மடியில் குழந்தையோடு சூட்டிங் ஸ்பாட்டில் ஃபரீனா செய்த செயல்... அசந்து போன ரசிகர்கள்
சென்னை: குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள ஃபரீனா செய்த செயல் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.
குழந்தை பிறந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் இப்படி செய்யலாமா என்று ஒருசில நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சூட்டிங் ஸ்பாட்டில் ஃபரீனா செய்த செயல்தான் பல பெண்களுடைய வாழ்க்கையில் இருந்து வருகிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

சின்னத்திரையின் நீலாம்பரி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் மூலமாக வெண்பா எனும் கேரக்டரில் ரசிகர்களை மிரட்டி கொண்டிருக்கும் ஃபரீனா, இதற்கு முன்பு சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தில் இருந்தார். தற்போது சின்னத்திரையில் ஒரு நீலாம்பரியாக வலம் வந்து கொண்டிருந்தாலும் இவருடைய கேரக்டருக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்கள் எல்லாமே இவருடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் இவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னதான் ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் இவர் கண்டுகொள்வதில்லை.

அதிகரித்த நெகட்டிவ்வர்ஸ்
ஜீ தமிழில் ஒளிபரப்பான அஞ்சறைப்பெட்டி சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது அணியும் ஆடைகளையும் அணிகலன்களையும் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் ஆரம்பத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் இவர் நடிக்கும் போது இவர் தான் கதாநாயகி என்று இவருக்கு அதிகமாக ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல இவர்தான் வில்லி என்று தெரிந்ததும் இவருக்கு அதிகமான நெகட்டிவர்ஸ் தோன்ற ஆரம்பித்து விட்டனர்.

ஆண் குழந்தை பிறந்துள்ளது
சீரியல்களில் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு திருமணம் முடிந்தது பல ரசிகர்களுக்கு தெரியாமல்தான் இருந்தது. இவருடைய கர்ப்பமான செய்தியை கேட்டு பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு பிறகு தற்போது இவர் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்து இருக்கும் நேரத்தில் சீரியல்களில் இருந்து இவர் விலகி விடுவார் என்று ஒரு சில ரசிகர்கள் பீல் பண்ணி வந்தனர். ஆனால் அப்படி எல்லாம் நான் போக மட்டேன் என்று இவர் தெளிவாக கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் வீடியோ
குழந்தை வயிற்றில் இருக்கும் போது பல போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது ஃபரீனா குழந்தை பிறந்த பிறகும் ஷீட்டிங் ஸ்பாட்டில் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு சில ரசிகர்கள் ஃபரீனாவின் இந்த வீடியோவுக்கு பல பெண்கள் தற்போது இப்படித்தான் வேலையும், குழந்தைகளையும் பார்த்து வருகிறார்கள் என்று ஃபீல் பண்ணி இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில ரசிகர்கள் இதையும் வீடியோ எடுக்க ஆரம்பித்து விட்டீர்களா?? என்று வீம்புக்கு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications