்வி எழுப்பி அதனால் தான் எங்களுக்குள் சண்டை வந்தது. உடை விஷயத்தில் தான் எங்களுக்குள் முதல் கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கியது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு அவருடைய மனைவி என்ன சொன்னார் என்று ரசிகர்கள் அதிகமானோர் கேள்வி எழுப்பி கொண்டிருந்தனர்.

அது முடிந்து போனது
இந்த நிலையில் அதற்கு அசீம் முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். என்னுடைய மனைவியும் நானும் சில வருடங்களுக்கு முன்பு நீதிமன்றத்தின் மூலமாக மியூச்சுவல் ஆக பிரிந்து விட்டோம். நீதிமன்றத்தின் மூலமாகவே எங்களுக்கு பேச்சுவார்த்தை நடந்தது. அதற்குப் பிறகு அவரும் என்னோடு பேச முயற்சி செய்யவில்லை, நானும் அதற்கு பற்றி பேசிக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி அவருடைய நிலைப்பாடு என்ன என்பது எனக்கு தெரியாது. அதனால் இனி முடிந்து போனதை பற்றி யாரும் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications