முதல்வர் ஸ்டாலின் அறிவித்த "1000 ரூபாய்".. எப்போது கிடைக்கும் தெரியுமா?.. கசிந்த தகவல்
ஸ்டாலின் அறிவித்த 1000 ரூபாய் விரைவில் வழங்கப்படும் என்கிறார்கள்
சென்னை: திமுக வாக்குறுதிகளில் ஒன்றான இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று கசிந்து வருகின்றன.
கடந்த தேர்தலில் திமுக அறிவித்த இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி மிகப்பெரும் கவனத்தை பெற்றது... ஆனால், ஆட்சி அமைத்ததும் இதை உடனடியாக திமுக அரசால் செயல்படுத்த முடியவில்லை..
காரணம், அதிமுக அரசு கஜானாவை காலி செய்துவைத்துவிட்டு போயிருந்தது என்றார்கள்.. மேலும் லாக் டவுன் சமயம் என்பதாலும், அரசின் வருமானம் வரும் வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன என்பதாலும் இந்த அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை என்றும் சொல்லப்பட்டது.

திமுக
இதற்கு பிறகு, தமிழகத்தில் தொற்று குறைந்து வந்த நிலையில், லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில், 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம் பெருகியது.. எப்படி பார்த்தாலும் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால், அந்த தேர்தலுக்குள், கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளது என்றும், அநேகமாக பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் நம்பப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே அறிவிக்கப்படவில்லை.

சக்கரபாணி
இதனிடையே, 1000 ரூபாய் எப்போதும் வழங்கப்படும் என்று செய்தியாளர்களும் சில அமைச்சர்களை கேள்வி எழுப்பியிருந்தனர்.. அந்த வகையில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி 2 மாதங்களுக்கு முன்பு தந்த ஒரு பேட்டியில், "திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிதிநிலையை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்" என்றார். ஆனால், எப்போது என்று கால நேரத்தை அமைச்சர் சொல்லவில்லை.

அமைச்சர் அன்பரசன்
அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கடந்த மாதம் ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், "பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்படவில்லையே என்று கேட்கின்றனர்... கடந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். அதனைச் சரி செய்யும் பணியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். அதனால் தான் மகளிர் உரிமை தொகையை வழங்க முடியவில்லை... ஒருமாதத்துக்கோ, அல்லது 2 மாதங்களுக்கோ என்றால் உடனே வழங்கிவிடலாம்... ஆனால் காலத்துக்கும் வழங்கக்கூடிய திட்டம் இது. அதனால் இதனை செயல்படுத்துவதற்காக கணக்கெடுக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. எனவே, இன்னும் 3 மாதத்தில் உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்படும்" என்றார்.

பரிசு தொகுப்பு
இந்நிலையில்தான், 1000 ரூபாய் குறித்த பேச்சு மீண்டும் அடிபட தொடங்கி உள்ளது.. அதாவது, தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் இல்லாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில்தான் இந்த புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பரிசு தொகுப்பை அறிவித்த நிலையில், அதில் ரொக்க பணம் குறித்த விவரம் எதுவும் இல்லை.. இது தமிழக மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது..

பொங்கல் பண்டிகை
ஏற்கனவே தந்து வரும் இந்த ரொக்க பணத்தை திடீரென நிறுத்தினால் அது திமுகவுக்கே சறுக்கலாகிவிடும் என்பதையும் அரசு உணராமல் இல்லை.. எனவே, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000ரூ வழங்கும் திட்டத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்று திமுக அரசு கணக்கு போடுகிறதாம்.. அப்படி செய்தால் வாக்குறுதியை நிறைவேற்றியது போல் இருக்கும், பொங்கலுக்கும் பரிசு தொகை தந்தது போல இருக்கும் என்று யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அறிவிப்புகள்
அதுமட்டுமல்ல, விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வர உள்ளதால், முன்கூட்டியே இத்தகையை அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.. இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற வேண்டும் என்று திமுக நினைக்கிறது.. ஆனால் விட்டதை இந்த தேர்தலிலாவது பிடிக்க வேண்டு என்று அதிமுக முயன்று வருகிறது.. இதற்காகவே எடப்பாடி பழனிசாமி தீவிரமான களப்பணியாற்றி வருகிறார்..

அதிமுக
ஒருவேளை இதை முன்னிட்டு குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் திட்டத்தை திமுக தொடங்குமானால், அதற்கு அதிமுக நிச்சயம் எதிர்வினையாற்றவே செய்யும்.. காரணம், கடந்த முறை பொங்கல் பரிசு 2500 வழங்கப்பட்டபோது, தேர்தலை காட்டியே பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறி, திமுக கோர்ட் வரை சென்றது நினைவுகூரத்தக்கது.. எனவே, அதிமுக போலவே திமுகவும் செயல்படுமா? அல்லது முன்கூட்டியே 1000 ரூபாய் வழங்கப்பட்டுவிடுமா? அல்லது இந்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் காலதாமதமாகுமா? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.
-
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன?











Click it and Unblock the Notifications