பாண்டியன் ஸ்டோர்ஸ்: போலீஸிடம் கோமதியின் அண்ணன்கள் சொன்ன உண்மை! சிக்கிய பாக்கியா! அதிர்ச்சியில் பாண்டியன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 1ஆம் தேதிக்கான எபிசோடில், கோமதி குடும்பத்திற்காக அவருடைய அண்ணன்கள் போலீஸிடம் உண்மைகளை சொல்லி இருக்கின்றனர். அதே நேரத்தில் மயில் அம்மா போட்ட நாடகத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரியான கேள்விகளை கேட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத கதைகளம் தான் வந்திருக்கிறது. இதுவரைக்கும் பாண்டியன் குடும்பம் தான் எனக்கு எதிரி என்று சொல்லிக் கொண்டிருந்த கோமதியின் அண்ணன்கள் இப்போது பாண்டியன் குடும்பத்திற்காக துணைக்கு வந்திருக்கின்றனர். அதாவது இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், மயில் சோகமாக உட்கார்ந்து இருக்கும் போது அவருடைய அம்மா வந்து எல்லாம் சரியா போகும் என்று டீ கொடுத்துவிட்டு போகிறார்.

அந்த நேரத்தில் மீனா மயிலுக்கு போன் செய்ய போனை மயிலின் அம்மா எடுத்து பேசுகிறார். அப்போது நீங்க இப்படி கம்ப்ளைன்ட் கொடுத்ததால குடும்பமே கஷ்டப்பட்டது என்று சொல்ல, என் பொண்ணை கஷ்டப்படுத்தினவங்க கஷ்டப்படணும் என்று வில்லியாக பேசுகிறார். அதற்கு மீனா நீங்க இப்படி கம்ப்ளைன்ட் கொடுத்தா அவங்க எப்படி மயில் அக்காவை மீண்டும் வீட்டுக்குள்ள சேர்த்துவாங்க என்று சொல்லி கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்க சொல்கிறார்.
அதற்கு மயில் அம்மா நான் கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கணும்னா நீ உங்க மாமா கிட்ட சொல்லி விவாகரத்து நோட்டீஸை கேன்சல் பண்ண சொல்லு என்று மிரட்டுகிறார். பிறகு உன் மேல மட்டும் தான் நான் கம்ப்ளைன்ட் கொடுக்காம இருக்கிறேன், உன் மேலேயும் கம்ப்ளைன்ட் கொடுக்க வைத்து விடாதே என்று திட்டிவிட்டு பாக்கியா போனை கட் பண்ணி விடுகிறார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மீனா தவித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் கோமதியின் அண்ணன்களான சக்திவேல் முத்துவேல் இருவரும் வக்கீலிடம் பேசிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் பாண்டியனை விசாரணை செய்வதற்காக இன்ஸ்பெக்டர் கூப்பிடுகிறார். அவர் வீட்டில் நடந்த விஷயங்களை எல்லாம் சொல்கிறார்.

என்னுடைய பையனுக்காக நான் கல்யாணம் செய்த போது அந்த பொண்ணு வீட்டில் இருந்து தான் 80 பவுன் நகை போடுறேன்னு சொன்னாங்க. நாங்க நகையை பற்றி பேசவே இல்ல. அப்புறம் படிப்பு விஷயத்தில் ஏமாத்திட்டாங்க. நான் வேலையெல்லாம் வாங்கி கொடுத்தேன். ஆனால் கடைசி வரைக்கும் அவங்க உண்மையை சொல்லல அதனாலதான் என் பையனுக்கு இவ்வளவு வெறுப்பாகிடுச்சு என்று எல்லா உண்மைகளையும் சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து கோமதி, ராஜி, அரசி எல்லாரிடமும் விசாரணை நடக்கிறது. கடைசியாக சரவணனிடம் விசாரணை செய்யும் போது சரவணன் என்னை குழந்தை விஷயத்துல கூட ஏமாத்திட்டா.. இனி அவ கூட என்னால வாழவே முடியாது. அவளை வேண்டாம்னு சொல்றது நான் தான். என்னை வேணும்னா நீங்க ஜெயிலில் போட்டுக்கோங்க, ஆனால் வீட்டில் இருக்கிற எல்லாரையும் அனுப்பிடுங்க என்று கண் கலங்கி அழுகிறார்.
Vijay TV Pugazh: தந்தை இறப்பு குறித்து உருக்கமாக பதிவு போட்ட விஜய் டிவி புகழ்.. குவியும் கமெண்ட்ஸ்
பிறகு இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் முத்துவேலிடம் விசாரணை செய்கின்றனர். அப்போது முத்து வேலும், சக்திவேலும் எங்களுக்கு இதுவரைக்கும் எதிரியா இருந்த ஒரே ஆளு பாண்டியன் தான். ஆனால் அந்த பாண்டியன் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கொடுமைப்படுத்துற அளவுக்கு கெட்டவன் கிடையாது. ஆனால் அந்த பொண்ணோட குடும்பம் நல்ல குடும்பம் கிடையாது.

மயில் அப்பா எங்க வீட்டிலேயே திருடி மாட்டி இருக்கிறான். ஏமாற்றி தான் அவங்க பொண்ணை பாண்டியன் குடும்பத்துல கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க என்று எல்லா உண்மைகளையும் சொல்கிறார்கள். அடுத்ததாக மயிலின் அம்மாவிடமும் விசாரணை நடத்த அவர் என் பொண்ணு 12 ஆம் வகுப்பு தான் படித்திருக்கிறா.. இரண்டு வயசு பெரிய பொண்ணுன்னு சொல்லி தான் கல்யாணம் முடிச்சு கொடுத்தோம் என்று பொய் சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: போலீஸிடம் மயில் சொன்ன பொய்! பாண்டியனிடம் பழனி கேட்ட கேள்வி! மீனா செய்த அதிரடி
அதற்கு இன்ஸ்பெக்டர் நீங்க பன்னிரண்டாம் வகுப்பு படிச்ச பொண்ணுன்னு சொன்ன பிறகா அவங்க டீச்சர் வேலை வாங்கி கொடுத்தாங்க? என்று மிரட்ட, அதற்கு பாக்கியம் நீங்க அந்த குடும்பத்தோட சேர்ந்து பேசாதீங்க மேடம்.. என் பொண்ணோட வாழ்க்கைக்கு வழி சொல்லுங்கள் என்று அழுது நடிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications