பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு ரொம்ப பிடித்தது இவர்தான்...மனம்திறந்த இசைவாணி
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரை அதிகமாக பிடிக்கும் என்ற ரசிகர்களின் கேள்விக்கு இசைவாணி பதிலளித்திருக்கிறார்.
சிரித்த முகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இசைவாணி தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
பாவனியைப் பற்றிய ரசிகர்களின் கேள்விக்கு இவருடைய ஜாலியான பதிலை கேட்டு ரசிகர்கள் என்ஜாய் பண்ணி இருக்கின்றனர்.

இசைவாணியின் வெளியேற்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் ஆகி வெளியே சென்று கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பதினெட்டு போட்டியாளர்கள் அறிமுகமாகி, தற்போது இதுவரைக்கும் ஆறு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர், அதில் ஒரு போட்டியாளர் மட்டும் மீண்டும் உள்ளே வந்து இருக்கிறார், இந்த நிலையில் கானா பாடகராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான இசை வாணியும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார். இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாகத்தான் இருந்துவருகிறது.

பாவனியின் மீது இருக்கும் பாசம்
இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்ற பிறகு முதல் முறையாக தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் பலர் பலவிதமான கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு ரசிகர் உள்ளே இருக்கும்போது உங்களுக்கு அதிகமாக பிடித்த நபர் யார் என்று கேள்வி கேட்டு இருக்கின்றனர். அதற்கு அவர் பாவனி தான் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாவனி பற்றி கூறுங்கள் என்று மற்றொரு ரசிகர்கள் கேட்டதற்கு பாவனி ரொம்பவே ஸ்வீட்டான பர்சன் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தன்னுடைய பாசத்தை தெரிவித்திருக்கிறார்.

தீராத சண்டை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து இவருக்கும் அண்ணாச்சிக்கு எப்போதுமே வாய்க்கால் வரப்பு பிரச்சனை தான் நடந்துகொண்டிருந்தது. ஆனால் வெளியே செல்லும் போது இவர் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பும்போது அண்ணாச்சியுடனும் சகஜமாக பேசிக் கொண்டுதான் வெளியே சென்றார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அண்ணாச்சி இசைவாணி வெளியே சென்ற பிறகு அவரைப் பற்றி குறை கூறிக்கொண்டு இருந்தார். இது ரசிகர்களின் மத்தியில் சிறு முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

குறையாத பாசம்
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு இசைவாணி வெளியே சென்ற பிறகு கண்கலங்கியபடி அந்த வாசலில் அருகில் நின்றுகொண்டிருந்த பாவனியை பார்த்து ரசிகர்கள் உச்சி கொட்டி வந்தனர். ஏனென்றால் அதிகமாக பாவனியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக வெளியேறிக் கொண்டிருந்தால் பாவனியைப் பற்றி பலர் மீம்ஸ்களில் கலாய்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு எப்படியும் இசைவாணி அந்த மீம்ஸ்களை எல்லாம் பார்த்து இருந்தாலும் பாவனிக்கு ஆறுதலாக அவர் பேசியது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications