பாண்டியன் ஸ்டோர்ஸ்: நல்லது செய்ய போன மீனாவை மாட்டிவிட்ட பாக்கியம்! கோபத்தில் கோமதி சொன்ன வார்த்தை! செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக மீனா எடுத்த முயற்சி அவருக்கே பிரச்சனையாக போயிருக்கிறது கடைசியில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

மயிலுடன் கோவிலுக்கு செல்லும் பாக்கியம்
இன்றைய எபிசோடில் மீனா, தங்கமயிலுக்கு போன் செய்து கோவிலுக்கு வரச் சொல்கிறார். முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறி மயிலை கோவிலுக்கு வரச் சொல்கிறார். அந்த நேரத்தில் பாக்கியம் இந்த விஷயத்தை ஒட்டுக்கேட்டு விடுகிறார்.
அதன்பின்னர் தங்கமயில் கோவிலுக்கு கிளம்பும் போது "நானும் வரேன்" என்று சொல்லி பாக்கியமும் அவருடன் கிளம்புகிறார். மறுபக்கத்தில் மீனா தனது அத்தை கோமதியை கோவிலுக்கு அழைத்து வந்து அவருடன் சாமி கும்பிட்டு கொண்டிருக்கிறார். அப்போது கோமதி, "ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னியே, என்ன விஷயம்?" என்று கேட்கிறார். அதற்கு மீனா "கொஞ்சம் காத்திருங்க" என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு வெளியே செல்கிறார்.
ஷாக் ஆன மீனா
கோவிலுக்கு வெளியே வந்த மீனாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தங்கமயில் தனது அம்மாவான பாக்கியத்தையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்திருப்பதை பார்த்ததும் மீனா ஷாக் ஆகிறார்.
"எதுக்கு மயிலு உங்க அம்மாவை அழைச்சிட்டு வந்த?" என்று மீனா கேட்கிறார். அதற்கு பாக்கியம், "ஏன்? நான் என் பொண்ணோட கோவிலுக்கு சாமி கும்பிட வந்தா உனக்கென்ன?" என்று பதில் கூறுகிறார்.
அதன்பின்னர் வேறு வழியின்றி மீனா போட்டுருக்கும் பிளானை பற்றிய உண்மையை சொல்லிவிடுகிறார். அதைக் கேட்ட பாக்கியம், "நான் வந்து பேசுனா என்ன ஆகிடப்போகுது?" என்று கேட்கிறார். அதற்கு மீனா, "நீங்க வந்தா பிரச்சனை தான் வரும்" என்று கூறுகிறார்.
சண்டை போடும் கோமதி - பாக்கியம்
அதன்பிறகு தங்கமயில் மீனாவை மட்டும் அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் செல்கிறார். அங்கு இருந்த கோமதி, தங்கமயிலை பார்த்ததும் மிகவும் கோபப்படுகிறார். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கூட கேட்காமல் அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்கிறார். அதோடு மீனாவையும் அதிகமாக திட்டுகிறார். இவ நமக்கு செஞ்ச துரோகத்தை எல்லாம் நீ மறந்துட்டியா? இவ கூட சுத்திகிட்டு இருக்கிற.. இவ பேச்சைக் கேட்டு நீ என்னை இங்க வர வச்சிருக்க என்று கோபத்தில் திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியமும் அங்கே வந்துவிடுகிறார்.
அதன்பிறகு கோமதி மற்றும் பாக்கியம் இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட, தங்கமயிலும் மீனாவும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் கடைசியாக மீனாதான் உங்ககிட்ட பேசணும்னு சொல்லி எங்கள, வர சொன்னது என்ற உண்மைகளையும் பாக்கியம் சொல்லி விடுகிறார். இதனால் கோமதி கடும் கோபத்தில் நிற்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications