ஜாய் கிரிஸில்டாவை வெறுப்பேற்ற மாதம்பட்டி ரங்கராஜன் போட்ட போஸ்ட்! ஸ்ருதியும் பகிர்ந்திருக்கிறாரே! விசேஷம் போல
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவருடைய முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜன் இருவரும் தாங்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த புகைப்படங்களை பலர் ஜாய் கிரிஸிட்டில்லாவிற்க்கு பகிர்ந்து வருகிறார்கள்.
நடிகரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜன் பற்றிய செய்திகள் தான் சோசியல் மீடியாவில் சில மாதங்களாக வைரலாகி வருகிறது. மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் மகன்கள் இருக்கின்றனர்.

ஆனாலும் சில மாதங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜன் தனக்கு காதலர் தினத்தில் கொடுத்த கிப்ட் என்று ஒரு போஸ்ட் போட அது இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு ஸ்ருதி ரங்கராஜன் மாதம்பட்டியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இதனால் அவரைப் பற்றிய வதந்திகளுக்கு மனைவியே பதிலடி கொடுத்து விட்டார் என்று கூறி வந்தனர்.
ஸ்ருதி போஸ்ட் போட்டு சில வாரங்களிலேயே தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜனுக்கும் திருமணமாகிவிட்டது என்றும் தான் இப்போது ஆறு மாதமாக கர்ப்பமாக இருக்கிறேன் என்று ஜாய் போஸ்ட் போட, அது பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியது. அதற்கு பிறகு ஜாய்க்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது. திருமணமாகி விவாகரத்து பெற்று இருந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜன் தன்னை திருமணம் செய்து குழந்தை கொடுத்து ஏமாற்றி சென்று விட்டார் என்று ஜாய் புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் ரங்கராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஜாய்யுடன் நடந்த திருமணம் மிரட்டலின் பெயரில் நடந்தது, அவருடைய குழந்தைக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து அது என்னுடையது என்று நிரூபணம் ஆனால் நான் அந்த குழந்தையை ஆயுசு முழுக்க கவனித்துக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் அறிக்கை வெளியிட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது, இன்னும் டிஎன்ஏ டெஸ்ட்க்கு மாதம்பட்டி ரங்கராஜன் வரவில்லை என்று ஜாய் போஸ்ட் போட்டு ரங்கராஜனை கலாய்த்து கொண்டிருக்கிறார்.

அதோடு என் புருஷனை எங்கேயாவது பார்த்தீர்கள் என்றால் எனக்கு டிஎம் பண்ணுங்க என்று கூட ஸ்டோரி வைத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் மாதம்பட்டி ரங்கராஜன் தனக்கு பர்சனலாக அனுப்பிய வீடியோக்கள் என்று சில வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போது இன்று instagram பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் மனைவி ஸ்ருதி மாதம்பட்டி ரங்கராஜனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதே பதிவை மாதம்பட்டி ரங்கராஜனும் ரீ ஷேர் செய்து இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications