பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று பட்டைய கிளப்பிய தல்லுமாலா.. ரசிகர்களை குஷிபடுத்திய ரிலீஸ் அறிவிப்பு
சென்னை: மலையாளத் திரை உலகின் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றான "தல்லுமாலா", திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு மலையாள சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற படமாக இருப்பதாலும், ஆக்சன் மற்றும் பிளாக் காமெடி கலந்த இப்படத்தை காண ரசிகர்கள் காத்திருப்பதாக கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர்-நடிகைகள்-டெக்னீசியன்கள்
பிரபல மலையாள இயக்குனர் காலித் ரகுமான் இயக்கத்தில், கதாநாயகனாக டொவினோ தாமஸ்,கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன், மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சைன் டாம் சாக்கோ இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜிம்சி காலித் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை சிறப்பாக கையாண்டுள்ளார்.சண்டைக் காட்சிகள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு இணையாக தனது உழைப்பை கொடுத்து சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார் சுப்ரீம் சுந்தர்.

கதை சுருக்கம்
படத்தின் துவக்கத்தில் கதாநாயகன் கதாநாயகி என்கேஜ்மென்ட நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் பொழுது, அந்த நேரத்தில் ஏற்படும் ஒரு சண்டையால் அந்தத் திருமணமே நிறுத்தப்படுகிறது. அந்த சண்டை ஏற்படுவதற்கான காரணம் என்ன என்ற முன் கதையை பல பிளாஸ்பேக்குகளில் நான் லீனியராக சொல்லியிருப்பது தான் படத்தின் கதை. பிளாக் காமெடி படத்தில் கொஞ்சம் ஆக்சன் டோஸை அதிகமாக சேர்த்து இருந்தாலும் மலையாளத்தில் இளைஞர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்று இருந்தது இந்த படம்.

படத்தின் தரம்
கொஞ்சம் கூட கோபத்தை கண்ட்ரோல் பண்ண தெரியாத கதாநாயகன் வாழ்க்கையில் நடக்கும் கதை என்பதால், படத்தில் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ஆக்சன் காட்சிகள் வந்து கொண்டே இருக்கும். இருந்தாலும் எவ்வித சலிப்புமின்றி ரசிக்கும் வண்ணம் ஸ்டண்ட் இயக்குனர், கேமராமேன், மற்றும் எடிட்டர் ஆகியோர் இணைந்து அனைத்து ஷாட்டுகளையும் தரமாக அளித்திருந்ததாக கூறப்பட்டது. கதாநாயகன் கதாநாயகி இடையேயான காதல் காட்சிகளும் மிகைப்படுத்தப்படாமல் அழகாகவும்,ரியாலிட்டியாகவும் எடுக்கப்பட்டிருந்ததால் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நெட்பிளிக்ஸ் ரிலீஸ்
மலையாளத்தின் பெரிய பிளாக்பஸ்டர் படமான தல்லுமாலா படத்தை கைப்பற்ற ஓடிடி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவியது. போட்டிகளுக்கிடையே தல்லுமாலா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் பெற்றது. தற்பொழுது தங்கள் ஓடிடி தளத்தில் இப்படத்தை செப்டம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பே டொவினோ தாமஸ் இன் மின்னல் முரளி திரைப்படத்தை தங்கள் ஓடிடியில் வெளியிட்டது நெட்பிளிக்ஸ் நிறுவனம். மின்னல் முரளி படம் பல சாதனைகளை படைத்தது.அதைப் போலவே தல்லுமாலா படமும் ஒடிடி யில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications