Pandian Stores: பாண்டியன் வீட்டுக்கு போய் சக்திவேல் செய்த பிரச்சனை, சிண்டு முடிந்த சுகன்யா! அதிர்ச்சியில் கோமதி
சென்னை: (Pandian Stores 2 serial today episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 23ஆம் தேதிக்கான எபிசோடில் பாண்டியன் வீட்டிற்கு விருந்து சாப்பிடுவதற்காக கோமதியின் அண்ணன்கள் வந்திருக்கின்றனர். அப்போது என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கோமதி தனக்கு உதவியதற்கு அண்ணன்களுக்கு விருந்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக அண்ணன்களின் வீட்டிற்கு போய் தன்னுடைய ஆசையை சொன்னார். ஆனால் அண்ணன்கள் அங்கெல்லாம் வர முடியாது என்று சொல்லி விட்டனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
இதனால் காந்திமதி தன்னுடைய மகன்களிடம் எனக்காக இந்த ஒரு ஆசையை மட்டும் நிறைவேற்றி வைங்க என்று மகள் வீட்டுக்கு போவதற்கு மகன்களை செண்டிமெண்ட் அட்டாக் செய்திருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோமதி தன்னுடைய அண்ணன்கள் வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்ற உச்சகட்ட சந்தோஷத்தில் வீட்டில் அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று பரபரப்பாக இருக்கிறார்.
கோமதியின் அண்ணன் பாசம்
பிறகு செந்தில் மீனாவுக்கு போன் பண்ணி அவர்களையும் வீட்டிற்கு வர சொல்கிறார். எல்லோரும் வந்ததும் வீட்டில் தடபுடலாக சமையல் ரெடி பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராஜி சோகமாக இருக்க சரவணன் என்னம்மா அப்பா வராங்கன்னு ஒரே ஹாப்பியா இருக்க என்று கேட்கிறார். அந்த நேரத்தில் கோமதி தன்னுடைய அண்ணன்களுக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று யோசித்து யோசித்து சமையல் செய்து கொண்டிருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மகன்கள் அலப்பறை
கோமதி செய்வதை பார்த்து செந்திலும் கதிரும் கிண்டல் அடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது செந்தில் கதிரிடம் உன் மாமனார் வந்தால் கூட பரவாயில்லை, ஆனால் சின்ன மாமனார் தான் ஏதாவது பேசி குட்டைய கிளப்பிடுவார்னு பயமாயிருக்கு என்று சசொல்ல அதற்கு கதிர் எனக்கும் அதுதான் சந்தேகமாக இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் சக்திவேல் இப்படியே போனா இந்த வீட்டில் நமக்கு மதிப்பே இல்லாமல் போய்விடும். கோமதி குடும்பத்தில் இருந்து ஒவ்வொரு ஆளுங்களா வர ஆரம்பிச்சிட்டாங்க என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அண்ணன் முத்துவேல் அங்கு வந்ததும் அவரிடம் எனக்கு அந்த வீட்டுக்கு சப்பிட போறது சுத்தமா பிடிக்கல அண்ணே.. பிரிஞ்சது பிரிஞ்சதாகவே இருக்கட்டும் என்று சொல்கிறார்.
சீரியலில் திருப்பம்
அதற்கு முத்துவேல் எனக்கும் அங்க போறது பிடிக்கல அம்மாவுக்காக தான் போயிட்டு வருவோம். வெறும் விருந்து மட்டும் தான், அதோட நமக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்கிறார். அடுத்ததாக காந்திமதியின் மொத்த குடும்பத்தினரும் பாண்டியன் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களை பாண்டியனும் அவருடைய குடும்பமும் வீட்டு வாசலுக்கு வந்து வரவேற்று வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு போகின்றனர்.
அப்போது ராஜி அப்பாவை கட்டிப்பிடித்து கண் கலங்குகிறார். ஆனால் சக்திவேல் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார். வீட்டிற்கு வந்தவர்களுக்கு கோமதி பாணாகரம் கொண்டு கொடுக்கிறார் அதை குடித்துப் பார்த்த பழனி, அக்கா பாணாகரம் அருமையாக இருக்கு பேசாம மச்சான் கடை பக்கத்திலேயே ஒரு கடையை போட்டு உட்கார்ந்து விடு என்று சொல்கிறார்.
அதற்கு கடுப்பான சக்திவேல் நம்ம குடும்பத்துல பொம்பளைங்க வேலைக்கு போக விட்டு யாருடா உட்கார்ந்து சாப்பிடுவது என்று பாண்டியனை குத்தலாக பேசுவது போல பேசுகிறார். அதற்கு பாண்டியன் நான் கல்யாணம் முடிஞ்ச நாளிலிருந்து கடைப்பக்கமே அவளை வர விடாமல் தான் வைத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சிறகடிக்க ஆசையில் இன்று செம சம்பவம்.. கோர்ட்டில் ரோகிணி சொன்ன விஷயம்! மீனாவுக்கு அதிர்ச்சி! பாயிண்டை பிடித்த நீதிபதி
அந்த நேரத்தில் சுகன்யா என்ன அத்தாட்சி விருந்து தடபுடலாக ரெடி பண்ணி வச்சிருக்கீங்க போல என்று கேட்க, அதற்கு கோமதி ஏன் நீ இந்த வீட்டு பக்கமே வரல என்று கேட்கிறார். உடனே சுகன்யா நீங்கதான் என் புருஷனை வீட்டு பக்கம் வரக்கூடாதுன்னு சொன்னீங்க. அவருக்கு மரியாதை இல்லாத இடத்தில் நான் எப்படி இருக்க முடியும் என்று கேட்டேன் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது பழனி இங்கிருந்து போற வரைக்கும் அண்ணனும் சுகன்யாவும் அமைதியாக இருந்தால் போதும் எல்லாமே சரியா நடக்கும் என்று மனதிற்குள்ளேயே யோசித்து கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications