அண்ணாச்சியிடம் கொளுத்திப் போட்ட ஆண்டவர்...ஆனால் அது நமத்து போச்சே
சென்னை: அண்ணாச்சி ஏதாவது பேச மாட்டாரா என அவரிடம் கேள்வியை கேட்ட கமல்ஹாசனின் முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது.
நாம ஒன்னும் நினைக்க ஆனா அங்க வேற ஒன்னு நடந்துவிடும் அதுபோல தான் பிக்பாஸில் இப்போ நடந்துகிட்டு இருக்கிறது.
கமல்ஹாசனின் வார்த்தை விளையாட்டை நன்றாக புரிந்து கொண்டு அதில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் அண்ணாச்சி.

குழந்தைகளின் ஹீரோ
இமான் அண்ணாச்சி என்று சொன்னாலே அவருடைய தூத்துக்குடி பாஸையும் டைமிங் காமெடியும் தான் பலருக்கும் ஞாபகத்திற்கு வரும் அனைத்து தரப்பினரும் அவருக்கு ரசிகர்களாக இருந்தாலும் குழந்தைகளின் பேவரைட் ஹீரோவாக இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். "சொல்லுங்கண்ணே சொல்லுங்க" எனும் ஒரு வார்த்தையாலே பட்டிதொட்டியெல்லாம் வலம் வந்த இவரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் "குட்டீஸ் சுட்டீஸ்" என்னும் நிகழ்ச்சியில் குழந்தைகளின் மனதை மட்டுமல்லாமல், பெரியவர்களின் மனதையும் கொள்ளை கொண்ட இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகிறார்.

சாதித்த சினிமா கனவு
இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து எப்படியாவது நடிப்பில் ஜொலித்து விடவேண்டும் என்று சென்னைக்கு வந்து அங்கு பல வருட போராட்டத்திற்கு பிறகு தான் தனக்கான சிறுசிறு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கிடைக்கும் வேலையை செய்துகொண்டு தன்னுடைய திறமையை எப்படியும் வெளிக்காட்டி விட வேண்டுமென்று இவருடைய விடாமுயற்சி தான் தற்போது விஸ்வரூபம் வெற்றியாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளப் போகிறார் என்று சொன்னதுமே அவருடைய நலம் விரும்பிகள் பலர் வேண்டாம் என்று கூறி வந்தனர்.

மறுத்த ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பொதுவாக பலருடைய வாழ்க்கையும் டோட்டலாக மாற்றிவிட்டது. அதுவரைக்கும் ரசிகர்கள் மனதில் டாப்பில் இருந்த பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தங்களுடைய நல்ல பெயர்களை இழந்திருக்கின்றனர். அதனை நினைத்து தான் பலரும் இந்த நிகழ்ச்சியில் இவரை கலந்து கொள்ளவேண்டாம் என்று கூறி வந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் தற்போது வரைக்கும் இவருக்கு பாசிட்டிவ் கமெண்டுகள் தான் அதிகமாகப் பரவி வருகிறது .

சாமர்த்தியமான பேச்சு
ஐந்தாவது சீசனில் ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். இது வழக்கமாக நடக்கும் சடங்கு சம்பிரதாயமாக இருந்தாலும், அதில் ஒவ்வொருவரையும் தங்களுடைய ஸ்கிரிப்ட் மாறாமல் அதற்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டிருந்த கமல்ஹாசனின் சாதுரியம் அண்ணாச்சியிடம் எடுபடவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அனைவரையும் ரிவ்யூ எடுத்துக்கொண்டிருந்த அபிஷேக்கை பற்றி என்ன சொல்லுகிறீர்கள் என்று, திரியை பற்ற வைத்து விட்டார் கமல்ஹசன். ஆனால்
அதற்கு ஒரே வார்த்தையில் தான் சொல்வது தான் சரி என்று அபிஷேக் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று முடித்துவிட்டார்.
இது சற்றும் கமலஹாசன் எதிர்பார்க்கவில்லை. அவர் மட்டுமல்ல ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications