பாண்டியன் ஸ்டோர்ஸ்: போலீஸிடம் மயில் சொன்ன பொய்! பாண்டியனிடம் பழனி கேட்ட கேள்வி! மீனா செய்த அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயிலிடம் ஸ்டேட்மெண்ட் வாங்குவதற்காக போலீஸ் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது அவர் அம்மா சொன்னது போலவே மயிலும் பொய் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் மீனாவை மட்டும் வழக்கில் சேர்க்காமல் தவிர்த்து இருக்கின்றனர். இதனால் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி குடும்பத்தினை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக சக்திவேல், முத்துவேல் இருவரும் முயற்சி செய்கின்றனர். ஏற்கனவே சக்திவேல் பாண்டியன் குடும்பத்தின் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லி மயிலின் அம்மாவிடம் சொல்லி இருந்தார். ஆனால் அவர் சொன்ன வார்த்தை இப்படி பழிக்கும் என்று அவர் நினைக்கவில்லை. இது குறித்து சக்திவேல் வருத்தப்பட்டு இருக்கிறார்.

பாண்டியனை உள்ளே தூக்கி வைத்து லாடம் கட்டுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் குடும்பத்தில் இருக்கும் பெண்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்களே என்று வருத்தப்பட்டு இருக்கிறார். இப்படியான நிலையில் இந்த விஷயத்தை பற்றி பழனியிடம் குமார் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார். பழனி போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புகிறார்.
அதை பார்த்து கோபமான சுகன்யா நீ ஏன்டா அவங்களை நினைத்து கவலைப்படுற என்று குமாரிடம் கேட்கிறார். அதற்கு அவர், வீட்டு ஆம்பளைங்களை உள்ள வச்சு லாடம் கட்டட்டும் சித்தி. ஆனா பொம்பளைங்க எல்லாம் பாவம். அதும் அத்தை, அரசி, ராஜி எல்லாரும் ஸ்டேஷன்ல இருக்காங்க என்று வருத்தப்பட்டு பேசுகிறார். அதனால் சுகன்யா இவங்க எல்லாம் என்ன மாதிரியான குடும்பமோ என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் பழனி ஸ்டேஷனுக்கு வரவும் தம்பியை பார்த்ததும் கோமதி கதறி அழுகிறார். அவரும் இந்த சின்ன பிள்ளைங்க எல்லாம் என்ன பண்ணுனாங்க என்று துடிக்கிறார். அரசி, ராஜி இருவரும் வந்து தோலில் சாய்ந்து அழ ஆரம்பிக்கின்றனர். அப்போது கோமதி உன் மச்சானை பாரடா.. எதுக்குமே கலங்காத ஆளு இப்ப எப்படி நிக்கிறாரு என்று சொல்கிறார்.
உடனே பழனி பாண்டியனை நோக்கி போய் போக, சரவணன் கடும் கோபத்துடன் இப்ப மட்டும் அவ என் கையில கிடைச்சா உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன் என்று கத்துகிறார். அவரை சமாதானம் செய்துவிட்டு மச்சானிடம் வந்த பழனி எதுவும் கவலைப்படாதீங்க என்று ஆறுதல் சொல்கிறார். தன்னை வீட்டை விட்டு துரத்திய பாண்டியனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் பழனி வந்து நின்றது பார்க்கும்போது அழகாக இருந்தது.
அப்போது அதுவரைக்கும் அமைதியா இருந்த பாண்டியன், என் பிள்ளைங்க சந்தோஷமா இருக்கணும்னு சொல்லி தானே கல்யாணம் பண்ணி வச்சோன். இப்போ பாரு நம்ம குடும்பத்தையே ஸ்டேஷன்ல நிற்க வெச்சி இருக்காங்க என்று புலம்புகிறார். அந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் வரவும் அவரிடம் மறுபடியும் பாண்டியன் பேசுகிறார். அதற்கு இன்ஸ்பெக்டர் உங்களை விசாரித்து அனுப்புவோம் சார் அடிக்கடி வந்து இப்படி கேட்டுட்டு இருக்காதீங்க என்று திட்டிவிட்டு போகிறார்.
மறுபக்கத்தில் மயில் ரூமில் இருக்கும் போது அவரிடம் போலீஸ் ஸ்டேட்மெண்ட் வாங்குவதற்காக வருகிறார்கள் என்று அவருடைய அம்மா வந்து சொல்கிறார். நான் சொன்னது மாதிரி சொல்லிரு இல்லன்னா இந்த வீட்டை விட்டு எங்கேயாவது போயிரு என்று மிரட்டி விட்டு போகிறார். இதனால் மயில் தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள சரவணன் குடும்பத்தை பற்றி பொய் குற்றச்சாட்டுகளை சொல்கிறார்.
புகுந்த வீட்டில் செய்த கொடுமையால் கரு கலைந்து விட்டதாக ஸ்டேட்மெண்டாக மயில் எழுதி கையெழுத்து போட்டு கொடுக்கிறார். செய்ததையும் செய்துவிட்டு போலீஸ் போனதும் இனியாவது என் வாழ்க்கை நல்லா இருக்கணும் என்று கடவுளையும் வேண்டிக் கொள்கிறார். மறுபக்கத்தில் மீனா ஆபீஸில் இருந்து பதறி அடித்து ஸ்டேஷனுக்கு வருகிறார். அங்கு ஒட்டுமொத்த குடும்பமும் அழுது கொண்டிருப்பதை பார்த்து அனைவருக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது தன் மீது மட்டும் ஏன் கம்ப்ளைன்ட் கொடுக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். கோமதியும் அதைப்பற்றியே கேட்க, அதற்கு மீனா நான் மயில் அக்கா வீட்டுக்கு போய் பார்த்தேன். கொஞ்சம் நாளைக்கு அமைதியா இருங்கன்னு சொல்லிட்டு வந்தேன் அதனால என் பெயரை சொல்லாம இருந்திருக்கலாம் என்று சொல்கிறார். அடுத்ததாக பாண்டியனிடம் மாமா வக்கீல் பார்க்கலாமா என்று கேட்கிறார்.
சிறகடிக்க ஆசை: சொத்துக்காக மனோஜ் செய்த காரியம்! வீட்டை விட்டு போன அண்ணாமலை! சிக்கும் ரோகிணி
அதற்கு பாண்டியன் என்ன புகார் என்று தெரிஞ்சா தானமா வக்கீல் கிட்ட பேச முடியும். எதுவுமே தெரியாம என்ன பண்ணுவது என்று கேட்கிறார். பிறகு மீனா வெளியே வரும் போது அவருடைய அப்பாவும் அங்கு வந்து விசாரிக்கிறார். அதேபோல முத்துவேலும் சக்திவேலும் வக்கீலிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications