Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜமாதா கெட்டப்பில் கலக்கும் கேப்ரில்லா.. ஏங்க வைக்கறீங்களே.. உருகும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : புதுயுக ராஜமாதா கெட்டப்பில் பட்டையை கிளப்பி இருக்கும் கேப்ரில்லாவிருக்கு அவருடைய ரசிகர்கள் லைக் பட்டனை தெறிக்க விட்டு வருகின்றனர்.

ஆட்டம் போட்டு போர் அடித்து விட்டது என சும்மா உம்முன்னு வந்து நின்னாலும் ஜிவ்வுனு போதையேத்துற மாதிரி இருக்கீங்க என்றும் கேப்ரில்லாவை ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

செக்க சிவந்த உடையில் சிலிர்க்கவைக்கும் அழகை காட்டி பார்க்காதவர்களையும் பார்க்க தூண்டும் வகையில் இருப்பதாகவும் பலர் சிலாகித்துள்ளனர்.

9 வயதிலேயே

9 வயதிலேயே

தன்னோட ஒன்பதாவது வயதில் விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்த இவர் இப்ப வரைக்கும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக ஏழாம் வகுப்பு c' பிரிவு என்னும் சீரியலில் நடித்திருக்கிறார் .இந்த சீரியல் விஜய் டிவியில் ஒலிபரப்பப்பட்டு வந்தது .இதில் கேபி என்னும் கேரக்டரில் நடித்திருந்தார்.

செம பாஸ்ட்

செம பாஸ்ட்

முதல் சீரியலிலே குழந்தைகளின் மனதைக் கவர்ந்து குழந்தை நட்சத்திரமாக சிறியவர்கள் முதல் பெரியவர்களையும் கவர்ந்து இழுத்து விட்டார். ஆனால் சீரியலுக்கு முன்பே விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 ஜூனியரில் ஆட்டம் போட்டு பார்ப்பவர்களை மிரள வைத்து விட்டார்.தற்போது கூட இவருடைய ஆட்டத்தை பார்த்து இவருடைய ரசிகர்கள் நம்ம கேபி அந்த வயசிலேயே இப்படியா என ஷாக்காகி இருக்கின்றனர் .

டான்ஸை விடவில்லை

டான்ஸை விடவில்லை

அதற்குப் பிறகும் டான்ஸை இவர் விட்டுவிடுவதாக இல்லை.ஜோடி நம்பர் ஒன்னில் மீண்டும் 2013 இல் கலந்து கொண்டார். இவருக்கு நடிப்பை விடவும் டான்ஸில் இருந்த ஆர்வத்தின் காரணமாக டான்ஸ் முறைப்படி கற்றிருக்கிறார் .அதனால்தான் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் செமையாக ஆட்டம் போட்டு அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

பிக் பாஸ் ரசிகர்கள்

பிக் பாஸ் ரசிகர்கள்

இவருக்கு சீரியலை தாண்டியும் ரசிகர்கள் பிக்பாஸில் உருவாகி விட்டனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 வது சீசனில் கடைசி வரைக்கும் இந்த வீட்டிற்குள் இருந்து தனக்கு இருக்கும் ரசிகர்களின் கேத்தை நிரூபித்துவிட்டார். நான் சின்னத்திரையில் மட்டும் அல்ல வெள்ளித்திரையிலும் களமிறங்கி இருக்கிறேன் என 3 திரைப்படத்தில் சுமி கேரக்டரில் தனுஷுடன் பள்ளி செல்லும் குழந்தையாக நடித்திருந்தார்.

அப்பா

அப்பா

அதற்குப் பிறகு சென்னையில் ஒரு நாள் ,அப்பா போன்ற சில படங்களில் ஒருசில சீன்களில் வந்தாலும் இவருடைய ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆகவும் கலக்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியும் முடிவடைந்து விட்டாலும் தற்போது மீண்டும் விஜய் டிவியில் வந்திருக்கிறார் .

சூப்பர் திறமை

சூப்பர் திறமை

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தன்னுடைய டான்ஸ் திறமையை நிரூபிக்காமல் விடமாட்டேன் என கங்கணம் கட்டிக்கொண்டு ஹெவி பர்பாமன்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார் .அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிக்காக இவர் எடுக்கும் ரிகர்சல்களையும் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இதனை பார்த்ததும் ஹாப்பியான அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு கமெண்ட் மூலம் கவிதை மழைகளை பொழிந்து வருகின்றனர்.

புது கெட்டப்

புது கெட்டப்

கொஞ்ச நாட்களாக டான்ஸ் வீடியோக்களை போஸ்ட் பண்ணி வந்த இவர் தற்போது சிவப்பு வண்ண மாடல் உடையில் கம்பீரமாக போஸ் கொடுத்திருக்கும் அழகைப்பார்த்து அவருடைய ரசிகர்கள் என்ன ராஜமாதா நீங்களா என கலாய்த்து வருகின்றனர் .கெத்தான கெட்டப்பில் லேசான புன்னகையில் பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார். இவருடைய இந்த போஸ்ட் பார்த்து சிலர் கவிதைகளைக் கமெண்டுகளாக கொட்டுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+