இருந்தேன் வறுமையில...வளர்ந்து வந்தேன் திறமையில.. கலாய்ப்பவர்களுக்கு பதில் சொன்ன இசைவாணி
சென்னை: தன்னை பற்றி அதிகமாக நெகட்டிவ் கமெண்டுகள் வருவதால் அதற்கு பதில் சொல்லும் விதமாக பாட்டுப்பாடி சொல்லி இருக்கிறார் இசைவாணி.
Recommended Video
இசைவாணியின் மிரட்டலான பாடலைப் பார்த்து பல ரசிகர்கள் கொஞ்சம் மிரண்டுதான் போகிறார்களாம்.
இசைவாணியின் தீவிரமான ரசிகர்கள் அவருடைய பாடல்கள் எப்போது வெளியாகும் என்று ஆர்வத்தோடு கேட்டு வருகிறார்கள்.

கலக்கும் கானா பாடகி
இந்நிகழ்ச்சியில் அறிமுகமாகி கானா பாடகியாக பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமான இசைவாணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு மேடை நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களில் பின்னணி பாடகியாகவும் இருந்துள்ளார். இவருடைய பாடல்களை தெரிந்தவருக்கு இவர்தான் இந்த பாடல்களை பாடினார் என்று தெரியாமல் இருந்து வந்தது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவர் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். கதை சொல்லும் டாஸ்க்கில் இவர் தன்னுடைய இளமைக்கால கதையை சொல்லி அனைவருடைய அனுதாப அலையும் பெற்றுவிட்டார்.

ரசிகர்களின் கருத்து
இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இமான் அண்ணாச்சிக்கும், இசைவாணிக்கும் அடிக்கடி பிரச்சனைகளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் பிடிக்காமல் தான் நடந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் மனதிற்குள்ளே கோபத்தை வைத்துக்கொண்டு வெளியே சிரித்த முகமாக இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வெற்றிக்கு கிடைத்த வரவேற்பு
தன்னுடைய திறமையை தனக்கான இடத்தில் சிறப்பாக காட்டவேண்டும் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் ஒரு சில போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ஒரு சில நபர்களும் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் தான். அந்த மாதிரிதான் இசையும் தன்னுடைய காந்தக் குரலால் கானாபாடல் மூலம் கலக்கி வருகிறார். இவருடைய பாட்டுக்கு பலபேர் ரசிகர்களாக இருக்கின்றனர். ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய விளையாட்டை சரியாக விளையாடவில்லை, தன்னுடைய கருத்துக்களை சரியாக எடுத்து உரைக்கவில்லை என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் 50 நாட்கள் வரைக்கும் இவர் இந்த வீட்டிற்குள் இருந்தது இவருடைய வெற்றிக்கு கிடைத்த வரவேற்பு தான் என்று பலர் கூறி வருகின்றனர்.

பாடலில் பதில்
தற்போது மார்கழி மாத மக்கள் இசை நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி பிசியாக இருந்து வரும் இசைவாணி தான் சொந்தமாக இயக்கியிருக்கும் பாடலை பாடி அனைவருக்கும் மிரட்டல் விடுத்திருக்கிறார். இவருடைய கானா பாடல் பலருக்கும் பெரிதாக இருந்தாலும் இவருடைய காந்தக் குரல் பலரையும் வசீகரித்து விடுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் ரசித்து உள்ளது. ஆனாலும் இவருக்கு அதிகமான நெகட்டிவ்வர்ஸ் இருந்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இவருக்கு எதிராக கமெண்டுகளை அனுப்பும் ரசிகர்களுக்கு தன்னுடைய புது பாடல் பதிலாக இருக்கும் என்று இவர் கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications