பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் விஷயத்தில் சக்திவேல் செய்யும் சூழ்ச்சி! பாண்டியன் இப்படி செஞ்சிட்டாரே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 டிசம்பர் 15ஆம் தேதிக்கான எபிசோடில் பாண்டியன் குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனையை வைத்து சக்திவேல் பாண்டியனை அசிங்கப்படுத்த பாக்குகிறார். ஆனால் பாண்டியன் சக்திவேலை தூக்கிப் போட்டு மிதித்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்ப்போம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், மயில் குடும்பத்தை வீட்டை விட்டு துரத்தியதால் மயிலும் அவருடைய அப்பா அம்மாவும் வீட்டு வாசலில் நின்று அழுது கத்திக் கொண்டிருக்கின்றனர். அப்போது எதிர் வீட்டில் இருக்கும் கோமதியின் அம்மா காந்திமதி குழப்பத்தில் இருக்கிறார்கள். தன் மகள் வீட்டில் என்ன பிரச்சனை நடக்கிறது என்று தெரியலையே, அங்கு பழனி இருக்கும்போதாவது ஏதாவது தெரியும் ஆனா இப்ப என்ன நடக்குதுன்னு தெரியலையே என்று புலம்பி கொண்டு இருக்கிறார்.

அவருடைய இரண்டு மருமகள்களும் அதையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மயில் அம்மா வெளியே நின்று கத்தி கொண்டு இருப்பதை பார்த்து காந்திமதி அவருடைய மருமகள்களும் வீட்டு வாசலுக்கு வருகின்றனர். அப்போது இவர்களை கண்டதும் மயிலுடைய அம்மா இன்னும் சத்தமாக பாண்டியன் குடும்பத்தின் மீது சாபமாக கொடுக்கிறார்.
என் பொண்ணை மிரட்டுறாங்க நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, அங்கு வரும் சக்திவேல் நான் போய் என்னன்னு கேட்க போறேன் என்று சொல்ல, காந்திமதி வேண்டாம் என்று தடுக்கிறார். ஆனாலும் சக்திவேல் வந்து என்னவென்று விசாரிக்க அதற்கு மயில் உடைய அம்மா உண்மையை சொல்லாமல் என் பொண்ணை விட்டு அனுப்பிட்டாங்க என்று நாடகம் போடுகிறார்.
உடனே சக்திவேல் உங்க பொண்ணை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் இவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுங்க என்று சொல்ல, வீட்டுக்குள் இருப்பவர்கள் எல்லோரும் கோபப்படுகின்றனர். ஆனால் அவர்களை எல்லாம் பாண்டியன் தடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது உங்க பொண்ணு கிட்ட வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துனாங்க என்று கேஸ் கொடுங்க என்று தன்னுடைய வன்மத்தை எல்லாம் கக்கி ஏத்தி விட இதை கேட்டதும் பாண்டியன் வெளியே வருகிறார்.
அப்போது எப்பவும் உன் குடும்பம் கவுரவமான குடும்பம்னு சொல்லுவியே இப்போ உன் குடும்பமே சந்தி சிரிக்குது என்று சிரித்ததும் பாண்டியன் கடுப்பாகி கோபத்துடன் சக்திவேல் நெஞ்சிலேயே ஓங்கி மிதிக்கிறார். இதனை எதிர்பார்க்காத சக்திவேல் கீழே விழுந்து கிடக்க, தம்பியை மிதித்தும் முத்துவேல் கோபத்துடன் பாண்டியன் சட்டையை பிடிக்கிறார். குமாரும் சண்டைக்கு வர, செந்தில் கதிர் என எல்லோரும் அடி, பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது காந்திமதி இடையில் வந்து நெஞ்சு வலிக்கிறது நிறுத்துங்கள் என்று கத்துகிறார் இதனால் எல்லோரும் ஒதுங்கி இருக்கின்றனர். அப்போது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் எல்லாரும் என்ன ஆச்சு என்று கேட்க குயலி நடந்த விஷயங்களை எல்லாம் சொல்கிறார். இந்த பொண்ணுக்கு எங்க தம்பியை விட ரெண்டு வயசு அதிகம், பன்னிரண்டாம் வகுப்பு தான் படிச்சிருக்கா..
ஆனா காலேஜ் படிச்சிருக்கா என்று சொல்லி ஏமாத்தி கல்யாணம் பண்ணி இருக்கிறா.. அதுமட்டுமல்ல குழந்தை விஷயங்கள் ஏமாற்றி நாடகம் போட்டு இருக்கா என்று சொல்ல அவர்கள் எல்லோரும் மயிலை திட்டிக்கொண்டார். பிறகு தங்கமயில் அம்மா பாண்டியன் குடும்பத்திற்கு சாபம் விட்டுக்கொண்டு மயிலை அங்கிருந்து கூட்டிக்கொண்டு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்











Click it and Unblock the Notifications