Gouri Kishan: பிரச்சனைகளுக்கு மத்தியில் கௌரி கிருஷ்ணன் வெளியிட்ட முக்கிய அறிக்கை! ஓபனா இப்படி பேசிட்டாங்களே!
சென்னை: கோலிவுட்டில், நடிகை கௌரி கிஷன் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் அங்கு எழுந்த 'உருவக்கேலி' (Body Shaming) விவகாரம் தான் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. அவர் நடித்துள்ள 'அதர்ஸ்' திரைப்படம் நேற்றுத் திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்தக் கண்டன சம்பவத்தால் படமும், கௌரி கிஷனும் பெரிய கவனத்தைப் பெற்றுள்ளனர்.

சண்டையின் துவக்கம்
படத்தின் செய்தியாளர் சந்திப்பில், யூடியூபர் ஒருவர் அப்படத்தின் கதாநாயகனிடம், "நடிகையை தூக்கினீர்களே, அவரது உடல் எடை என்ன?" என்ற கேள்வியை எழுப்பினார். இதைத் தொடர்ந்து, உருவக்கேலியாக அமைந்த இந்த கேள்விக்கு நடிகை கௌரி கிஷண் உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்தார்.
கௌரியின் பதிலடி
கௌரி கிஷன், கேள்விகேட்ட அந்த நிருபரிடம், "நீங்க எப்படி அதைக் கேட்கலாம். அதைத் தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்" எனக் கேட்க தக்க பதிலடி கொடுத்திருந்தார். இந்த சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து, "செய்தியாளர் சந்திப்பில் இப்படியான உருவக்கேலி கேள்விகளை எழுப்புவது தவறு" என நேர்காணல்களில் கௌரி கிஷன் தொடர்ந்து பேசியிருந்தார். அவருக்கு பல நடிகைகள், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர் சங்கம் என தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
கௌரி கிஷனின் நெகிழ்ச்சி அறிக்கை
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தனக்குக் கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தும், இந்தப் பிரச்சனையின் ஆழத்தை வலியுறுத்தியும் கௌரி கிஷண் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். "இதன் பின்னணியில் உள்ள பெரிய பிரச்னையை ஒப்புக்கொள்வது முக்கியம் என்று நினைக்கிறேன். அதன்மூலம் கலைஞர்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையே எத்தகைய உறவை ஊக்குவிக்க விரும்புகிறோம் என்பதை நாம் அனைவரும் சேர்ந்து சிந்திக்க முடியும்" என்று கௌரி குறிப்பிட்டிருக்கிறார்.
உருவக்கேலி தவறு
"விமர்சனம் ஒரு பகுதி என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால், ஒருவரின் உடல் அல்லது தோற்றத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிவைக்கும் கருத்துகள் அல்லது கேள்விகள் எந்தச் சூழலிலும் தவறானவை" என்று கௌரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். "நான் நடித்த படத்தை பற்றிய கேள்விகளை கேட்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதே ஆக்ரோஷமான தொனியில் ஒரு ஆண் நடிகரிடம் இதே கேள்வியை கேட்பார்களா என்ற கேள்வி எனக்கு எழுகிறது" என்று ஆணாதிக்க சிந்தனையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தைரியம்
"கடினமான சூழலில் என் நிலைபாட்டில் நான் உறுதியாக நின்றதற்காக நான் பெருமைப்படுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல, இதே போன்ற அனுபவத்தை எதிர்கொண்ட யாருக்கும் முக்கியமானது" என்றும் கூறியுள்ளார். "நமது அசௌகரியத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளோம், தவறு செய்யப்பட்டால் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டுள்ளோம்" என்று தன் உரிமையைப் பதிவு செய்துள்ளார்.
பிரபலங்களின் ஆதரவு
இந்தச் சம்பவத்திற்கு பிறகு திரைத்துறையினர் பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகை ராதிகா சரத்குமார், கௌரி கிஷனைப் பாராட்டி, அவருக்கு இத்தகைய கேள்விகளைக் கேட்ட நபரைக் குறித்து, "press club இந்த shanker என்ற நபரை தடை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், இயக்குநர், கதாநாயகன் மற்றும் தயாரிப்பு தரப்பு கௌரிக்கு ஆதரவாக நிற்காதது ஏமாற்றம் அளிப்பதாகவும் ராதிகா தெரிவித்திருந்தார்.
நாசர்
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். பத்திரிகையாளர் சந்திப்புகளில் "சில வக்கிரமான நபர்கள்" நடிகைகளிடம் அவமானப்படுத்தும் வகையில் கேள்வி கேட்பதுக் கவலைக்குரியது என்று அவர் கண்டித்திருந்தார். திரைத்துறையில் பெண்களின் மரியாதை மற்றும் சுயகௌரவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாசர் வலியுறுத்தியிருந்தார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், "அவரின் செயல் அருவருப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது" என்று கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இறுதியாக, சென்னை பிரஸ் கிளப், அம்மா சங்கம் (மலையாளத் திரைப்பட நடிகர் சங்கம்), தென்னிந்திய நடிகர் சங்கம், மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்கள் அளித்த அசைக்க முடியாத ஆதரவுக்குக் கௌரி கிஷன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications