கண்ணீரை சிந்தி காதலை காட்டும் போட்டியாளர்கள்...பங்கமாக கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்றும் காதலர் தினம் கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சி தொடங்கி 16 நாட்களுக்குள் இவ்வளவு அழுகை சீன்களா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

பிக்பாஸ் அல்டிமேட் தொடக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை தொடர்பு பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். தற்போது அதில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகியிருக்கின்றனர். மீதமிருக்கும் 12 போட்டியாளர்களும் தற்போது 16 வது நாட்களில் காலடி எடுத்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு நாட்களும் போட்டியாளர்கள் உள்ளே என்ஜாய் பண்ணி கொண்டும் டாஸ்க்களில் கவனத்தை செலுத்திக் கொண்டும் இருந்து வருகின்றனர்.

அதிகரிக்கும் போட்டிகள்
ஏற்கனவே ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் தாங்கள் இழந்த பெயரையும் தாங்கள் நிரூபிக்க முடியாமல் வெளிக்காட்ட முடியாமல் போன தங்களுடைய திறமைகளை ரசிகர்களிடம் காட்டுவதற்காகவே மீண்டும் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் களம் இறங்கியிருக்கின்றனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சுஜாதா அதிரடியாக வெளியேற்றப்பட்டு இருந்தாலும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்று தான் போட்டி போட்டு வருகின்றனர்.

பக்குவமான நடவடிக்கைகள்
ஜூலி, அனிதா, வனிதா போன்ற ஒருசில போட்டியாளர்கள் இதற்கு முன்பு கலந்து கொண்ட போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் நிறையவே மாற்றம் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அதில் தற்போது யாருடைய பெயரையும் முடிவாக கூற முடியவில்லை. அந்த அளவிற்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய தனித் திறமைகளையும் விளையாட்டையும் விளையாடி வருகின்றனர்.

அதிர்ச்சி அடைந்த அனிதா
காதலிக்கும் காதலர்களுக்கு பிப்ரவரி மாதம் முழுக்கவே காதலர் தினம்தான் அந்தவகையில் நேற்று தொடங்கிய காதலர் தினம் கொண்டாட்டம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றும் தொடங்கியிருக்கிறது. போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவரும் இன்று போட்டியாளர்கள் இடம் பேசி வருகின்றனர். இதைப்பார்த்ததும் போட்டியாளர்கள் பலர் கதறி அழுவதை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகின்றனர். சும்மாவே காதல் என்று சொன்னால் அனிதா மணிக்கணக்கில் பேசுவார் என்பது பலரும் கூறும் குற்றச்சாட்டாக இருந்தாலும், தற்போது அவருடைய கணவர் அவரிடம் காதலை கூறியுள்ளார். தான் எப்போதும் உறுதுணையாக இருப்பதாக கூறியிருக்கிறார். அதை சற்றும் எதிர்பார்க்காத அனிதா தன்னுடைய மொத்த எக்ஸ்பிரஸனையும் முகத்தில் காட்டியிருக்கிறார்.

தொடரும் அழுகை சீன்கள்
இதுவரைக்கும் நெகட்டிவ் கமெண்டுகளை மட்டுமே பெற்றிருந்த ஜூலி தற்போது பாசிட்டிவ் கமெண்டுகள் பெற்றுவரும் நிலையில் அவருடைய தம்பியும் அவருடைய அன்பான பாசத்தை ஜூலி இடம் வெளிக்காட்டி இருக்கிறார். அதுபோல வனிதாவின் மகள் அவருக்கு ஆறுதல் கூறி தங்களுடைய காதலையும், பாசத்தையும் வெளிக்காட்டி இருக்கின்றார். இப்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய உறவினர்களின் வீடியோவை பார்த்ததும் தேம்பி தேம்பி அழுது வருகின்றனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவியில் தான் இப்படி நடக்கிறது என்றால் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இப்படித்தானா என்று கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications