நம்ம பேச்சு உயர்ந்து இருக்கனும் மத்தவங்க எல்லாம் நமக்கு கீழ தான்.. தாமரையின் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய முதல் ப்ரமோவில் தாமரையும் பிரியங்காவும் மூச்சடைக்க கருத்துக்களை மாறிமாறி வீசி வருகின்றனர்.

அட இவங்க ரெண்டு பேரும் வேற மாதிரி என்று போட்டியாளர்கள் சொல்கிற மாதிரி தான் இவர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்ததில்லை என்று சொல்வார்களே அது பிரியங்காவும், தாமரையும் தானோ என்று பலரால் சந்தேகிக்கப்படுகிறது.

வழக்கமாக நடப்பதுதான்

வழக்கமாக நடப்பதுதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஒன்றாக சுற்றித் திரியும் போட்டியாளர்கள் தான் நாட்கள் செல்ல செல்ல குடுமிபிடி சண்டை போடுகிறார்கள். இது வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் ஒன்றாக இருந்தாலும், இந்த சீசனும் அதில் தப்பவில்லை. இந்த சீசனில் ஆரம்பத்தில் ஒன்றாக சுற்றித்திரிந்த பாவனியும், தாமரையும் ஒரே ஒரு டாஸ்க் மூலமாக இன்று நீ தான் என்னுடைய எதிரி என்று பார்வையாலேயே சொல்லுமளவிற்கு வேற லெவலில் மிரட்டி வருகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து நாங்களும் வருகிறோம் என்று பிரியங்காவும் இவர்களுடைய லிஸ்டில் சேர்ந்து விட்டார்.

விளையாட்டு சொல்லிக்கொடுத்த பிரியங்கா

விளையாட்டு சொல்லிக்கொடுத்த பிரியங்கா

ஆரம்பத்தில் விளையாட்டைப் பற்றி ஒன்றுமே தெரியாத அப்பாவியாக இருந்த தாமரை செல்விக்கு விளையாட்டு நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தவர் பிரியங்கா தான். தற்போது முதல் எதிரியாக இருந்து வருகிறார். இவர்கள் இருவருடைய பிரச்சனையும் என்னதான் என்று யாராலும் யூகிக்க முடியாத வகையில் தான் இருக்கிறது. குரலை உயர்த்திப் பேசி இவர்கள் இருவரும் பேசும்போது ரசிகர்களின் கவனம் எந்தப் பக்கமும் செல்ல முடியவில்லை. இதில் யார் பக்கம் சரி என்று கூட சில நேரங்களில் யோசிக்க முடியாத வகையில் தான் இருந்து வருகிறது.

பிரியங்காவுக்கு வினையாக மாறிப்போச்சு

பிரியங்காவுக்கு வினையாக மாறிப்போச்சு

பிரியங்காவும், தாமரையும் கடந்த ஒரு சில வாரங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது கிடைக்கும் இடங்களில் எல்லாம் மாற்றி மாற்றி தலையில் கொட்டிக் கொள்கிறார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்று மாறி மாறி இவர்கள் இருவரும் சொல்லும் குற்றங்களும் குறைபாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தலைவர் பதவியில் தாமரைக்கு தலைவராகும் தகுதி இல்லை என்று பிரியங்கா கூறிய வார்த்தையை தாமரையால் மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களாலும் இப்போ வரைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருந்து வருகிறது.

தாமரையின் குற்றச்சாட்டு

தாமரையின் குற்றச்சாட்டு

இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு அணியாக பிரிந்து சிவப்பு அணி, ப்லு அணி என்று இரண்டாக பிரிந்து உள்ளனர். இவர்கள் இரண்டு அணிகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளை ஊதி பெரிதாக்குவது தான் பிக்பாஸின் ஐடியா போல, அதனால்தான் யார் யாருக்கெல்லாம் பிரச்சினைகள் இருக்கிறதோ அவர்களை விவாத மேடைக்கு அழைத்து இருக்கிறது. அதில் தாமரைச்செல்வி, பிரியங்காவின் மீது கணீரென்ற குரலால் குற்றச்சாட்டுகளை குவிக்கின்றார். அதில் இந்த வீட்டில் தான் சொல்வது தான் சரி, அதை தான் அனைவரும் கேட்க வேண்டுமென்று பிரியங்கா செயல்படுகிறார் என்று தனது மனதில் இருப்பதை அப்படியே டாஸ்கில் கொட்டி விட்டார். அந்த நேரத்தில் பிரியங்கா கோபமாக அந்த இடத்தை விட்டு வெளியேறுவதை பார்த்ததும் இன்றைய நிகழ்ச்சியில் தரமான சம்பவம் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+