எவ்ளோ பெரிய பபுள்ஸ்.. உடைக்கலாமா.. கெஞ்சும் ரசிகர்கள்.. புன்னகையால் கொஞ்சும் தர்ஷனா!
சென்னை : சின்ன குழந்தையாட்டம் பபுள்ஸ் பறக்கவிட்டு விளையாடும் தர்ஷனா அசோகனைப் பார்த்து நாங்களும் விளையாட வரலாமா என்று ரசிகர்களும் வம்பிழுத்து வருகின்றனர்.
ஜீதமிழ் அனுவா இது !!?என்று சொல்றமாதிரி மாடர்ன் உடையில் கும்முனு வந்தாலும் அமைதியின் சொரூபமாக இவர் விளையாடும் விளையாட்டை பார்க்க இரண்டு கண்கள் போதாது என பெருமூச்சுவிட்டு ஏங்குகின்றனர்.
டாக்டரம்மா நடிகை மட்டுமல்ல நான் குழந்தையும் தான் என்று நிரூபித்து விட்டார் என்று கமெண்ட்ஸ்கள் பறந்து வருகிறது.

பரபரக்கும் ரசிகர்கள்
ஜீன்ஸ் பேண்டும் சிக்கென்று கருப்பு டீசர்ட்டில் கலக்கும் தர்ஷனாவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் எல்லாம் எந்த இடம் சொல்லுங்க மேடம் நாங்களும் வந்து விளையாட வரோம் என்று கெஞ்சி வருகின்றனர். குழந்தை போல இவர் விளையாடும் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்தால் சிலருக்கு நேரம் போவதே தெரியவில்லையாம். அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பபுல்ஸ் ஊதி விடுவதை பார்த்ததும் பலருக்கு குழந்தைப்பருவ ஞாபகங்கள் எல்லாம் வந்து இருக்கின்றதாம். பார்த்து மேடம் உங்களால பலர் பப்பிள்ஸ் கடையை நோக்கி படையெடுக்க தொடங்கி விடுவார்கள் போல என்று கலாய்பவர்களும் கலாய்த்து தான் வருகிறார்கள்.

என்னது டாக்டரா
பல் மருத்துவம் படித்து முடித்து இருக்கும் இவர் பிறந்தது, பூர்வீகம் எல்லாமே கேரளாவாக இருந்தாலும் படித்தது எல்லாம் சென்னை தானாம். அங்கு மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது இவருடைய பிரண்ட்ஸ் எல்லாம் போட்டோஷூட் எடுப்பதை பார்த்து இவரும் விளையாட்டாக ஃபோட்டோஷட்டை ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் மாடலாக போட்டோசூட் எடுத்துக்கொண்டு இருந்தாலும் தன்னுடைய பிரண்ட்ஸ்களெல்லாம் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதை பார்த்து இவரும் போஸ்ட் போட்டு இருக்கிறார். அந்த இன்ஸ்டகிராம் மூலமாகத்தான் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது .

பட்டையக் கிளப்புராரே அனு
இவர் மட்டும் டாக்டர் அல்ல இவருடைய தந்தையும் ஒரு டாக்டர் தான். அவருடைய ஆசைக்காக தான் இவரும் மருத்துவம் படித்திரக்கிறார் .ஆனால் இவருடைய வீட்டில் நடிப்பு என்னும் பேச்சுக்கே இடமில்லை. சினிமா பாட்டு கேட்பதற்கு மட்டும் அனுமதி உண்டு. ஆனால் நடிப்பு டான்ஸ் எல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட்டாகாது என்று கூறி விடுவார்களாம். ஆனாலும் அந்த மாதிரி ஒரு குடும்பத்தில் பிறந்து இன்று ஒரு சீரியலில் கதாநாயகியாக நடித்து சின்னரை ரசிகர்களின் மனதில் சிம்மாசனத்தில் இருக்கிறார். முதல் சீரியலிலே யாருக்கும் இந்த அளவிற்கு இடம் கிடைத்து விடாது. சினிமாவிலேயே வேறு எதிலுமே அனுபவமே இல்லாமல் இருந்தாலும் இவருடைய நடிப்பை ரசிகர்கள் கவரும் விதத்தில் வெளிக் காட்டி வருகிறார்.

படபடப்பு கொஞ்சம் அதிகம்தான்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலின் கதாநாயகி அனு தான் தர்ஷனா. இவரை தர்ஷனா என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. அனு என்று சொன்னாலே டக்கென்று தெரிந்துவிடும். அந்த அளவிற்கு பாப்புலர் பிகராக மாறிவிட்டார். அதனால்தான் தற்போது ஜீ தமிழில் இவருக்கு அவார்டுகள் எல்லாம் கிடைத்து இருக்கிறது. அதில் இருந்தே தெரிகிறது ரசிகர்கள் இவருக்கு கொடுத்திருக்கும் அங்கீகாரம் எந்த அளவிற்கு இருக்கின்றது என்று. ஆனாலும் இவர் கேமரா முன்னாடி மட்டும்தான் தன்னுடைய பதட்டத்தை மறந்து டைரக்டர் சொன்னதை அப்படியே செய்து கொண்டிருப்பாராம். ஆனால் யாரிடமும் பேச வேண்டுமென்றால் படபடப்போடு தான் பேசுவாராம்.

சூட்டிங் ஸ்பாட் சேட்டைகள் அதிகம் தான்
இந்த சீரியலில் 40 வயது இளைஞருக்கும் 20 வயது பெண்ணுக்கும் நடக்கும் காதலை மையமாகக் கொண்டு எடுத்திருந்தாலும் இவர்கள் இருவருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே செட் ஆகிவிட்டது. அதுவும் இந்த சீரியலில் இவருடன் நடிக்கும் நடிகர்கள் எல்லாமே கைதேர்ந்தவர்கள் தான். அதிகமான அனுபவம் கொண்டவர்களுடன் இவர் கத்து குட்டியாக சேர்ந்து இருக்கிறார். ஆனால் இவர்கள் கொடுக்கும் ஆதரவினால் தான் இவரால் இந்த அளவிற்கு நடிக்க முடிகிறது என்று அவரே கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சூட்டிங்கில் பிறகு இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் அளவில்லாமல் தான் போய்க்கொண்டிருக்கிறது. அடிக்கடி டிக் டாக் வீடியோக்களும் , ரீல்ஸ் வீடியோக்களும் எடுத்து தள்ளி வருகின்றனர்.

இவருக்குத்தான் அது கிடைச்சிருக்கு
தர்ஷனாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக இந்த சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்ஸ்டாகிராமில் இவரிடம் தொடர்பு கொண்டு முதலில் பேசும்போது இவர் நம்பவில்லையாம். ஆனால் இவர் ஒரு போட்டோ சூட்டுக்கு வெளியே செல்லும்போது அங்கு இருந்தவர்களும் இப்படி ஒரு சீரியலுக்கு ஆடிஷன் போய் கொண்டிருக்குது நீங்க கலந்துக்கிறீர்களா என்று கேட்ட பிறகுதான் ஒரே சீரியலுக்கு இரண்டு வாய்ப்பு கிடைக்கிறதே என இவரும் ஆடிஷனில் கலந்திருக்கிறார். எத்தனையோ பேர் கலந்து இருந்தாலும் இவருக்கு தான் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நிஜத்திலும் அப்படி தானாம்
இவர் ஸ்கூல் படிக்கும்போதே ரசித்து பார்த்த சீரியல் என்றால் கனா காணும் காலங்கள் சீரியல் தானாம். அந்த சீரியல் பார்த்து இவருக்கும் ஜாலியான சீரியல் என்றால் ரொம்பவே பிடிக்குமாம். அதுபோல ஒரு சீரியலில் வாய்ப்பு கிடைத்தால் அதிலும் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் நீதானே பொன்வசந்தம் சீரியல் மட்டும் அமைதியின் சொரூபி கிடையாதாம். நிஜத்திலும் அமைதியாகத்தான் இருப்பாராம். ஆனால் தற்போது கிழிந்த ஜீன்ஸ் பேண்டோடு கிரவுண்டில் விளையாடும் அழகை பார்த்து தான் சிலர் கண்ணு வைத்து வருகிறார்கள். ஆனாலும் பெருந்தன்மையாக உங்க அம்மா கிட்ட சொல்லிருங்க நாங்க உங்கள ரொம்ப கண்ணு வச்சுட்டேம் என்று சொல்லியும் கொடுக்குறாங்க.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications