போங்க..கேளுங்க...முடியாது..ரிப்பீட்டு...அண்ணாச்சியின் அட்ராசிட்டி..அதிர்ந்த போட்டியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இமான் அண்ணாச்சி ரூம் மேட்டுக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

நேற்றைய பிக் பாஸ் எபிசோட் வைல்டுகார்டு கன்டஸ்டன்ட் ஆக வீட்டிற்கு வந்திருக்கும் சஞ்சீவ் ஒரு சீனியர் ஆர்டிஸ்ட் என்று கூட பார்க்காமல்... பெட்ரூம் நடுவில் உட்கார வைத்துக்கொண்டு... எங்கே அவருக்கு இடம் ஒதுக்குவது என்று... ஆரம்பமே இப்படியா..! என்று செய்வதறியாமல் சஞ்சீவ் முழித்துக்கொண்டிருந்தது பார்ப்பதற்கு பாவமாகத்தான் இருந்தது.

பிக்பாஸ் போட்டியாளராக உள்ளே நுழைந்தவுடன் இமான் அண்ணாச்சி வந்தால் தான் உள்ளே வருவேன்.. என்று சொல்லும் அளவிற்கு மரியாதை வைத்திருந்த ஒருவர் இவ்வாறு நடந்து கொள்கிறாரே..!? என மனதுக்குள்ளேயே நொந்திருப்பார்.

புரிந்து கொள்ள முடியாதவராக இருக்கிறாரே

புரிந்து கொள்ள முடியாதவராக இருக்கிறாரே

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் இமான் அண்ணாச்சி பற்றி.. இவர் ஒரு கலகலப்பான, நகைச்சுவை குணமிக்க, வெள்ளந்தியான மனிதர் என்று அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் நானும் ஒரு விளையாட்டுக்காரன் தான் என்று பல முறை தன் செயல்கள் மூலம் இமான் அண்ணாச்சி நிரூபித்து வந்து கொண்டிருக்கிறார். சாணக்கியனாகவும், சகுனியாகவும் இவர் ஆடும் ஆட்டத்தை பார்க்கும் சக போட்டியாளர்களே இவரை புரிந்து கொள்ளமுடியாமல் குழம்பி வருகின்றனர்.வயதில் பெரிய மனிதர் என்று அனைவரும் இவரை மதித்து நடக்கும் போது நேற்று வீட்டிற்குள் புதிதாக வந்த சஞ்சீவி க்காக இவர் அப்படி நடந்து கொள்ளவில்லை.

முதல்நாளே வாக்குவாதம்

முதல்நாளே வாக்குவாதம்

சஞ்சீவ் அவரது லக்கேஜ் உடன் பெட்ரூமிற்கு அழைத்து வந்த வருண், அபிநய்,அபிஷேக், யார் யார் எந்த இடத்தில் தூங்குவார்கள் என்று விளக்கி சொல்லிவிட்டு,உங்களுக்கு எந்த இடம் வேண்டும் எனக்கேட்க.. இமான் அண்ணாச்சி பக்கத்திலே இருந்து விடுகிறேன் என்று சஞ்சீவ் பாசத்தோடு கூறினார்.அப்பொழுது வந்த இமான் அண்ணாச்சி தனக்கு பக்கத்தில் சஞ்சீவ்க்கு இடம் தருவதில் பிரச்சனையில்லை.. ஆனால்...தாமரை இடம் மாற்ற வேண்டும், அவரிடம் பேசுங்கள்... என்று அபினவ்யை மாற்றி மாற்றி கூறினார்.

தாமரையை வம்புக்கு இழுத்த அண்ணாச்சி

தாமரையை வம்புக்கு இழுத்த அண்ணாச்சி

அபிநய் தாமரை இடம் பேசியபோது..தான் வந்ததிலிருந்து அந்த இடத்திலேயே இருப்பதாகவும், வேறு இடம் மாற்றினால் தனக்கு தூக்கம் வராது என்று நியாயமாக கூறினார். அபிநவ் இதை அண்ணாச்சியிடம் எடுத்து சொல்லியும்...கவுண்டமணி செந்தில் காமெடி போல 'தனக்கு இடம் தருவதில்லை பிரச்சனை இல்லை.. தாமரையிடம் பேசுங்கள்...'எனக்கு இடம் தருவதில் பிரச்சனை இல்லை.. தாமரையை மாற்றுங்கள்.. என்று தாமரை சொன்னால் அப்படியே கேட்க வேண்டுமா..? என்று மாறி மாறி சொல்லிக்கொண்டே இருந்தார்.

விடாப்பிடியான கருத்து

விடாப்பிடியான கருத்து

சக போட்டியாளர்கள் இமான் அண்ணாச்சியை முறைத்துக் கொள்ளவும் முடியாமல், தாமரையின் நியாயமான கோரிக்கையை நிராகரிக்கவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர். நிகழ்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் அண்ணாச்சியின் அட்ராசிட்டி கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்,அவருக்கு யாரும் செக் வைப்பதில்லை என்றும் கூறிவருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பலருடைய பல முகங்கள் வெளிபட்டு வருவதால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அண்ணாச்சி எந்த காமெடி ஷோவை தொகுத்து வழங்கினாலும் அவரை டெர்ரராக தான் பார்க்க தோன்றும் என்று தெரிவித்து வருகின்றனர். சஞ்சீவ் தனக்கு பிடித்த போட்டியாளராகவும்,மிகவும் மதிக்க தக்க மணிதராகவும் அண்ணாச்சியை ஒன்றுக்கு இரண்டு முறை காட்டிக்கொண்டாலும், அண்ணாச்சிக்கு என்னவோ சஞ்சீவ் மீது பெரிய அளவில் ஈடுபாடு இருப்பதாகவே தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+