பசியால் தவித்த பிரியங்கா...ஆறுதல் கூறிய அண்ணாச்சி...இதுக்கே இப்படியா??
சென்னை: நிகழ்ச்சி தொடங்கிய 20 நாளுக்குள் பிரியங்கா செய்த அலப்பறை வைரலாக பரவி வருகிறது.
சாப்பாட்டின் முக்கியத்துவத்தை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நன்றாக புரிய ஆரம்பித்து விட்டது போல.
நினைத்த நேரத்தில் விதவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் தற்போது படும்பாடு அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறது.

அதிகரிக்கும் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் தற்போது இந்த சீசனுக்கு ரசிகர்கள் அதிகமான ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் எல்லா சீசனிலும் ஒருசில போட்டியாளர்கள் செய்யும் செயல்கள் வைரல் ஆகிவிடும். இந்த சீசனில் பிரியங்கா செய்த செயல் பலரையும் யோசிக்க வைத்து வருகிறது .

பசி அனைவருக்கும் பொது தான்
இவர் நிஜத்தில் தான் இப்படி செய்கிறாரா?? அல்லது கண்டன்ட்க்காக செய்கிறாரா என்று தெரியாவிட்டாலும் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள் சாப்பாட்டின் அருமையையும் புரிய ஆரம்பித்து விட்டனர். என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பசி என்று வந்து விட்டால் எதுவும் பெரிதாக தெரியாது. சாப்பாடு மட்டுமே போதும் என்று தான் அனைவரையும் நினைக்கத்தோன்றும். அந்த மாதிரிதான் தற்போது கூட பிரியங்கா செய்திருக்கிறார். ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் பல மக்கள் பசியால் தவித்துக் கொண்டிருக்கும்போது, வசதி வாய்ப்புகளோடு நினைத்த நேரத்தில் விதவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பலருக்கும் கஷ்டப்படுபவர்களுடைய கஷ்டங்கள் தெரியாது. தற்போது அவர்களுக்கும் இப்படிதான் இருக்குமா பசி என்பதை புரிய வைத்திருக்கிறது, பிக்பாஸ் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video

அடடா வாய்க்கு எட்டவில்லையே!!!
நேற்றைய எபிசோட்டில் பிரியங்கா தனது வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்பும்படி பிக்பாஸ் இடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். இதை பார்த்த பல ரசிகர்களும் அவரை கலாய்த்தாளும், அப்போ நிஜத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் விதவிதமாக சாப்பாடு கிடைக்காதா??என்று பலர் கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாப்பாடு டீம் என்று ஒன்று இருக்கிறதே அவர்கள் அப்போ என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்,என்றும் கேட்டு வருகின்றனர். ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று சொல்வது போலத்தான் நேற்று பிரியங்காவிற்கு நடந்திருக்கிறது. ராஜுவிடம் ஒரு பெரிய பௌலில் நிறைய சாதம், ரசம் வைத்து உருளைக்கிழங்கு பொரியலும், ஆம்லெட் கேட்டிருந்தார்.

இதை எதிர்பார்க்கலையே அண்ணாச்சி
ஆனால் அனைத்தையும் பொறுமையாக செய்து முடித்து பிரியங்காவிடம் வந்து கொடுத்த ராஜூவை பிரியங்கா கட்டிப் பிடிக்கும் போது அந்த பாத்திரம் கீழே விழுந்து உடைந்து சாப்பாடு எல்லாம் வீணாகிப் போய் விட்டது. இதைப் பார்த்ததும் ஏற்கனவே பசியில் இருந்த பிரியங்கா மேலும் காண்டாகி விட்டார். அப்போது அவருக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக அண்ணாச்சி பேசிக்கொண்டிருக்கும்போது, பிரியங்கா எதிர்பாராதவிதமாக மனதிலிருக்கும் கஷ்டத்தை அவரை கட்டிப்பிடித்து காட்டிவிட்டார். ஆனால் ஒரு நிமிடம் இதை எதிர்பார்க்காத அண்ணாச்சி கூச்சப்பட்டு நெளிந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அண்ணாச்சியின் நடவடிக்கையைப் பார்த்து இவர் வேற லெவல் என்று ஆர்ப்பரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications