நாளை ஹரிஷ் கல்யாண் திருமணம்.. கடைசி நேரத்தில் வருங்கால மனைவியை குறித்து இப்படி ஒரு பதிவா?
சென்னை: ஹரிஷ் கல்யாண் திருமணம் நாளை நடைபெற இருப்பதால் இன்று பிரஸ்மீட்டில் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூறி தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.
ஹரிஷ் கல்யாண் நிச்சயதார்த்தம் இந்த மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தன்னுடைய திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வந்து கலந்து கொள்ளுமாறும் தனக்கு இதுபோல எப்போதும் சப்போர்ட் கொடுக்க வேண்டும் என்றும் ஹரிஷ் கல்யாண் கூறியிருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண் திரைப்படங்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஹரிஷ் கல்யாண் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். அதற்கு பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் 2010 இல் வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தில் அன்பு கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹரிஸ் கல்யாண் அதற்குப் பிறகு அறிந்து அறிந்து, சட்டப்படி குற்றம், வில் அம்பு ,தாராள பிரபு என பல நடித்திருக்கிறார். தற்போது இவர் டீசல் திரைப்படத்தை நடித்து முடித்து இருக்கிறார் .இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இருக்கிறது.

வருங்கால மனைவியை குறித்த பதிவு
பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன்றின் வைல்ட் கார்ட் கண்டஸ்டண்டாக உள்ளே வந்த ஹரிஷ் கல்யாண் இரண்டாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார். தற்போது இவர் திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார். தன்னுடைய வருங்கால மனைவியின் புகைப்படத்தை கடந்த மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். இது ஒரு நிச்சயப்படுத்தப்பட்ட திருமணம் அவர் பெயர் நர்மதா உதயகுமார் .நாங்கள் எங்கள் குடும்பத்தின் மூலமாக சந்தித்தோம். ஒருவரை ஒருவர் விரும்பினோம். அப்படித்தான் இந்த பயணம் தொடங்கியது. இப்படி ஒரு வாழ்க்கை துணை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அதில் தனது திருமணத்தையும் வருங்கால மனைவியை பற்றி பதிவினை வெளியிட்டு இருந்தார்.

திருமணம் எங்கு நடக்கிறது
இந்த நிலையில் இன்று நாளை தன்னுடைய திருமணம் சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் திருமணம் நடைபெறும் என்று ஹரிஷ் கல்யாண் தந்தை பிரஸ் மீட்டில் கூறியிருந்தார் .அதோடு அவர் திருமணத்திற்கு அனைவரையும் அழைத்ததோடு ஹரிஷ் கல்யாண்க்கு அனைவரும் ஆசீர்வாதம் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அடுத்ததாக பேசிய ஹரிஷ் கல்யாணம் தனது திரை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து ஆதரவு அளித்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்ததோடு தனிப்பட்ட முறையில் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்தார்.

வாழ்த்துக்களோடு ஆசிர்வாதங்கள்
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண்க்கு அதிகமான பெண் ரசிகைகள் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு ஹரிஷ் கல்யாண்க்கு திருமணம் என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனாலும் ஹரிஷ் கல்யாண்க்கு வாழ்த்துக்கள் மட்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பலர் தங்களுடைய ஆசிர்வாதங்களை கமெண்ட் களில் தெரிவித்து வருகிறார்கள். அதுபோல இவருடைய திரைப்படங்கள் வெற்றியடைவும் இந்த நேரத்தில் அதிகமானோர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications