சமையல் செய்து ரசிகர்களை கவர்ந்து இழுக்க களமிறங்கிய கத்தரி பூவழகி... கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி மூன்றாவது சீஸனில் ஒரு போட்டியாளராக அம்மு அபிராமி களமிறங்கியிருக்கிறார்.
Recommended Video
இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு தற்போது ஆதரவு குவியத் தொடங்கிவிட்டது.

குக் வித் கோமாளியில் அம்மு அபிராமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடும். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரண்டு சீசன்களில் அதிக அளவில் வெற்றி பெற்றது. தற்போது 3வது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வந்தனர். இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த சீசனில் இளைஞர்களின் கனவு கன்னியாக கத்தரி பூவழகி எனும் பாடல் மூலம் இளைஞர்களை கவர்ந்த அம்மு அபிராமி இதில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகிறார்.

அசுரன் படத்தில் கலக்கல்
அம்மு அபிராமி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஆவார். இவர் பைரவா திரைப்படத்தின் மூலமாக தான் முதன்முதலில் தமிழில் தோன்றியிருக்கிறார். முதல் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் மருத்துவ மாணவியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு ராட்சசன் போன்ற படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். அதுவும் இவருக்கு அசுரன் படத்தில் ஃப்ளாஷ்பேக் சீனில் வரும் மாரி கேரக்டர் வேற லெவலில் செட்டாகிவிட்டது. இவருடைய நடிப்பை தத்ரூபமாக வெளிக்காட்ட இந்த ஒரு கேரக்டர் இவருக்கு சிறப்பாக அமைந்திருந்தது.

இளைஞர்களை இனி கவர்ந்து விடுமா
என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடிப்பதற்கும் துணை கதாநாயகியாக நடிப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கும் நிலையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகமாகியிருக்கிறார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகி பலர் பிரபலமாக மாறி இருக்கின்றனர். அந்த வகையில் தனக்கும் இடம் கிடைக்குமா?? என்று இவர் இதில் அறிமுகமாகி இருந்தாலும், இந்த நிகழ்ச்சியை இவருக்காகவே பல இளைஞர்களும் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள் என்று சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பரவி வருகிறது.

நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்
இன்றைய குக் வித் கோமாளி ப்ரமோவில் இவருடைய அதிரடியான பர்பாமன்ஸ் பார்த்து பல ரசிகர்களின் மனது பறந்துகொண்டிருக்கிறது. சாப்பிடுவதற்கு ரொம்ப பிடிக்கும். அதனால் சாப்பாடு செய்யலாம் என்று இந்த நிகழ்ச்சியில் வந்திருக்கிறேன், என்று இவர் சொன்னதை வைத்து பலர் இதைப் பார்ப்பது எங்களுக்கும் பிடிக்கும் என்று அனுப்பி வருகின்றனர். வழக்கம்போல நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை மீம்ஸ்களில் போட்டு இனி இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து ஆதரவு கொடுப்போம் என்று பலர் நூல் விட்டு வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications