பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயிலுக்கு வந்த சந்தேகம்! மீனா பற்றிய உண்மையை கண்டுபிடித்த செந்தில்.. இன்று செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial Feb 23 Episode) பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் 2026 பிப்ரவரி 23ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா போட்டு கொண்டிருக்கும் நாடகமெல்லாம் செந்திலுக்கு தெரிய வந்திருக்கிறது. அதை பற்றி நேரடியாகவே கேள்வி கேட்கிறார். மறுபக்கத்தில் சரவணன் மீது தங்க மயிலுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வார எபிசோடில் மீனா கொடுத்த ஐடியாவை வைத்து கோமதி பாண்டியனுக்கு சாப்பாடு கூட போட்டு கொடுக்காமல் அவரை தவிக்க விடுகிறார். அவருக்கு எந்த வேலையும் செய்யாமல் ஒதுங்கி நிற்கிறார் இதனால் பாண்டியன் கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் தங்கமயிலுக்கு வேலை வாங்கி கொடுக்கக் கூடாது என்று செந்தில் சொன்ன பிறகும் அதை மீறி மீனா தங்கமயிலுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் (Pandian Stores 2 serial today episode) ஆரம்பத்தில் கோமதி மீனாவுக்கு போன் பண்ணி உங்க மாமா நைட்டு எதுவுமே சாப்பிடல, நீ சொன்னது மாதிரியே நானும் செஞ்சேன். அதனால அவர் ரொம்ப வருத்தமாக இருக்கிறார் என்று சொன்னதும், அதற்கு மீனா அவர் ஒரு நாள் சாப்பிடல என்றால் எதுவும் ஆகாது என்று சொல்ல, அதற்கு கோமதி அவர் பாவம் என்று சப்போர்ட் பண்ணுகிறார்.
அதற்கு மீனா, அவர் உங்களை கஷ்டப்படுத்தினவர் தானே? அனுபவிக்கட்டும்.. நீங்க அவர் பின்னாடி கெஞ்சிக்கிட்டே இருந்தா அவர் இப்படித்தான் பிகு பண்ணுவாரு. அவர் மீண்டும் உங்ககிட்ட பேசணும்னா நீங்க கண்டுக்காம இருந்தா மட்டும்தான் முடியும் என்று அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருக்க, இதையெல்லாம் செந்தில் கேட்டு விடுகிறார் .
முதலில் இவ யாருகிட்ட இப்படி பேசிட்டு இருக்குற என்று யோசிக்கிறார். பிறகு கோமதியிடம் தான் மீனா பேசுகிறார் என்று புரிந்து கொள்ளும் செந்தில் இப்படி அட்வைஸ் கொடுத்து எங்க அப்பா அம்மாவை பிரித்து வைத்துருவா போல என்று மனதிற்குள்ளே சொல்லிக் கொள்கிறார். அந்த நேரத்தில் மீனா போனை கட் பண்ண அங்கு வந்த செந்திலைப் பார்த்து அதிர்ச்சி ஆகிறார்.
செந்தில் கண்டுபிடித்த உண்மை
அப்போது செந்தில் மீனாவிடம் நீ எங்க குடும்பத்தின் மொத்த கண்ட்ரோலையும் எடுத்துட்டியா? யார் என்ன செய்ய வேண்டும் என்று நீ தான் எல்லாருக்கும் பிளான் போட்டு கொடுத்துட்டு இருக்கியா என்று கேட்க, உங்க அப்பா உங்க அம்மாவிடம் பேசாம அலையவிட்டாரு அதனாலதான் அவரை வழிக்கு கொண்டுவர இப்படி செஞ்சேன் என்று சொல்ல, நீ என்கிட்ட செஞ்ச மாதிரி எங்க அம்மாவுக்கும் அட்வைஸ் கொடுக்குற... ஆனா எங்க அப்பா என்ன மாதிரி கிடையாது என்று சொல்கிறார். அதையும் பார்க்கலாம் என்று மீனா சவால் விடுகிறார்.
மீனா கொடுத்த பதிலடி
அதைத்தொடர்ந்து ராஜியிடம் கோமதி தனக்கு அட்வைஸ் கொடுத்ததெல்லாம் மீனா தான் என்று சொல்ல, அதற்கு ராஜி அதானே பார்த்தேன் உங்களுக்கு இப்படி எல்லாம் பேசவே தெரியாதே என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அரசி வீட்டு வாசலில் நிற்கும் போது குமார் எதிர் வீட்டில் இருந்து அரசியிடம் பேச முயற்சி செய்கிறார்.
ராஜியின் கிண்டல்
அந்த நேரத்தில் அங்கு வந்த ராஜி இதை பார்த்து இவன் என்ன பண்ணிட்டு இருக்கிறான் மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்த போறானா என்று மனதிற்குள் நினைத்து ராஜியை வீட்டிற்குள் கூட்டிக் கொண்டு போய் விடுகிறார். அப்போது குமார் சோகமாக இருக்க காந்திமதி வந்து என்ன விஷயம் என்று விசாரிக்கிறார்.
குமார் வருத்தம்
அதற்கு குமார் நான் மிகப்பெரிய முட்டாள் அப்பத்தா என்ன மாதிரி யாராலும் இருக்க முடியாது. நான் பழி வாங்குகிறேன் என்ற பெயரில் அரசியை ரொம்ப காயப்படுத்திட்டேன். அவ என்கூட இருக்கும்போது அருமை தெரியல ஆனா இப்ப நான் அவளை ரொம்ப மிஸ் பண்றேன். எனக்கு இந்த கல்யாணத்தில் கொஞ்சம் கூட விருப்பமே இல்ல.. ஏதாவது ஒரு சூழ்நிலையில் அரசியை கல்யாணம் பண்ற மாதிரி வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தங்க மயிலுக்கு சந்தேகம்
அடுத்ததாக மயில் சரவணனுக்கு தன்னுடைய தங்கச்சி போனில் இருந்து ட்ரை பண்ணி பார்க்கிறார். அந்த பக்கத்தில் சரவணன் அவருடைய முன்னாள் காதலி அஞ்சலியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் புது நம்பரில் இருந்து கால் வர யார் என்று அட்டென்ட் பண்ணி பார்க்கும் போது மயில் நான்தான் பேசுறேன் என்று சொன்னதும் கோபப்பட்டு போனை கட் பண்ணி விடுகிறார். ஆனால் மயிலுக்கு இவர் இந்த நேரத்தில் யாரிடம் இவ்வளவு நேரமா பேசிட்டே இருக்கிறார் என்ற சந்தேகம் வருகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications