பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: கோமதி நறுக்குன்னு கேட்ட கேள்வி! ஆடி போன பாண்டியன்.. உடையும் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial episode ) பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 2026 மார்ச் 18 ஆம் தேதிக்கான எபிசோடில், இதுவரைக்கும் பாண்டியனிடம் கேட்காமல் மனதிற்குள்ளே வைத்திருந்த அனைத்து கேள்விகளையும் கோமதி இன்று தைரியமாக கேட்டிருக்கிறார். கோமதி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பாண்டியன் வீட்டை விட்டு ஓடி போயிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குடும்பத்துக்குள் பதட்டத்தை அதிகரிக்கும் விதமாக முக்கிய திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. கோமதி கோவிலுக்கு சென்ற விஷயத்தை மறைத்து, அவர் காணாமல் போனதாக காந்திமதி நாடகம் ஆடியது பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
கோமதி கேட்ட கேள்வி
கோமதி இரவு வீட்டிற்கு வந்ததும், அவரை பார்த்த பாண்டியன் கடும் கோபத்தில் திட்டுகிறார். இதனால் வீட்டில் நிலைமை மோசமடைந்து, கோமதிக்கும் பாண்டியனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த விவாதத்தின் போது, கோமதி தனக்கு இருக்கும் கோபத்தை எல்லாம் கொட்டுகிறார். தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் மகளின் நிச்சயதார்த்தம் குறித்து முடிவு எடுத்தது, மேலும் குழலியின் திருமண விஷயத்திலும் தனக்கு உரிமை அளிக்காதது குறித்து பாண்டியனிடம் கேள்வி கேட்கிறார்.
அதிர்ச்சியில் பாண்டியன்
கடைசியாக இனிமேல் தானாக வந்து பேசமாட்டேன், தன்னை யாரும் தேட வேண்டாம் என சொல்லிவிட்டு கோமதி அறைக்குள் போய் விடுகிறார். மறுபுறம், பாண்டியனும் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி கடைக்குச் போகிறார். அங்கு சரவணனிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, கோமதி மனதில் வைத்திருந்த விஷயங்களை இப்போது வெளிப்படுத்தியதாக வருத்தப்படுகிறார். சரவணன் சமாதானப்படுத்த முயன்றாலும், பாண்டியன் அமைதியாக இல்லை.
எல்லோருக்கும் தெரிந்த உண்மை
இந்நிலையில் வீட்டில் முக்கியமான உண்மை வெளிவருகிறது. கோமதி, தன் அம்மா காந்திமதியிடம் நான் கோயிலுக்கு போகும் விஷயத்தை சொல்லிவிட்டு போனதாக சொல்ல, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இதனால், கோமதி காணாமல் போனதாக கூறப்பட்டது காந்திமதி திட்டமிட்டு செய்த நாடகம் என்பது தெரியவருகிறது.
காந்திமதி சொன்ன விஷயம்
அரசி மற்றும் ராஜி உள்ளிட்டோர் இதற்கான காரணத்தை கேட்க, பாண்டியனும் கோமதியும் மீண்டும் சேர வேண்டும் என்பதற்காக தான் இப்படி நாடகம் போட்டதாக காந்திமதி சொல்கிறார். ஆனால் அவர் போட்ட திட்டம் எதிர்பார்த்தபடி அமையாமல், மாறாக குடும்பத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
பாண்டியன் எடுக்கும் முடிவு
மறுபுறம், பாண்டியன் தனது மகன்கள் கதிர் மற்றும் செந்தில் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். தன்னை குற்றம் சாட்டி பேசியதற்காக அவர்கள் மீது விரக்தியுடன் பேசுகிறார். நாளைக்கானா எபிசோடில் பாண்டியன் கதிர் மற்றும் செந்திலிடம் அவர்களுடைய பிசினஸ்க்காக கொடுத்த 10 லட்சம் ரூபாயை திருப்பி கேட்க போகிறார் இதனால் அடுத்த பஞ்சாயத்து வரப்போகிறது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications