உண்மை கடவுளுக்கு தெரியும், "இதை செய்யாதீர்கள்” பதிவிட்டு குதர்க்கமாக விளக்கம் கொடுத்த அர்ணவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளத்தில் ஒரு சில நாட்களாக சின்னத்திரை நடிகர்களான திவ்யா மற்றும் அர்ணவ் குடும்ப பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் திவ்யா, செல்லம்மா சீரியலில் நடித்து வரும் அர்ணவ் இவர்கள் இருவருமே மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

குடும்ப பஞ்சாயத்து மீடியா பக்கம் வந்ததும் பல்வேறு தரப்பட்டவரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அர்ணவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சீரியல் தம்பதிகள் கல்யாணம்

சீரியல் தம்பதிகள் கல்யாணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் கதாநாயகனாக நடித்து வரும் அர்ணவ், சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி சீரியல் மூலமாக தமிழுக்கு அறிமுகமான திவ்யா ஸ்ரீதர் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இவர்கள் இவருடைய காதல் ஐந்து வருடங்கள் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் சில மாதங்களுக்கு தான் முன்பு தான் திருமணம் முடிந்திருந்தது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டைகள் வந்துள்ளதாகும்.

சலசலப்பை ஏற்படுத்தும் பிரச்சனை

சலசலப்பை ஏற்படுத்தும் பிரச்சனை

தற்போது திவ்யா அர்ணவ்வின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். அதில் தான் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அர்ணவ், செல்லம்மா சீரியலில் நடிக்கும் கதாநாயகியோடு அவர் நெருங்கி பழகி வருவதாகவும் அதனால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு அர்ணவ், திவ்யா மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார். இவர்கள் இருவரின் பிரச்சனை சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

சீரியலில் ஹீரோயிசம் காட்டும் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறார்களா? என்று பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. தற்போது திவ்யா வெளியிட்ட பல ஆதாரங்கள் அர்ணவ்வுக்கு எதிராக இருந்து வருகிறது. ஆனால் அதுவெல்லாம் உண்மை இல்லை என்று அர்ணவ் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் திவ்யாவிற்கு ஆதரவாக பல பெண்கள் அமைப்பினரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

குதர்க்கமான பதிவு

குதர்க்கமான பதிவு

இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ணவ் மக்கள் உண்மையை அறியும் வரை தொடர்ந்து போராடுவேன். நீண்ட காலத்திற்கு உண்மையை மறைக்க முடியாது. நீதி எப்போதும் வெல்லும். இந்த சூழ்நிலையில் யார் தவறு செய்தார்கள் என்பது கடவுளுக்கு தெரியும். உண்மையை அறியாத தோழர்கள் யாரையும் ஆதரிக்க வேண்டாம் என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஒரு சிலர் அர்ணவ்வுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் பலர் அவரை இந்த பதிவிற்கு திட்டி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+