உனக்கு புத்தி சொல்கிற அளவுக்கு எனக்கு நிறையவே புத்தி இருக்கு..இசைவாணியிடம் தாமரை வாக்குவாதம்
சென்னை: சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் இன்றைய முதல் ப்ரமோ ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.
இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
தாமரையும் இசை வாணியும் தொடங்கும் கச்சேரி கலை கட்டுமா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

முதல் ப்ரமோ
இன்றைய ப்ரமோவில் வழக்கம்போல சண்டைகள் இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி கிடைத்திருக்கிறது. தாமரை தன்னுடைய மனதில் இருப்பதையெல்லாம் டாஸ்க் என்கிற பெயரில் இசைவாணியிடம் கொட்டிவிட்டார். நீங்க என்னதான் பேசினாலும் நான் அதை கண்டுகொள்ள மாட்டேன் என்று இசைவாணி முகத்தை எங்கேயோ திருப்பிக் கொண்டு இருந்ததை பார்த்து தாமரைக்கு மட்டுமல்லாமல் தாமரையின் ரசிகர்களுக்கும் கோபத்தை தூண்டி இருக்கிறது.

இசைவாணிக்கு குவியும் அறிவுரை
கருத்து சொன்னா கேட்கணும் அத விட்டுட்டு இப்படி முகத்தை காட்ட கூடாது என்று தாமரையின் ரசிகர்கள் இசைவாணியிடம் அறிவுரை கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த வாரம் இசைவாணி வெளியே சென்று விடுவார் என்று தங்களுடைய மனக் குமுறல்களை கொட்டி வருகின்றனர். ஏற்கனவே ரசிகர்களின் வாக்கு அடிப்படையில் இப்ப வரைக்கும் இசைவாணி தான் கடைசி இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அடுத்தடுத்து இவர் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசிகர்களே இந்த வாரம் இவரை அனுப்பி வைத்து விடுவார்கள் போல.

பாட்டுப்பாடி வம்பிழுத்த தாமரை
கண்ணாடி டாஸ்க்கில் போட்டியாளர்களின் கேரக்டரை கண்ணாடி காட்டுவது போல எதிர் போட்டியாளர்கள் கேரக்டரை தங்களுடைய மனதில் இருக்கும் கருத்துக்களை போட்டியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் இசை வாணியின் மீது தனக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை தாமரை எடுத்துக் கூறி வருகிறார். 'உனக்கு புத்தி சொல்கிற அளவுக்கு எனக்கு நிறையவே புத்தி இருக்கு' என்றும் அவருடைய முகத்துக்கு நேராகவே அவரை கலாய்த்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தாமரை கன்னங்கள் என்று இசைவாணி பாட்டுப் பாடியும் வம்பு இழுத்திருக்கிறார் தாமரைச்செல்வி.

கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்
அதற்குப் பிறகு டாஸ்க் முடிந்து அனைவரும் அமர்ந்து இருக்கும் போது தாமரையைப் பார்த்து இசைவாணி என்ன நக்கலா பாக்குற என்று முகத்தில் கெத்தோடு பேசி இருக்கிறார். இவர்கள் இருவரின் சண்டையை பார்த்ததும் ரசிகர்கள் இது உண்மையான சண்டைதானா??அல்லது ப்ரமோக்காக இப்படி செய்கிறார்களா?? என்று கலாய்த்து கொண்டிருந்தாலும், பலருடைய கோவங்கள் இவர்கள் இருவரின் மீதும் திரும்பியிருக்கிறது. அதனாலேயே இவர்கள் இருவரையுமே இந்த வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மனக் குமுறல்களை கொட்டி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications