பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதையே மாறி போச்சு.. அப்போ வில்லி மயில் இல்லை, இவரா? ஏமாறும் பாண்டியன் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 22ஆம் தேதிக்கான எபிசோடில் மயில் கடைக்கு வந்து பிரச்சனை செய்த விஷயம் கோமதிக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் கோமதி கோபத்தில் இருக்கிறார். மறுபக்கத்தில் பாண்டியன் வீட்டிற்கு கோமதியின் அண்ணன்கள் விருந்துக்கு வர சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலின் இன்றைய எபிசோடில் கோமதியின் அண்ணன்கள் தன்னுடைய வீட்டிற்கு வரமாட்டேன் என்று சொன்னதும் வாசலில் நின்று அழுது கொண்டிருக்கிறார். அண்ணன்கள் எனக்காக வந்து நின்றதும் சந்தோஷப்பட்டு விருந்துக்கு கூப்பிட வந்தேன் ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்று புலம்பி கொண்டிருக்கும் போது பாண்டியன் சரவணனும் கடையிலிருந்து வருகின்றனர்.
கோமதி அவருடைய அண்ணன் வீட்டு வாசலில் நிற்பதை பார்த்து பாண்டியன் ஒரு நிமிடம் யோசிக்கிறார். பிறகு கோமதி கண்ணீரோடு நிற்பதை பார்த்து கடுப்பாகி வீட்டிற்குள் போகிறார். பின்னாடியே வந்த கோமதி பாண்டியனிடம், நமக்காக அண்ணனுங்க வந்து நின்னாங்க, அவங்களை விருந்துக்கு அழைக்கணும்னு ஆசைப்பட்டேன் அதுக்காகத்தான் அந்த வீட்டுக்கு போனேன்.

வந்ததுக்கு அப்புறம் உங்ககிட்ட சொல்லிக்கலாம் என்ற நினைத்தேன் என்று சமாதானம் செய்கிறார். அப்போது மீனா அவங்க என்ன சொன்னாங்க என்று கேட்கிறார். அதற்கு அவங்க வரமாட்டேன் என்று சொல்லிட்டாங்க என கோமதி சோகமாக சொல்கிறார். உடனே பாண்டியன் அவங்க நமக்காக வந்து நின்றது எல்லாம் உண்மைதான், நாளைக்கு அவங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா நாமளும் போய் நிற்கலாம்.
அதற்காக இதை வைத்துக்கொண்டு இரண்டு குடும்பமும் சேருவது எல்லாம் சரியா வராது. அதற்காக இனி முயற்சி பண்ணாத என்று சொல்கிறார். அதை தொடர்ந்து சரவணன் மயில் கடைக்கு வந்த விஷயத்தை பற்றி சொல்கிறார். இதனால் கோமதி கோபம் ஆகிறார். அவளுக்கு எவ்வளவு திமிரு, இருந்தால் கடைக்கு வந்திருப்பா... நம்மளை நிம்மதியா இருக்க விடமாட்டாளா என்று கத்துகிறார்.
அதற்கு பாண்டியன் நான் இனிமேல் அந்த பிள்ளையை வரக்கூடாதுன்னு சொல்லிட்டேன் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடு என்று சொல்கிறார். மறுபக்கத்தில் காந்திமதி சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க, முத்து வேலும் சக்திவேலும் சாப்பிட கூப்பிடுகின்றனர். அதற்கு காந்திமதி எனக்கு பசிக்கல என்று சமாளிக்கிறார்.
அதற்கு சக்தி வேல் யம்மா உன் மகன் வீட்டு விருந்துக்கு போகணுமா என்று கேட்க, அதற்கு காந்திமதி ஆமா அதுல என்ன தப்பு இருக்கு? எனக்காக இந்த ஒரு ஆசையை மட்டும் நிறைவேற்றி வைங்க என்று செண்டிமெண்டாக பேசுகிறார். உடனே முத்துவேல் பழனியிடம் நாம நாளைக்கு மதியம் அவங்க வீட்டுக்கு சாப்பிட வர்றோம் என்று காலையில் சொல்லிடு என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.
இதை கேட்டு சக்திவேல் எரிச்சல் ஆகிறார். மறுநாள் காலையில் பழனி கோமதி வீட்டிற்கு வந்து அண்ணன்கள் விருந்துக்கு வர்ற விஷயத்தை சொல்கிறார். அதனால் சந்தோஷமாக கோமதி அங்கேயும் இங்கேயும் துள்ளிக் கொண்டிருக்கிறார். என்ன சமைப்பது என்று ஆர்வத்தோடு ஆசையாக கடைக்கு போய் பொருட்கள் வாங்க போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications