பாண்டியன் ஸ்டோர்ஸ்: சக்திவேலுக்கு தெரிந்த உண்மை.. கர்ப்பமான மயில்! சரவணன் சொன்ன விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 பிப்ரவரி 27ஆம் தேதிக்கான எபிசோடில், குமார் கல்யாணம் நிற்பதற்கு யார் காரணம் என்ற உண்மை சக்திவேலுக்கு தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் தங்கமயில் கர்ப்பமாக இருப்பது போல அறிகுறிகள் இருக்கிறது. அதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில் கோவிலில் சரவணன் கூட வந்த பொண்ணு யாரு என்று மீனா சரவணனிடம் கேட்க, அதற்கு சரவணன் அது என்னுடைய பிரண்டு தான் ஆனால் என்னுடைய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கக்கூடிய உரிமை எனக்கு இல்லையா என்று கேட்டிருந்தார். இதனால் மீனாவிற்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோடு
அதைத்தொடர்ந்து இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், வீட்டிற்குள் மீனா வரும்போது கோமதி காய்கறி வெட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது கோமதியுடன் சென்று மீனாவும் பேசிக் கொண்டிருக்கிறார். கோமதி குமாரின் கல்யாணம் நின்னு போன விஷயம் தெரியுமா என்று கேட்க, அதற்கு மீனா ஆமா தெரியும் ராஜி சொல்லி வருத்தப்பட்டா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பாண்டியன் ரியாக்ஷன்
அந்த நேரத்தில் பாண்டியன் வீட்டிற்குள் வர அவரை பார்த்ததும் மீனா அவரிடம் பேசுகிறார். பிறகு பாண்டியன் கிளம்பும் போது மீனாவிடம் சொல்லிக்கொண்டு திரும்புகிறார் ஆனால் கோமதி கண்டுகொள்ளாதது போலவே இருக்கிறார். கோமதியை பார்த்ததும் இன்னைக்கு கொஞ்சம் மார்க்கமா இருக்காளே என்று பாண்டியன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு கிளம்புகிறார்.
பழனி சொன்ன விஷயம்
பாண்டியனை கோமதி கண்டு கொள்ளாமல் இருப்பதை பார்த்ததும் மீனா கோமதியிடம் சூப்பர் என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து குமார் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார். அப்போது அங்கு வந்த பழனி உனக்கு கல்யாணம் நின்னு போனது நினைச்சு வருத்தம் இல்லையா என்று கேட்க, நான் வருத்தப்படவில்லை என்று குமார் சொன்னதும் இந்த கல்யாணம் நின்னு போனதுல இன்னொருதங்களும் சந்தோஷப்பட்டாங்க என்று பழனி செல்கிறார்.
சக்திவேலுக்கு தெரிந்த உண்மை
யாரு என்று குமார் கேட்க, உனக்கு கல்யாணம் நின்ன விஷயத்தை கேள்விப்பட்டதும் அரசி முகத்தில் ஒரு சந்தோஷத்தை பார்த்தேன் என்று பழனி சொல்கிறார். இதை கேட்டதும் குமாருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு இடையில் சக்திவேல் குமாருக்கு பார்த்த பெண்ணின் அப்பாவிடம் சென்று எதற்காக இந்த கல்யாணத்தை நிறுத்துனீங்க? யாரு எங்க குடும்பத்தை பற்றி தப்பா பேசினது என்று கேட்கிறார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உங்களுடைய அம்மா தான் இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி சொன்னது என்ற உண்மையை சொல்லிவிடுகிறார். இதனால் சக்திவேல் கோபத்தில் வீட்டிற்கு வருகிறார். இங்கே பழனியும் குமாரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களிடம் அப்பத்தாவை எங்க என்று கத்தி கேட்க மொத்த குடும்பமும் என்னாச்சு என்று வருகின்றனர்.
விஜய்யை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? ஜூலியை கடுமையாக விமர்சித்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்
அப்போது அப்பத்தாவிடம் எதற்காக என் பையன் கல்யாணத்தை நிறுத்தின என்று சக்திவேல் சண்டை போடுகிறார். அதற்கு அப்பத்தா இந்த கல்யாணத்தில் குமாருக்கு விருப்பமில்ல அதனாலதான் நிறுத்தினேன் என்று சொல்கிறார் மறுபக்கத்தில் மயில் மீனாவின் தோழி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கர்ப்பமான தங்கமயில்
அந்த நேரத்தில் அவருக்கு திடீரென வாந்தி வருகிறது, பிறகு தலை சுற்றுகிறது. அதனால் அவர் யோசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அங்கு இருக்கும் வயசான பெண் நீ மாசமா இருக்கியா என்று கேட்க, அதற்கு தங்கமயில் அப்படி எல்லாம் இல்லை என்று சொல்கிறார். ஆனாலும் அவருக்கு நாள் தள்ளி போனது நினைவிற்கு வருகிறது. பிறகு சரவணனுக்கு ஃபோன் செய்ய சரவணன் போனை எடுத்து நீ என்னை நிம்மதியாக இருக்க விட மாட்டியா எதற்காக என்னை போன் பண்ணி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்க என்று திட்டி போனை வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர் -
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications