கையில் அதை தூக்கிப் பிடித்தபடி கலக்கும் தர்ஷா குப்தா...மிரண்டு போன ரசிகர்கள்
சென்னை : தீபாவளியை வரவேற்று இப்பவே பட்டாசு வெடிக்க கிளம்பி விட்ட தர்ஷா குப்தாவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.
பட்டுப்புடவை சரசரக்க கையில் துப்பாக்கியை தூக்கிக் காட்டி பார்ப்பவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கெத்து காட்டியிருக்கும் தர்ஷாவின் போட்டோக்கள் தாறுமாறாக பரவிவருகிறது.
புத்தாடையோடு இவர் கொண்டாடும் தீபாவளியை பார்த்ததும் ரசிகர்கள் ஒரு நிமிடம் தீபாவளிதான் வந்துவிட்டதோ என்று ஏமாந்து போய்விட்டார்களாம்.

காலை வேளையில் கலக்கல்தான்
தர்ஷா குப்தா எந்த மாதிரி போஸ்ட் போட்டாலும் அது வைரலாக பரவி வரும் நிலையில் தற்போது புடவையில் செம மாஸான போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். இவர் காலை வேளையில் இந்த மாதிரி தரிசனத்தை கொடுத்ததும் ரசிகர்கள் கொஞ்சம் பரவசமடைந்து விட்டார்களாம். அதுமட்டுமல்லாமல் இப்படியே காலையில் உற்சாகமூட்டினால் அந்த நாள் இனிய நாளாக மாறிவிடும் என்று இவரை தொடர்ந்து காலையில் போட்டோக்களை போஸ்ட் போட கேட்டு வருகின்றனர். திடீரென்று இவர் புத்தாடைகளோடு குதூகலமாக வந்து இறங்கியதை பார்த்ததும் சிலருக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்திருக்கிறது.

கையில அது என்னது
சின்னத்திரையின் இளம் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த தர்ஷா குப்தா, தற்போது வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்த பிறகும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக கலக்கி வருகிறார். இவர் அடிக்கடி போஸ்ட் போட வேண்டும் என்று தான் அவருடைய ரசிகர்கள் அவரிடம் கேட்டு வருகின்றனர். ரசிகர்களின் ஆசையை இவரும் தன்னால் முடிந்த அளவிற்கு தீர்த்து வருகிறார். இவர் என்னதான் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் மாடலிலும் ரெக்ககட்டி தான் பறந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் பல பொருள்களுக்கு மாடலிங் செய்து கொண்டிருக்கும் இவர் தற்போது தீபாவளி பண்டிகைக்கு முன்னேற்பாடாக பட்டாசுகளை அள்ளிக்கொண்டு வந்து விட்டார். இவர் பட்டாசுகளுக்கு பிரமோஷன் கொடுக்க இவரைப் பார்த்து ரசிகர்கள் கமெண்டுகளை கொட்ட ஆரம்பித்து விட்டனர்.

மொட்டைமாடியில் என்ன சத்தம்
தான் வந்த வேலையை சரியாக செய்து பட்டாசை கொளுத்தி விட்டு சென்று விட்டாலும் இவருடைய போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் செம வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. மொட்டை மாடியில் பட்டாசுகளுக்கு மத்தியில் இவர் அமர்ந்திருப்பதைப் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் களில் கொஞ்ச ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், இருந்தாலும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே தீபாவளி கொண்டாடி இருக்க கூடாது நாங்க கூட இப்பவே தீபாவளி வந்துருச்சுன்னு நெனச்சிட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். தர்ஷா பட்டாசுகளை கொளுத்தி விளையாடுவதை பார்த்து பலபேருக்கு இப்பவே தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதாம். அதனாலேயே பலர் அட்வான்ஸ் ஹாப்பி தீபாவளி என்று வாழ்த்துக்களையும் கூற ஆரம்பித்துவிட்டனர்.

தர்ஷாக்கு பதட்டம் இல்லையா?
தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் திரைப்படம் ட்ரெய்லர் வெளியாகி இருக்கும் நேரத்தில் அவருடைய படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஆனால் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் இவர் ஜாலியாக இருப்பதை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருக்கின்றதாம். நாங்கள்தான் படத்துக்காக ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டே இருக்கிறோம். சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்பார்ப்போடு ஒவ்வொரு நாளும் சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் தர்ஷா எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் கூலாக இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர். அவர் மனதிற்குள் இருப்பது அவருக்கு மட்டும் தானே தெரியும் இது தெரியாமல் ரசிகர்கள் ஏதாவது பேசிக் கொண்டிருந்தால் தர்ஷாவுக்கு என்ன தெரியும். எப்படியோ தர்ஷா தீபாவளியை கொண்டாட ஆரம்பித்ததும் இவருடைய ரசிகர்கள் இனி பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.












Click it and Unblock the Notifications