தடைகளைத் தகர்த்து...சர்வைவரில் இறுதி நிலைக்கு செல்லும் முதல் பெண் போட்டியாளர்
சென்னை: சர்வைவரில் இறுதி கட்டத்துக்கு தேர்வான முதல் போட்டியாளருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே இவர் தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் இவருடைய போஸ்ட் அனைவருக்கும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
எவ்வளவோ தடைகளைத் தாண்டி இன்று இந்த நிலையில் வந்திருக்கும் பெண் போட்டியாளரை சக போட்டியாளர்களும், ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் ஒரு ரியாலிட்டி ஷோ வாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலர் உண்ண உணவுக்காகவும், இருக்கும் இடத்திற்கும் ஆரம்பத்திலிருந்து பல போராட்டங்களை கடந்து பல வெற்றிகளை பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக வாகை சூட போவது யார் என்று ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

போட்டியாளர்களின் திறமை
சர்வைவர் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயிக்கும் போட்டியாளருக்கு ஒரு கோடி பரிசு தொகையும் பல சிறப்பு பரிசுகளும் இருக்கும் நிலையில் இந்த பரிசுக்காக மட்டுமல்லாமல், ரசிகர்களின் மத்தியில் தங்களுடைய திறமையை நிரூபிப்பதற்காக பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். கடல் கடந்து இந்த நிகழ்ச்சி காட்டுக்குள்ளே நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டியாளர்கள் தங்களுடைய திறமைகளை நிரூபித்து வந்தனர் .

தளராத தன்னம்பிக்கை
போட்டியாளர்கள் ஆரம்பத்தில் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தற்போது தங்களுடைய தனிப் பவரை காட்டி வருகின்றனர். அதில் பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால் ஒவ்வொரு முறையும் வெளியேறும் தருணத்தில் விளிம்பு நிலையில் இருந்தாலும், மீண்டும் அந்த தடையை உடைத்து விளையாட்டுக்குள் வந்திருக்கும் போட்டியாளர் தான் விஜயலட்சுமி. இவரை ரசிகர்கள் விஜி என்று செல்லமாக அழைத்து வந்தாலும் இவர் தற்போது இந்த நிகழ்ச்சியில் வந்திருக்கும் தூரம் அதிகம் தான்.

முதல் பைனல் போட்டியாளர்
ரசிகர்களுக்கு அதிகமாக மனதைக் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் விஜி தற்போது ஃபர்ஸ்ட் பைனல் லிஸ்டாக சேவ் ஆகி இருக்கின்றார். இது இவருடைய ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுவதாக இருக்கின்றது. இன்ஸ்டாகிராமில் விஜியின் ஐடியில் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் கூறி போஸ்ட் போடப்பட்டுள்ளது. இதை பார்த்ததும் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் பலர் நீங்கள் ஒரு சூப்பர் மாம் மட்டுமல்ல சூப்பர் உமன் தான் என்று கூறி வருகின்றனர். ஆனால் வழக்கம்போல ஒரு சில நெகட்டிவ்வர்ஸ், நெகட்டிவ் கமெண்ட்களையும் அனுப்பி வருகின்றனர்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications