"நொந்துட்டாரு".. திடீர்னு எம்எல்ஏ வீட்டுக்கு பறந்த போன்.. "பொண்ணு பார்க்கறீங்களா?".. ஷாக் ஆன விஐபி
எம்எல்ஏவுக்கு போன் செய்த இளைஞர் ஒருவர், தன் திருமணத்துக்கு பெண் பார்க்க சொல்லி உள்ளார்
மும்பை: மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் மாவட்டத்தில் ஆச்சர்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. இது தொடர்பான ஆடியோவும் இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.
இங்குள்ள ஔரங்காபாத் மாவட்டத்தில் குல்தாபாத் என்ற பகுதி உள்ளது.. இந்த பகுதியில் கட்சி தொண்டர் ஒருவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. எங்கெங்கோ பெண் பார்த்து உச்சக்கட்ட வெறுப்புக்கு ஆளாகிவிட்டார்.
எனவே என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்து கொண்டிருந்தார்.. அப்போதுதான் திடீரென ஒரு ஐடியா அவருக்கு வந்தது.. உடனே, தாக்கரே அணியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவுக்கு போனை போட்டார்..

ராஜ்புத்
அந்த எம்எல்ஏ பெயர் ராஜ்புத்.. அவருக்கு போனை போட்ட இளைஞர், "எனக்கு 8 ஏக்கர் நிலம் இருக்கிறது.. அதனால் திருமணம் செய்து கொள்ள, உடனே ஒரு பெண்ணை பார்த்து கொடுங்கள்.. நானும் பல இடங்களில் பெண் தேடிவிட்டேன்.. யாருமே பெண் கொடுக்க தயாராக இல்லை. அதனால் அளவுக்கு அதிகமாக நொந்து போயிட்டேன்.. மிகுந்த மனவருத்தத்திலும் இருக்கிறேன்.. அதனால் நீங்கள்தான் எனக்கு பெண் பார்க்க வேண்டும்" என்றார். இதை கேட்டு ராஜ்புத் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்.. அந்த இளைஞர் ஏற்கனவே மனம் நொந்து உள்ளதால், அவரிடம் மேற்கொண்டு எதுவும் பேசாத எம்எல்ஏ ராஜ்புத், சரி, உங்களோட பயோடேட்டாவை எனக்கு அனுப்பி வையுங்கள் எனறு சொல்லி உள்ளார்..

ரிக்கார்டிங்
இவர்கள் 2 பேரும் பேசிய அந்த ஆடியோதான் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது. இதுகுறித்து பேசிய எம்எல்ஏ ராஜ்புத், வழக்கமாக, 2,000 பேர் வசிக்கும் கிராமம் என்றால், அங்கு சுமார் 100-150 திருமணமாகாத இளைஞர்களை எளிதாக காணலாம்... அவர்களுக்கு 100 ஏக்கர் நிலம் இருந்தாலும், கல்யாணம் செய்து கொள்ள, பெண் கிடைப்பது ரொம்ப கடினம் என்றார்.. ராஜ்புத் இவ்வாறு சொன்னாலும், அங்குள்ள இளைஞர்களுக்கு பெண் கிடைப்பதில் என்ன சிக்கல் என்று தெரியவில்லை.. ஆனால், 100 ஏக்கர் இருந்தும் பெண் தர மறுப்பதாக எம்எல்ஏ சொல்லி உள்ளது வியப்பை தந்து வருகிறது.

சிசுக்கொலை
சில நாட்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் 50 திருமணமாகாத இளைஞர்கள் தங்களுக்கு திருமணம் செய்ய பெண் வேண்டும் என்று குதிரையில் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு தந்தார்கள்.. நாட்டில் பெண் சிசுக்கொலைகளைத் தடுக்கவும் பாலின விகிதம் குறைந்து வருவதைத் தடுக்கவும் இயற்றப்பட்ட PCPNDT என்ற சட்டத்தை கண்டிப்பாக பின்பற்றுமாறு அவர்கள் கோரிக்கையும் விடுத்திருந்தனர்.. இதுகுறித்து ஜோதி கிராந்தி பரிஷத் அமைப்பின் நிறுவனர் ரமேஷ் பாரஸ்கர் என்பவர் இதுகுறித்த காரணத்தையும் சொல்லியிருந்தார்.

கசப்பான உண்மை
"மக்கள் இந்த இளைஞர்களின் பேரணியை, கோரிக்கையை கேலி செய்யலாம். ஆனால், கசப்பான உண்மை என்னவென்றால், மாநிலத்தில் ஆண்-பெண் விகிதம் சமமற்றதாக இருக்கிறது.. அதனால்தான், திருமண வயது இளைஞர்களுக்கு மணமகள் கிடைப்பதில்லை. மகாராஷ்டிராவின் 1,000 ஆண்களுக்கு 889 பெண்களே இருக்கிறார்கள்.. பெண் சிசுகொலையின் காரணமாக இந்த சமத்துவமின்மை நிலவுகிறது இந்த ஏற்றத்தாழ்வுக்கு அரசாங்கமே பொறுப்பு" என்று அவர் வேதனையுடன் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications