கல்யாண தேதியை அறிவித்த பிக் பாஸ் ஜூலி.. பட்டபாடுக்கு நிம்மதி கிடைத்து விட்டது.. குவியும் பாராட்டு
சென்னை: 2017 ஆம் ஆண்டு, தமிழகத்தின் கவனத்தை திரும்பிப் பார்க்க வைத்த ஒரு மிகப்பெரிய மக்கள் எழுச்சி என்றால் அது ஜல்லிக்கட்டு போராட்டம். சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தில், ஒரு இளம் பெண்ணின் குரலும் முகமும் நாடு முழுவதும் கவனம் பெற்றது. அந்தப் பெண் தான் இன்று அனைவரும் அறிந்த ஜூலி.
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், மேடையில் துணிச்சலாக பேசிய ஜூலி, இளைஞர்களின் பிரதிநிதியாக பார்க்கப்பட்டார். சமூக வலைதளங்களில் அவரது பேச்சுகள் வைரலானதைத் தொடர்ந்து, "மெரினா ஜூலி" என்ற பெயரே அவரின் அடையாளமாக மாறியது. அந்த புகழ், அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

அதன் தொடர்ச்சியாக, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஜூலி. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பிறகு, அவரின் வாழ்க்கை முற்றிலும் மாறியது. ஆரம்பத்தில் ஆதரவு பெற்ற ஜூலி, பின்னர் சில சர்ச்சைகள், ஓவியாவுடன் மோதல்கள், வாக்குவாதங்கள் காரணமாக விமர்சனங்களுக்கும் ஆளானார்.
ஓவியா உடன் அவர் சண்டை போட்டது எல்லாம் அப்போது பெரிதாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் அதிகமாக சோசியல் மீடியா இல்லை என்றாலும் அதற்கு பிறகு ஜூலி சோசியல் மீடியாவில் பதிவுகள் போட தொடங்கிய பிறகு அதிகமான விமர்சனங்களையும் சந்தித்து வந்தார். ஆனால் பிக் பாஸ் முதல் சீசனில் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டாலும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய நெகடிவ் எல்லாம் அழித்துவிட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, ஜூலி குறித்து பல வதந்திகளும் பரவின. "புகழ் கிடைத்ததும் மாறிவிட்டார்", "அரசியல் பின்னணி", "பணம், விளம்பரம்" போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றை எல்லாம் நேரடியாக எதிர்கொண்டு, தன்னுடைய பாதையில் தொடர்ந்து பயணித்தார் ஜூலி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, ஜூலி சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார். அதோடு மட்டுமல்லாமல், சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்ததன் மூலம் நடிகையாக தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்தார். நடிப்பில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், சமூக ஊடகங்களில் தனது இருப்பை தொடர்ந்து வைத்திருந்தார்.
இந்நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஜூலி வெளிப்படையாக பேசினார். முகமது ஜக்ரீம் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும், இருவரும் புரிதலுடன் வாழ்க்கையை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது, தனது திருமண தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி, வரும் ஜனவரி 16, வெள்ளிக்கிழமை மாலை, சென்னை பரங்கிமலையில் அமைந்துள்ள செயின்ட் பேட்ரிக் சர்ச்சில் ஜூலி - ஜக்ரீம் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியதும், சமூக வலைதளங்களில் ஜூலிக்கு வாழ்த்துகள் குவிய தொடங்கி இருக்கிறது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications