“இது அரசு விருதா… இல்ல பேமிலி விருதா?”.. தமிழக அரசு விருது பட்டியல் குறித்து நடிகை லட்சுமி கொந்தளிப்பு
சென்னை: தமிழக அரசு நேற்று அறிவித்த திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் பட்டியல், ஒருபுறம் பலருக்கு மகிழ்ச்சியையும், மறுபுறம் சிலருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், சின்னத்திரை நடிகை ஊர் வம்பு லட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வீடியோவில் பேசும் லட்சுமி, தமிழக அரசு 2014 முதல் 2022 வரை சின்னத்திரை நடிகர்களுக்கான விருதுகளை அறிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
"விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால், அந்த பட்டியலில் என் பெயர் இல்லை. அதற்கான காரணம் என்ன என்பது எனக்கே தெரியவில்லை" என்று அவர் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

செம்பருத்தி சீரியல்
தான் நடித்த 'செம்பருத்தி' சீரியல் குறித்து பேசும் லட்சுமி, "அந்த சீரியலில் நான் நடித்த கதாபாத்திரம் நெகட்டிவ் என்றாலும், அது அதிகமாக பேசப்பட்டது. அந்த கேரக்டருக்காக நான் நிறைய கஷ்டப்பட்டேன். டப்பிங்கையும் என் சொந்த குரலிலேயே செய்தேன். ஒரு நடிகையாக முழுமையாக உழைத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
இவ்வளவு உழைப்புக்குப் பிறகும், தனது நடிப்புக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காதது மனதை வலிக்கச் செய்ததாக அவர் கூறுகிறார். இந்த விருதுகள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன? யார் தேர்வு செய்கிறார்கள்? அந்த தேர்வு முறையே என்ன?" என்பது கேள்வியாக இருப்பதாகவும் பேசி இருக்கிறார்.
"இது உண்மையில் தமிழ்நாடு அரசு விருது என்றால், திறமையானவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் பல சமயங்களில், குடும்பத்தினர், நெருங்கியவர்கள், சொந்தக்காரங்களுக்கு மட்டுமே விருதுகளை பெறுகிறார்கள் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது" என அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தனது பேச்சில் மேலும் கடுமையாக பேசும் லட்சுமி, "விருதுகளை தேர்வு செய்பவர்கள் அவர்களுக்கு சாதகமானவர்களுக்கு மட்டும் விருது வழங்குகிறார்கள் என்றால், அதை தமிழ்நாடு அரசு விருது என்று சொல்ல வேண்டாம். அது உங்கள் பேமிலி விருது என்று சொல்லிக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், "என் கேள்வியை நான் தான் கேட்க வேண்டும் என்பதால் தான் இப்படி பேசுகிறேன். நான் பேசுவது சரியா, தவறா என்பதே எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் என் வருத்தத்தை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.
ஆதரவு குரல்கள்
லட்சுமியின் இந்த வீடியோக்கு பலரும் சமூக வலைதளங்களில் ஆறுதல் மற்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். "நீங்கள் உழைத்திருக்கிறீர்கள்", "உங்கள் நடிப்பு மறக்க முடியாதது", "விருது இல்லாதாலும் ரசிகர்களின் அன்பே பெரிய விருது"என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பே, திரைப்பட துறையிலும் தமிழக அரசு விருது பட்டியல் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். விருது தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் அப்போதும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு விருதுகள் என்பது கலைஞர்களின் பல வருட உழைப்புக்கு கிடைக்கும் மிக உயரிய அங்கீகாரம். ஆனால் அந்த விருதுகள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுவது, "தேர்வு முறை சரியானதா?", "உண்மையில் திறமைக்கே மதிப்பு தரப்படுகிறதா?"என்ற விவாதங்களை தீவிரமாக்கியுள்ளது.
லட்சுமியின் இந்த ஆதங்கக் குரல், சின்னத்திரை கலைஞர்களின் மனதில் இருக்கும் பல கேள்விகளின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு அரசு தரப்பில் விளக்கம் வரும் என்கிற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications