மனைவி செய்த செயலை பார்த்து கதறி அழுத அபிநய்..ஒரு வழியா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி போட்டாச்சு
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் அபிநய் செய்த செயல் ரசிகர்களை வியப்படைய செய்ய வைத்திருக்கிறது.
ஏற்கனவே பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தற்போது அபிநய் மனைவி செய்த செயல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

திரை குடும்ப வாரிசு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 5 வது சீசனில் ஒரு போட்டியாளராக களமிறங்கிய அபிநய் ஒரு திறை குடும்பத்தை சேர்ந்தவர் என்பது இந்த நிகழ்ச்சியில் அறிமுகமான பிறகு தான் பலருக்கும் தெரிந்திருந்தது. இவர் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் ஆக இருந்ததால் தன் துறையில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் ஆகியிருந்தாலும் ரசிகர்களால் பல வாரங்கள் பாதுகாக்கப்பட்டு 80 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்தார்.

பாவனியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சலசலப்புக்கு ஆளான அபிநய் ஆரம்பம் முதலே பாவனி ரெட்டிக்கும் இவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவருக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் ஆரம்பத்தில் வந்து கொண்டிருந்தது. இவர் பாவனியுடன் பழகும்போது பாவனிக்கு இவர் நட்பைத் தாண்டி பழகுகிறார் என்ற ஒரு அச்சமும் ஏற்பட்டதும், இவரிடம் நேரடியாகவும் இவரைப் பற்றி சக போட்டியாளர்கள் இடமும் பேசி வந்துள்ளார். இந்த செய்தி நாட்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சனை கமல் வரைக்கும் சென்று உள்ளது.

தொடர்ந்த வதந்திகள்
அபிநய் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்டது அவருடைய மனைவி என்ன மாதிரி எடுத்துக் கொள்வார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியேறிய அபிநய் தன்னுடைய மனைவி, இந்த மாதிரி விஷயத்தில் சாதாரண பெண் எப்படி நடந்து கொள்வாரோ அது போலத்தான் நடந்து கொண்டார் என்று கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கணவரின் பெயரை மாற்றிவிட்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. விவாகரத்து வரைக்கும் சென்று உள்ளது என்றெல்லாம் வதந்திகள் கிளம்பி வந்தது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் அபிநய் கலந்துகொண்டுள்ளார். தொடர்ந்து மூன்றாவது வாரமாக இவருடைய பெயர் எலிமினேஷனில் இருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலர் தின கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் அவருடைய மனைவி மற்றும் குழந்தையும் காதலர் தின வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர். இதை பார்த்ததும் ரசிகர்கள் ஒருவழியாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இனி அபிநய் வாழ்க்கையில் கொண்டாட்டம் தான் என்று கூறி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications