நான் சத்ரியன்.. அதனால் தான் தேவயானிக்கு கோவிலில் தாலி கட்டினேன்! இயக்குனர் ராஜகுமாரன் ஆதங்கம்
சென்னை: தமிழ் திரையுலகில் 'நீ வருவாய் என,காதலுடன், விண்ணுக்கும் மண்ணுக்கும், திருமதி தமிழ் போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் ராஜகுமாரன். இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகை தேவயானியின் கணவராகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார். சமீப காலமாக ராஜகுமாரன் பேசும் வெளிப்படையான கருத்துகளால் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் சமீபத்திய ஒரு பேட்டியில், தேவயானியுடன் நடைபெற்ற திருமணம் குறித்து ராஜகுமாரன் மனம் திறந்து பேசியுள்ளார். "நான் பல ஆண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகே இயக்குநராக மாறினேன். தேவயானி நடித்த படங்களில் ஷூட்டிங் நேரத்தில் அவருக்கு வசனங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருந்தார், அப்படி இருக்கும்போது ஏன் வீட்டை விட்டு வெளியேறி அவசரமாக திருமணம் செய்துகொண்டீர்கள்?" என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராஜகுமாரன், "ஒரு பெண் திருமணத்திற்கு தயாராகி, தன்னுடன் வாழ்க்கை நடத்த விரும்பும் ஒருவரை தேர்ந்தெடுத்தால், அதை குடும்பம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அது ஒரு ஆணின் கடமை. நான் பிறப்பால் ஒரு சத்திரியன். இந்த மண்ணின் மைந்தன்.
திருமணத்திற்கு முன்பாக கூட கோயிலில் நின்று, 'நாம் உண்மையிலேயே கல்யாணம் செய்ய வேண்டுமா, இல்லையென்றால் சாமி கும்பிட்டு விட்டு திரும்பிவிடலாமா?' என்று கேட்டேன். அதற்கு தேவயானி என்னை முறைத்தபடியே 'கல்யாணம் செய்ய வேண்டும்' என்று உறுதியாக சொன்னார். திருமணம் நடக்கப் போகும் 10 நிமிடங்களுக்கு முன்பும் கூட நான் அவரிடம் கேட்டேன்" என்று கூறினார்.
சினிமா தந்த அடையாளம்
தொடர்ந்து பேசிய ராஜகுமாரன், சினிமா தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம் குறித்து குறிப்பிட்டார். "எனக்கு சினிமா நிறைய கொடுத்திருக்கிறது. உலகின் எந்த மூலையில் சென்றாலும், பெரிய மனிதர்கள் என்னை அடையாளம் காணும் நிலையை இந்தத் துறையே தந்தது. பணத்திற்காக நான் எதையும் செய்ததில்லை.
பணம் கொடுத்தால் வேலை செய்வேன் என்பதும் இல்லை. மனம் விரும்பினால் மட்டுமே செய்வேன். இப்போது இயற்கை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சில விஷயங்களிலும் ஈடுபட்டுள்ளேன், அது கூட பணத்திற்காக அல்ல" என்று தெரிவித்தார்.
தேவயானியின் கணவரா? இயக்குநரா?
"பலருக்கு நான் தேவயானியின் கணவராக தான் தெரிகிறேன். அதே நேரத்தில் இயக்குநர் ராஜகுமாரனாகவும் பார்க்கப்படுகிறேன். இரண்டையும் நான் ஒன்றாகத்தான் ஏற்றுக்கொள்கிறேன். நாளை 'இனியா அப்பா', 'பிரியங்கா அப்பா' என்றெல்லாம் கூட அழைக்கலாம். அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை" என அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி செய்த செயல் குறித்தும் ராஜகுமாரன் பகிர்ந்துள்ளார். ஒருமுறை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்திற்கு சென்றபோது, அங்கு இருந்த ஒருவரிடம் "இவர் யார் தெரியுமா?" என்று ஆர்.பி.சௌத்ரி கேட்டதாகவும், அதற்கு "தேவயானி கணவர்" என்று பதில் வந்ததும், அவர் கடுமையாக கோபமடைந்ததாகவும் ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.
"முதலில் இவர் இயக்குநர் ராஜகுமாரன். அப்புறம்தான் தேவயானியின் கணவர். நம்ம கம்பெனியில் தான் முதல் படம் எடுத்தார்" என்று ஆர்.பி.சௌத்ரி பெருமையாக கூறினார் எனவும் அவர் தெரிவித்தார்.
தேவயானி - ராஜகுமாரன் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ராஜகுமாரன், தனது கருத்துகள் காரணமாக சமீப காலங்களில் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். சில பேட்டிகளில் அவர் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தின. இதனால் அவர் பேசும் ஒவ்வொரு விஷயமும் தற்போது கவனமாக பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications