51 காயங்களுடன் உயிரிழந்த ஒன்றரை வயது பிஞ்சு... கண்ணீர் விட்டு கதறும் பாடகி சித்ரா, விஜய் ஆண்டனி சொன்ன வார்த்தை
சென்னை: ஒரு குழந்தையின் சிரிப்பில் உலகையே காணும் பெற்றோர்கள் வாழும் சமூகத்தில், மனிதநேயமே தலைகுனியும் அளவுக்கு ஒரு கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. வெறும் ஒன்றரை வயது மட்டுமே ஆன அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை கொடூரமான சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களில் ஒன்று அர்ஷித்தின் புகைப்படம் தான். சிரித்த முகத்துடன் காணப்படும் அந்த பிஞ்சின் புகைப்படத்தை பார்த்த பலரும் கண்ணீர் விட்டு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே தந்தையை இழந்த குழந்தை
கேரளாவை சேர்ந்த அகிலா - அகில் தம்பதியரின் மகன் தான் அர்ஷித். ஆனால் விதி அந்த குழந்தையின் வாழ்க்கையில் ஆரம்பத்திலேயே கொடூரமாக விளையாடியது. கடந்த 2024-ம் ஆண்டு குழந்தையின் தந்தை உயிரிழந்தார்.
தந்தையை இழந்த துயரத்தை கூட புரிந்து கொள்ள முடியாத வயதில் இருந்த அர்ஷித், தாயின் அரவணைப்பில்தான் தனது உலகத்தை பார்த்து வளர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அகிலாவுக்கு அஷ்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவர்களையே அதிரவைத்த உடல்
கடந்த மே 29-ம் தேதி குழந்தை சாப்பிடும் போது மயங்கி விழுந்ததாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மருத்துவர்களுக்கு ஆரம்பத்திலேயே சந்தேகம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்களே அதிர்ச்சியில் உறைந்தனர்.
அந்த பிஞ்சின் உடலில் மொத்தம் 51 காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தலையில் பலத்த தாக்குதலுக்கான அடையாளங்கள், உடலின் பல பகுதிகளில் காயங்கள், சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட தடயங்கள் என மனித மனம் ஏற்றுக்கொள்ள முடியாத பல கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ஒரு குழந்தை எவ்வளவு வேதனையை அனுபவித்திருக்கும் என்பதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தாய் மற்றும் காதலன் கைது
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் அகிலா மற்றும் அவரது காதலன் அஷ்கர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தை மீது தொடர்ந்து சித்திரவதை நடத்தப்பட்டதா? எவ்வளவு நாட்களாக இந்த கொடுமை நடந்தது? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவின் மனதை நொறுக்கிய சம்பவம்
இந்த சம்பவம் குறித்து பாடகி கே.எஸ். சித்ரா வெளியிட்ட பதிவு பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால் சித்ராவின் வேதனை வெறும் ஒரு பிரபலத்தின் இரக்க உணர்வு மட்டுமல்ல என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் குழந்தையை இழந்த தாயின் வலி என்ன என்பதை நன்கு அறிந்தவர்களில் ஒருவர் சித்ரா.
பல ஆண்டுகள் காத்திருந்து பெற்ற ஒரே மகள் நந்தனாவை கடந்த 2011-ம் ஆண்டு ஒரு விபத்தில் இழந்தார் சித்ரா. துபாயில் குடும்பத்துடன் இருந்தபோது நீச்சல் குளத்தில் தவறி விழுந்த அவரது மகள் உயிரிழந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சரிகமபவில் “வெட்டிவேரு வாசம்” பாடலை பாடிய சிறுமி.. விஜய் ஆண்டனி கொடுத்த இன்ப அதிர்ச்சி! பெரிய மனசு தான்!
அந்த இழப்பில் இருந்து மீள சித்ராவுக்கு பல ஆண்டுகள் ஆனது. தனது மகள் குறித்து பல நேர்காணல்களில் பேசும்போதெல்லாம் கண்கலங்கியுள்ளார். "ஒரு குழந்தையை இழந்த பிறகு வாழ்க்கையே மாறிவிடுகிறது" என்று அவர் பலமுறை கூறியிருக்கிறார். அதனால்தான் அர்ஷித்தின் மரணம் குறித்த செய்தி அவரை இன்னும் அதிகமாக பாதித்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
കേവലം ഒന്നര വയസ്സു മാത്രം പ്രായമുള്ള അർഷിദ് മോൻ്റെ വിയോഗ വാർത്ത ഉള്ളുലയ്ക്കുന്നു. മനസ്സ് അസ്വസ്ഥമാക്കുന്നു. ഭയം തോന്നുന്നു.
— K S Chithra (@KSChithra) June 2, 2026
ഇത്തരം ക്രൂര സംഭവങ്ങൾ ഇനിയുണ്ടാവതിരിക്കട്ടെ,
മനുഷ്യസമൂഹം സ്വയം നവീകരിക്കപ്പെടട്ടെ.
പ്രാർത്ഥനകൾ മാത്രം! pic.twitter.com/mgd4sDVVM0
விஜய் ஆண்டனியின் வருத்தம்
அதேபோல் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இந்த சம்பவம் குறித்து மிகவும் உருக்கமாக பதிவு செய்துள்ளார். "அமைதியாய் இளைப்பாறு தங்கமே. இதயத்தை நொறுக்கும் துயரம் இது" என்று அவர் எழுதியிருந்தார். விஜய் ஆண்டனியின் இந்த வார்த்தைகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மூத்த மகள் மீரா உயிரிழந்த சம்பவம்.
அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த விஜய் ஆண்டனி, பின்னர் பல நிகழ்ச்சிகளில் குழந்தைகளை இழந்த பெற்றோரின் மனநிலையை பற்றி பேசியுள்ளார். தனது மகளின் நினைவுகளை பலமுறை பகிர்ந்துள்ளார்.
ஒரு பெற்றோர் அனுபவிக்கக்கூடாத மிகப்பெரிய துயரம் குழந்தையை இழப்பதுதான் என்று அவர் கூறியிருந்தார். இரண்டு பெற்றோர்களின் கண்ணீரையும் மீண்டும் வரவழைத்த அர்ஷித்
சித்ராவும் விஜய் ஆண்டனியும் வெவ்வேறு துறைகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இருவரையும் இணைக்கும் ஒரு வலி இருக்கிறது. அது குழந்தையை இழந்த துயரம்.
அதனால் அர்ஷித்தின் மரணம் குறித்த செய்தி வெளியாகியதும் இருவரின் பதிவுகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. "தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள் என்பதால் தான் இந்த பிஞ்சின் வேதனையை அவர்கள் இன்னும் ஆழமாக உணர்ந்திருக்கிறார்கள்" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
💔
— vijayantony (@vijayantony) June 2, 2026
Rest in peace, Thangam.
Heartbreaking and unimaginable.
You will be dearly missed and fondly remembered. pic.twitter.com/iwi3nKXlvA
மன்னித்து விடு தங்கமே
அர்ஷித்தின் புகைப்படங்களை பகிர்ந்து தற்போது ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க பதிவிட்டு வருகின்றனர். "தந்தையை இழந்தாய்... பாதுகாக்க வேண்டியவர்களிடமே சிக்கிக்கொண்டாய்... இறுதியில் உலகத்தையே அழவைத்து சென்றுவிட்டாய்" என்று பலர் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு பச்சிளம் குழந்தையின் மரணம் மட்டுமல்ல இது. குழந்தைகளை பாதுகாக்க தவறிவிட்ட சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கிய சம்பவமாக இது மாறியுள்ளது. அர்ஷித்தின் சிரித்த முக புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications