4 மாணவிகளின் உயிரை குடித்த கரூர் காவிரி ஆறு.. தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் அதிரடி சஸ்பெண்ட்
கரூர் மாவட்டம் காவிரி கதவணையில் மூழ்கி புதுக்கோட்டை பிலிப்பட்டி அரசு பள்ளியின் 4 மாணவிகள் பலியான நிலையில் தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை: கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி புதுக்கோட்டை மாவட்டம் பிலிபட்டி அரசு பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் இறந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பிலிப்பட்டியில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் வெவ்வேறு இடங்களுக்கு நடக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் மாணவ-மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்க சென்றனர். போட்டியை முடித்துவிட்டு அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள்
இந்த வேளையில் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை பார்க்க விரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாணவி ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த மாணவிகள் கூச்சலிட்டதோடு, அவரை காப்பாற்ற முயன்றனர். இவ்வாறு அடுத்தடுத்து மேலும் 3 மாணவிகள் ஆற்றுக்குள் சிக்கினர். இதனால் 4 மாணவிகளும் ஆற்றில் மூழ்கினர்.

4 பேரும் பலியான சோகம்
இதுபற்றி உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர் அவர்கள் விரைந்து வந்து ஆற்றில் மூழ்கியவர்களை தேடினர். அப்போது 4 மாணவிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் இறந்தவர்களின் பெயர்கள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா என்பது தெரியவந்தது. இதில் இனியாவும் லாவண்யாவும் 6 ஆம் வகுப்பு படித்து வந்தனர். தமிழரசி 7ம் வகுப்பும் சோபியா 8ம் வகுப்பும் படித்து வந்தனர்.

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
ஆற்றில் விழுந்த மாணவியை காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து 4 மாணவிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் மாணவிகளின் பெற்றோர் கதறி அழுதனர். அதோடு மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியர்கள் கவனக்குறைவே மாணவிகளின் இறப்புக்கு காரணம். இதனால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கைகள் வைத்தனர்.

3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
மேலும் ஆசிரியர்களின் அலட்சியத்தால் தான் மாணவிகளின் உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான் மாணவிகள் இறந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொட்டுமணி, விளையாட்டு போட்டிக்கு மாணவிகளை அழைத்து சென்ற இடைநிலை ஆசிரியர் செபாசகாயூ இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் திலகவதி என 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications