Bigg Boss: பிக் பாஸில் சான்ட்ராவிடம் நறுக்குன்னு விஜய் சேதுபதி கேட்ட கேள்வி! ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் டிசம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இந்த ப்ரோமோவில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சான்ட்ராவிடம் விஜய் சேதுபதி கேள்வி கேட்டிருக்கிறார். மக்கள் மனதில் நினைத்ததை எல்லாம் கேட்டிருக்கிறார். இதனால் இன்றைய எபிசோடில் பரபரப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்கவே சான்ட்ரா அழுது கொண்டே இருந்தார். தன்னுடைய கணவர் பிரஜனை வெளியேற்றியதற்கு உள்ளிருக்கும் போட்டியாளர்கள் தான் காரணம் என்று கேமரா முன்பு அவர்களை பழிவாங்குவேன் என சபதம் போட்டிருந்தார். சொன்னது போலவே தன்னுடைய ஆட்டத்தை தொடங்கிய சான்ட்ரா உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் மீது இல்லாததும் பொல்லாததுமான குற்றசாட்டுகளை வைத்து மற்றவர்கள் எல்லோரையும் வில்லன்கள் போல சித்தரித்துக் கொண்டிருந்தார்.

பார்க்கும் போதெல்லாம் இவரே அழுது கொண்டிருப்பதால் ரசிகர்களுக்கே, யம்மா சான்ட்ரா.. போதுமா உன் புராணத்தை நிப்பாட்டுன்னு.. சொல்ற மாதிரி தான் சான்ட்ரா செய்து கொண்டு இருந்தார். என் புருஷன் வெளியே போயிட்டாரு அதனால நான் சோகமா இருக்கிறேன், அதற்காக என்னை சுத்தி இருக்கிற யாரும் சிரிக்க கூடாது, சந்தோஷமா இருக்கக் கூடாது, எல்லாரும் அழுதுகிட்டே இருக்கணும் என்பது போல ஒரு மனநிலையில் தான் சான்ட்ரா விளையாடிக் கொண்டிருந்தார்.
எனக்கு தூக்கம் வருகிறது, நீங்க சத்தமா பேசக்கூடாது, எனக்கு பசிக்கல நீங்க யாரும் சமைக்க கூடாது என்றெல்லாம் அவர் ரூல்ஸ் போட அது அவருக்கே வினையாக மாறிவிட்டது. சோசியல் மீடியா முழுக்க சான்ட்ராவின் கேரக்டரை கழுவி ஊற்றி வந்தனர். அதிலும் மீம்ஸ்களில் கூட சான்ராவின் ரியாக்சன் தான் வைரல் ஆகிவிட்டது.
இந்த நிலையில் இந்த வாரம் விஜய் சேதுபதி சான்ராவை வெளியேற்ற வேண்டும், அல்லது சான்ராவிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்த்து வந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை ப்ரோமோவில் விஜய் சேதுபதி நிறைவேற்றி இருக்கிறார். இதற்கு முன்பு சான்ட்ரா மற்றும் திவ்யா கணேஷ் இருவரும் சேர்ந்து உள்ளிருக்கும் போட்டியாளர்களை டார்கெட் செய்து பேசியிருந்தனர்.
அப்போது கூட விஜய் சேதுபதி திவ்யா கணே க்ஷஷை மட்டும் தான் திட்டி இருந்தார். சான்ராவிடம் பட்டும்படாமலும் பேசியிருந்தார். இதுவும் அதிகமாக பேசப்பட்டது. இதனால் இந்த தடவை "என் மேல எல்லாம் தப்பே கிடையாது.. நான் நியாயமா தான் தீர்ப்பு சொல்றேன்" என்று நிரூபிப்பதற்காகவே விஜய் சேதுபதி சான்ட்ராவிடம் கேள்விகளை கேட்டிருக்கிறார்.
நீங்க சோகமா இருக்கீங்க சரி அதற்காக உள்ளிருக்கும் யாரும் எதுவும் செய்யக்கூடாதுனு ரூல்ஸ் போடுவதற்கு நீங்க யாரு? இது உங்க வீடா? நீங்களும் இங்கே விளையாட தானே வந்திருக்கீங்க? மற்றவர்களின் விளையாட்டை நீங்க எப்படி தடுக்க முடியும்? அடுத்தவங்க எல்லாரையும் வில்லனா சித்தரிச்சிட்டு நீங்க ஹீரோயிஷம் காட்டுறீங்களா? என்றெல்லாம் விஜய் சேதுபதி கேட்டிருக்கிறார்.
இதற்கு சான் நான் அடுத்தவங்களை குற்றசாட்டு எல்லாம் வைக்கல சார் என்று சொல்ல, அப்போ நீங்க என்ன தாங்க பண்ணிட்டு இருந்தீங்க? நீங்க அழுதுட்டே இருந்தா அது விளையாட்டு பாக்குறதுக்கு சரியா இருக்குமா? என்று கேட்டிருக்கிறார். எது எப்படியோ ப்ரோமோவில் காட்டுற வேகத்தை விஜய் சேதுபதி எபிசோடிலும் காட்டினால் நன்றாக இருக்கும். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications