உன்ன நெனச்சதும் ... கலக்கலான போட்டோ வெளியிட்டு கேப்ஷன் கொடுத்த டிடி.. ட்விஸ்ட் சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரையில் சினிமா கதாநாயகிகளுக்கு இணையாக ரசிகர்களையும், புகழையும் பெற்றிருப்பவர் டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. ஒயிட் கலர் சர்ட்டில் க்யூட்டான பல போட்டோகளை எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பேஜில் அப்லோட் செய்துள்ளார்.

டிடி யின் இந்த போட்டோக்களை பார்த்த அவர் ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.

 எவர்கிரீன் டிடி

எவர்கிரீன் டிடி

சின்னத்திரையில் எத்தனையோ நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் டிடி போன்ற சிலரால் மட்டுமே மக்கள் மனதில் வெகு நாட்களாக இருக்க முடியும். சின்னத்திரையின் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு டிடியை சொல்வார்கள்.அந்த அளவிற்கு சின்னத்திரையில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துள்ளார்.

பிரபலங்கள்னாலே இவர் தான்

பிரபலங்கள்னாலே இவர் தான்

விஜய் டிவியில் இப்பவும் முக்கிய பிரபலங்களை இண்டர்வியூ செய்ய வேண்டும் என்றால் சேனலின் முதல் சாய்ஸாக டிடி மட்டுமே இருப்பார். சினிமா துறையில் பெரிய நட்பு வட்டாரத்துடன் இருக்கும் டிடி அவ்வப்போது சில திரைப்படங்களிலும் முகத்தை காட்டி வருகிறார். ஊர் சுற்றுவதை பொழுதுபோக்காக வைத்திருக்கும் இவர் அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து அவருடைய ரசிகர்களுக்காக போஸ்ட் செய்வதும் உண்டு.அதற்கு அவரது ரசிகர்களிடம் எப்போதும் நல்ல வரவேற்ப்பும் இருக்கும்.

 காப்பி வித் டிடி

காப்பி வித் டிடி

காப்பி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சினிமா பிரபலங்களுடன் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சமயத்தில் டிடி கதாநாயகியாக நடிக்க போவதாக பலமுறை செய்திகள் வெளி வந்தது.ஜாலி பேர்வழியான டிடி தன்னுடைய திருமண விவாகரத்துக்கு பின்பு தாம் மிகவும் சுதந்திரமாக இருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார். டிடியின் அக்கா பிரியதர்ஷினியும் ஒரு தொகுப்பாளர் ஆவார் தற்போது நாடகங்களில் நடித்து வந்து கொண்டிருக்கிறார்.

 போட்டோ கலெக்ஷன்

போட்டோ கலெக்ஷன்

தனது லொட..லொடா.. வென பேசும் வாய் துடுக்கால் தமிழ் திரை மட்டுமின்றி ஹிந்தி திரை உலகம் வரை சினிமா பிரபலங்களுடன் நட்பில் இருக்கும் டிடி தான் போஸ்ட் செய்யும் போட்டோக்களை எப்பொழுதும் கிளாஸ் ஆகவும் மாஸாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். அதேபோல் தற்பொழுது தனது போட்டோ கலெக்ஷனை வைத்து அவர் போட்டுள்ள வீடியோக்கள் வரும் லைக்கை பார்க்கும் பொழுது டிடி இருக்கும் ரசிகர்கள் பாசத்தை தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+